தினம் ஒரு லலிதா
நாமம்----31
ஓம் நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
புதன், 24, செப்டம்பர், 2025
அனைவருக்கும்
வணக்கம். இன்று நாம் அம்பாளின் முப்பத்தொன்றாவது
திவ்ய நாமத்தைப் பார்ப்போம். இந்த நாமம் அம்பிகையின் கரங்களிலும் ,புஜங்களிலும் அணிந்துள்ள அழகான வளையல்களையும்,புஜத்தில் அணிந்துள்ள வங்கி என்னும் ஆபரணத்தைப் பற்றியும், வர்ணிக்கின்றது விளக்குகின்றது
இந்த நாமம் அம்பாளின் பதிமூன்றாவது ஸ்லோகத்தில் வருகின்றது
31 கநகாங்கத கேயூர கமநீய முஜாந்விதா: ।
கநங்க
|
தங்க |
அங்கத |
வளையல்கள் |
புஜ |
கரங்கள் |
கேயூர
|
புஜம், மேற்கையில் அணியும் வங்கி |
கமணீயம் |
ரம்யமான ,அழகான
|
அன்விதா |
அதனுடன் கூடிய |
அம்பாள் தன்னுடைய அழகான கரங்களில் தங்கத்திலான அழகிய வளையல்களை
அணிந்துள்ளாள்.மேற்கையான புஜத்திலும் தங்கத்திலான அழகான கேயுரம் என்னும் வங்கியை அணிந்துள்ளாள்.
கனகா -
தங்கம்; அங்கதா – வளையல்கள், கேயூரா என்பது மேல் கைகளில் அணியப்படும் ஒரு வகை ஆபரணம்,வங்கி. அவள் இந்த ஆபரணங்களை அணிந்திருக்கிறாள். ஒருவேளை, இது பின்வருவனவற்றைக் குறிக்கலாம். இந்த இரண்டு
ஆபரணங்களும் தங்கத்தால் ஆனவை மற்றும் கைகளில் அணியப்படுகின்றன. அவை வடிவத்தில்
வேறுபட்டாலும், இரண்டிலும் தங்கம் என்ற
மூலப்பொருள் ஒன்றுதான். உயிரினங்களின் வடிவங்கள் வேறுபட்டாலும், உள்ளார்ந்த பிரம்மம் அப்படியே உள்ளது.
இத்துடன் இன்றைய பதிவினை நிறைவு செய்கிறேன் .நாளை
முப்பத்து இரண்டாவது நாமாவளியின் விளக்கமோடு
சந்திப்போம்
இந்த பதிவுகள் அனைத்தையும் இதனுடனே ஒலி வடிவமாவும் தினம் மேலும் விளக்கமாகத் தந்து வருகிறேன். அவசியம் அதையும் கேட்டு அம்பாளின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்.
ஓம் நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
புதன், 24, செப்டம்பர், 2025
No comments:
Post a Comment