Saturday, September 20, 2025

 


ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமாவளி 29

ஓம் நமசிவய:                                                                                                                சிவதாஸன் ஜகன்நாதன்                                                                                           சனி, 20, செப்டம்பர், 2025

அனைவருக்கும் வணக்கம். இன்று நாம் அம்பாளின் இருபத்து ஒன்பதாவது  திவ்ய நாமத்தைப் பார்ப்போம். இந்த நாமம் அம்பிகையின் தாடையையும் அதன் அழகால்  எப்படி அம்பாள் பரமேஸ்வரரின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகிறாள் என்பதையும் அழகாக விவரிக்கின்றது.

இந்த நாமம் அம்பாளின் பன்னிரெண்டாவது ஸ்லோகத்தில் வருகின்றது

அநாகலித ஸாத்ருஶ்ய சிபுக ஶ்ரீவிராஜிதா  

 

அநாகலித

மதிப்பிட முடியாத, ஒப்பிட முடியாத                             

ஸாத்ருஷ்ய,                                                                                  

தோற்றம் சாயை

சிபுக

தாடை                                                                                                  

ஶ்ரீவிராஜிதா

அழகுடன் அமைந்திருத்தல்

  

சிந்தனைக்கும், கற்பனைக்கும் அப்பார்ப் பட்டதான அழகுடன் அம்பாளின் தாடை அமைந்துள்ளது.

பொதுவாக புதிதாக ஒரு பொருளை விளக்குவதற்கு நன்கு தெரிந்த மற்றொருபொருளை உதாரணம் காட்டுவோம்.ஆனால் அம்பாளின் முக லாவண்யத்தையும் அழக்கையும் உவமை காட்ட எந்தபொருளும் இல்லை. இதை நான் என்னுடைய குரல் விளக்கத்தில் தந்துள்ளேன் கேளுங்கள்

அவளுக்கு மிக அழகான தாடை இருக்கிறது. சவுந்தர்ய லஹரி (பாடல் 67) கூறுகிறது, " மலையரசன் நீங்கள் குழந்தையாய் இருந்தபோது தொட்டுத்  தாங்கி கொஞ்சிய உங்கள் அழகான தாடையை சிவபெருமான் காதலுடன் உங்கள் இதழ்த் தேனருந்த முத்தமிட விழையும் போது அவர் கையின் முன்பகுதியால் தொடப்படும் உங்கள் ஒப்பற்ற தாடை, உங்கள் கீழ் உதட்டின் அமிர்தத்தை குடிக்கும் ஆர்வத்தால் அடிக்கடி உயர்த்தப்படுகிறது."என்று கூறுகிறது

அம்பாளி கழுத்துக்கு மேற்பட்ட பகுதியின் வ்ர்ணனை 13வது நாமாவளில் தொடங்கி இந்த 29 வது நாமாவளியினுடன் முடிகிறது.

இத்துடன் இன்றைய பதிவினை நிறைவு செய்கிறேன் .நாளை முப்பதாவது நாமாவளியின் விளக்கமோடு சந்திப்போம்

                                                                                                                                                          இந்த பதிவுகள் அனைத்தையும் இதனுடனே ஒலி வடிவமாவும் தினம் மேலும் விளக்கமாகத் தந்து வருகிறேன். அவசியம் அதையும் கேட்டு அம்பாளின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்.

நன்றி. வணக்கம்.                                                                                                                    ஓம் நமசிவய:                                                                                                                சிவதாஸன் ஜகன்நாதன்                                                                                                    சனி, 20, செப்டம்பர், 2025


 


No comments:

Post a Comment