Saturday, September 6, 2025

 ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமாவளி 12

ஓம் நம்சிவாய:

ஸிவதாஸன் ஜகன்நாதன்

சனிக்கிழமை, செப்டம்பர், 9, 2025


அனைவருக்கும் வணக்கம். இன்று நாம் அம்பாளின் பன்னிரெண்டாவது திவ்ய நாமத்தைப் பார்ப்போம். இந்த நாம்மும் அம்பாளின் மூன்றாவது ஸ்லோகத்திலே ய வருகின்றது 

நாம் இது நாள் வரை அன்னையின் திரு அவதாரம் பற்றிப் பார்த்தோம்.இனி வரும் நாமாவளிகளில் அம்பாளின் ரூப லாவண்ய அழகினைக் காணப்பகின்றோம்

இந்த பன்னிரண்டாவது நாமாவளி அம்பாளே இந்த ப்ரபஞ்சமுழுவதும் தானேயாகவாகி சிறந்த ஒளிமயமாக                       மிளிர்வதை விளக்குகின்றது

12. நிஜாருணப்ரபாபூரமஜ்ஜத் ப்ரஹ்மாண்டமண்டலா  

நிஜ அருண நிரந்தரமான சிவப்பு          

ப்ரபா  ஒளிர்தல் ,ப்ரகாஸம்                                                                                     

பூரா முழுவதும்                                                                                                  

மஜ்ஜத் மூழ்குதல்                                                                                     

ப்ரம்மாண்ட                                  மிகவும் பரந்து விரிந்த                

மண்டலா இந்தப்ரபஞ்சம்

இந்த அண்ட ஸராசரங்களினாலான ப்ரபஞ்சம்                                         முழுவதையும் தனது செந்நிற ஒளிப்ரவாஹத்தினால்                                               மூழ்கி விளங்கி இருக்கச்செய்பவள்.                                                           ப்ரபஞ்சத்தையே தன்னுடைய செந்நிற                                                                                  ஒளி வடிவமாகக் கொண்டு மிளிர்பவள்

இந்த நாமத்திலிருந்து, லலிதாம்பிகையின் மொத்த ரூப லாவண்ய விளக்கம் தொடங்குகிறது. ஒரு ஆண் கடவுளின் உடல் விளக்கம் செய்யப்படும்போது, அது கால் முதல் தலை வரை மற்றும் பெண் தெய்வங்களுக்கு அது தலை முதல் கால் வரை இருக்கும். 

லலிதாம்பிகைக்கு, விளக்கம் அவளுடைய தலையிலிருந்து தொடங்குகிறது. சிவனைப் பொறுத்தவரை, விளக்கங்கள் அவரது தலையிலிருந்தும் அவரது கால்களிலிருந்தும் வருகின்றன, ஏனெனில் அவர் சிவன் மற்றும் சக்தி இருவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் (அர்த்தநாரீஷ்வர வடிவம், சிவனும் சக்தியும் ஒரே வடிவத்தில் இணைந்து, பாதி ஆண் மற்றும் பாதி பெண், செங்குத்தாக இணைந்துள்ளனர்). 

இந்த நாமாவளி அம்பாளைத் தவிர ப்ரபஞ்சம் என்பது வேறொன்று இல்லை.அம்பாளின் வடிவமே இந்தப் ப்ரபஞ்சம் என்பதே இந்த நாமத்தின் பொருளாகும்

இத்துடன் இன்றைய பதிவை நிறைவு செய்கிறேன் .நாளை பதிமூன்றவது நாமாவளியின் விளக்கமோடு சந்திப்போம் 

                                                                                                                                                          இந்த பதிவுகள் அனைத்தையும் இதனுடனே ஒலி வடிவமாவும் தினம் மேலும் விளக்கமாகத் தந்து வருகிறேன். அவசியம் அதையும் கேட்டு அம்பாளின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்.

நன்றி. வணக்கம்.                                                                                                    ஓம் நம்சிவாய:

ஸிவதாஸன் ஜகன்நாதன்

சனிக்கிழமை, செப்டம்பர், 9, 2025


No comments:

Post a Comment