Sunday, September 7, 2025

 


ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமாவளி 13

ஓம் நமசிவாய:

ஸிவதாஸன் ஜகன்நாதன்

ஞாயிறு, 7, செப்டம்பர், 2025

அனைவருக்கும் வணக்கம். இன்று நாம் அம்பாளின் பதிமூன்றாவது திவ்ய நாமத்தைப் பார்ப்போம். இந்த நாமம் அம்பிகையின் நாலாவது ஸ்லோகத்தில் வருகிறது . இந்த நாமம் அம்பாளின் வடிவழகினை உச்சந்தலையிலிருந்து விவரிக்கத் தொடங்குகிறது.

முமுதலில் இன்று நாலாவது ஸ்லோகத்தின் விளக்கத்தினைத்தந்துவிட்டு பின்னர் இன்றைய பதிமூன்றாவது நாமாவளியின் விளக்கத்தினைப் பார்ப்போம்

இந்த ஸ்லோகம் இரண்டு நாமங்களை கொண்டுள்ளது.அவைகள் அம்பாளின் மின்னும் கேசத்தில் அணிந்துள மலர்களியும் ,அம்பால் தன் உச்சியிலே அணிந்துள்ள ம்குட்த்தைப் பற்றியும் விவரிக்கின்றன.

அம்பாளின் கேசத்திலே அணிந்துள்ள பல மலர்களில் குறிப்பிட்ட நாங்கு மலர்கள் பற்றி மட்டுமே இங்கு விவரிக்க்ப்படுகின்றது.

 

4) சம்பகாஸோக புன்னாக ஸௌகந்திக லஸத்கஸா                                      குருவிந்த மணிஸ்ரேணீ கனத்கோடீர மண்டிதா || 4 ||

சம்பகா

ஷண்பகம்

அஸோகா

அசோகம்

புன்னாக

புன்னாகம்

சௌகந்திக

சௌகந்திகம் போன்ற மலர்களால்

லஸத்

மின்னும்

கசா

கேஸத்தினை உடையவள்

குருவிந்தமணி

னவரத்னக் கற்களால்

ஸ்ரேணி

ஸரம்

கனத்

பள பளக்கும்

கோடீர

உச்சி மகுடம்

மண்டிதா

அலங்கரிக்கப் பட்டுள்ளவள்

 

 

 

ஜண்பகம்,அசோகம்,புன்னாகம்,சௌகந்திகம் என்ற அன்னைக்குப்ரியமான் மலர்களை கூந்தலில் அணிந்து விளங்குபவள் குருவிந்த மணி என்னும் பத்மராக மனிகளின் கோர்வையால் ப்ரகாசிக்கும் க்ரீடத்தை அணிந்து மிளிர்பவள்

 

இந்த பதிமூன்றாவது நாமாவளி அம்பாஅளின் தலை முடியை அலங்கரிக்கும் மலர்களைப் பற்றி விவரிக்கின்றது.

சம்பகாஶோக புந்நாக ஸௌகந்திக லஸத் கசா 

சம்பக === ஷன்பக மலர்                                                                                        அஸோக === அசோக புஷ்பம்                                                                              புன்ன === புன்னை மலர்                                                                                                  நாக === விருக்ஷிப் பூ                                                                                                  லஸத் === மின்னும்                                                                                                              கசா === கேசம்

சாம்பக, அசோக, புன்னாக, சௌகந்திகா  ஆகிய நான்கு வகையான மணம் கொண்ட மலர்கள் அவளுடைய மின்னும் தலைமுடியை  அலங்கரிக்கின்றன.

ஆனால் இந்த மலர்களால் அவளுடைய  தலைமுடிக்கு மணம் வராது, அதேசமயம் இந்த மலர்கள் அவளுடைய   தலைமுடியிலிருந்து மணம் பெறுகின்றன.                                                                                                      அவளுடைய தலைமுடி எப்போதும் இனிமையான மணம் கொண்டதாக இருக்கும்.

சௌந்தர்ய லஹரி (பாடல் 43), கூறுகிறது,   "உன் அடர்த்தியான, மற்றும் மென்மையான கூந்தல், பூத்த நீல தாமரைகளின் குழுவைப் போன்றது,

அந்த அடர்ந்த கூந்தல்  நம் அறியாமையை நீக்குகிறது. " ஈரம் அவளுடைய இரக்கத்தையும் மென்மையும் அவளுடைய தாய்மையையும் குறிக்கிறது.

துர்வாச ரிஷி (துர்வாச முனிவர்) தனது 'சக்தி மஹிம்னா'வில் தனது இதய சக்கரத்தில் அவளுடைய மணம் கொண்ட முடியை தியானிக்கிறார்.

இந்த விளக்கங்களுக்குப் பின்னால்  உள்ள கருத்துஎன்னவென்றால்,   அவளுடைய தலைமுடி  அறியாமையை விரட்ட முடியும்   (பிரம்மத்தை உணர்ந்து கொள்வதில் அறிவு உயர்ந்ததாகக் கருதப்படுகிறது),

 அவளுடைய முழு வடிவம் அவளுடைய பக்தர்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதை விளக்குகிறது.

இந்த நான்கு மணம் கொண்ட மலர்கள்,                                                  அந்தாக்கரணத்தின் நான்கு ஏமாற்றும் கூறுகளான மனம், புத்தி, உணர்வு மற்றும் அகங்காரத்தைக் குறிக்கின்றன.


இத்துடன் இன்றைய பதிவை நிறைவு செய்கிறேன் .நாளை பதிநாலாவது நாமாவளியின் விளக்கமோடு சந்திப்போம்

                                                                                                                                                          இந்த பதிவுகள் அனைத்தையும் இதனுடனே ஒலி வடிவமாவும் தினம் மேலும் விளக்கமாகத் தந்து வருகிறேன். அவசியம் அதையும் கேட்டு அம்பாளின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்.

நன்றி. வணக்கம்.                                                                                                                  ஓம் நமசிவாய:

ஸிவதாஸன் ஜகன்நாதன்

ஞாயிறு, 7, செப்டம்பர், 2025


No comments:

Post a Comment