ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமாவளி 17 மற்றும் 18
ஓம்நம்சிவாய:
ஸிவதாஸன்
ஜகன்நாதன்
புதன்,10,செப்டம்பர்,2025
அனைவருக்கும்
வணக்கம். இன்று நாம் அம்பாளின் ஆறாவது ஸ்லோகத்தையும் பதினேழு மற்றும் பதினெட்டான இரண்டு திவ்ய நாமங்களைப்
பார்ப்போம். இந்த நாமங்கள் அம்பிகையின் புருவ அழகையும், கண்களின் லாவண்யத்தையும் விவரிக்கின்றன்.
இந்த இரனடு
நாமாவளிகளுமே அம்பாளின் ஆறாவது ஸ்லோகத்தில் வருகின்றன.இந்த ஸ்லோகம் அம்பாளின் புருவங்க்ளின்
அழகையும் அவளின் துள்ளிவிளையாடும் மீன்ப்ஓன்ற கண்களின் அழகையும் விவரிக்கின்றன.
6)வதனஸ்மர மாங்கல்ய க்றுஹதோரண
சில்லிகா |
வக்த்ரலக்ஷ்மீ பரீவாஹ சலன் மீனாபலோசனா || 6 ||
வதன |
அழகிய முகத்தை |
ஸ்மர |
த்யானித்தல் / கவனித்தல் |
மாங்கல்ய |
மங்களமான |
க்ரஹ |
வீடு |
தோரண |
வாசலை அலங்கரிக்கும்
தோரணம் |
ஸில்லிகா |
புருவம் |
வக்த்ர |
முகம் |
லக்ஷ்மி |
லக்ஷ்மிக்குரிய |
பரிவாஹ |
நீர்னிலை |
சலன் |
நகர்தல் |
மீனாப |
மீனை ஒத்த |
லோசனா |
அழகிய விழிகளைக் கொண்டவள் |
மதன் வாழும் மங்கல இல்லத்திற்கு இணையான முகத்திற்கு தோரணங்கள்
போன்ற புருவங்களை உடையவள். முகத்தின் அழகு வெள்ளத்தில் துள்ளும் மீன்களைப் போல உள்ள
கண்களை உடையவள்
17. வதநஸ்மர மாங்கல்ய க்ருஹதோரண சில்லிகா
வதந === முகம் ஸ்மர === த்யானித்தால், கவனித்தால்
மாங்கல்ய === மங்களமான க்ரஹ === வீட்டின் வாசலை அலங்கரிக்கும் தோரணம் சில்லிகா === புருவம்
அவளுடைய முகம் மன்மதனின் (காதலின் கடவுள் - மன்மதன்) அரண்மனையுடன்
ஒப்பிடப்படுகிறது, மேலும்
அவளுடைய புருவங்கள் அவரது வீட்டை அலங்கரிக்கும் மலர் அலங்காரங்களுடன்
ஒப்பிடப்படுகின்றன. சிலிகா என்றால் புருவங்கள் என்று பொருள். மன்மதன்
லலிதாம்பிகையின் முகத்தைப் போலவே ஒரு மங்களகரமான அரண்மனையைக் கட்டியதாகக்
கூறப்படுகிறது.
18. வக்த்ர லக்ஷ்மீ பரீவாஹ சலந் மீநாபலோசநா
வக்த்ர === முகம், வதனம் லக்ஷ்மீ === லக்ஷ்மிக்குரிய
பரிவாஹ === நீர்னிலைகள், குளங்கள்
சலன் === நகர்கின்ற, நீந்துகின்ற
மீனாப === மீங்களைப் போன்ற
லோசனா === இரு விழிகளைக் கொண்டவள்
அவளுடைய கண்கள் ஒரு குளத்தில் நகரும் மீன்களைப் போலத்
தோன்றும். அவளுடைய முகம் ஒரு குளத்திற்கும், அவளுடைய கண்கள்
மீன்களுக்கும் ஒப்பிடப்படுகின்றன. மீன்கள் மிக விரைவாக நகரும். அவள் முழு
பிரபஞ்சத்தின் மீதும் தனது அருளைப் பொழிய வேண்டியிருப்பதால், அவள் கண்களை விரைவாக நகர்த்துகிறாள். தாய் மீனின் பார்வையால் மீன்
முட்டைகள் மீன் குஞ்சுகளைப் பொரிக்கின்றன. அதேபோல், அவள்
தனது பார்வையால் பிரபஞ்சத்தை வளர்க்கிறாள். அவளுடைய கண்களின் அழகின் காரணமாக அவள்
மீனாக்ஷி, மினலோசனி, முதலியன என்றும்
அழைக்கப்படுகிறாள்.
அம்பாள் சதா சர்வகாலமும் இந்த ப்ரபஞ்சத்தின் ஜீவராசிகளை காக்கும்
காரணமாக தன் விழிகளை மீனைப்போல எல்லாத்திசைகளிலு அலைபாய நகர்த்திக்கொண்டிருக்கின்றாள்.
இத்துடன் இன்றைய பதிவில் இரண்டு
நாமாவளிகளின் வர்ணனையை நிறைவு செய்கிறேன் .நாளை பத்தொன்பதாவது நாமாவளியின் விளக்கமோடு சந்திப்போம்
இந்த பதிவுகள் அனைத்தையும் இதனுடனே ஒலி வடிவமாவும் தினம் மேலும் விளக்கமாகத் தந்து வருகிறேன். அவசியம் அதையும் கேட்டு அம்பாளின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்.
நன்றி. வணக்கம்.
ஓம்நம்சிவாய:
ஸிவதாஸன்
ஜகன்நாதன்
புதன்,10,செப்டம்பர்,2025
No comments:
Post a Comment