தினம் ஒரு லலிதா
நாமம்----33
ஓம் நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
,வெள்ளீ,26,
செப்டம்பர், 2025
அனைவருக்கும்
வணக்கம்.
இன்று நாம் அம்பாளின் முப்பத்து மூன்றாவது திவ்ய நாமத்தைப் பார்ப்போம். இந்த நாமம் அம்பிகையின் ஸ்தனங்களின் அழகையும்,பரமேஸ்வரரின் அன்புக்கு ஈடாக தன் அன்பை அம்பாள் எப்படி தனது ஸ்தன்ங்களின் மூலமாகத் தந்தருள்கிறாள்
என்பதையும் வர்ணிக்கின்றன.
இந்த நாமம் அம்பாளின் பதிநாலாவது ஸ்லோகத்தில் வருகின்றன
33 காமேஶ்வார ப்ரேம ரத்ந மணி ப்ரதிபண
ஸ்தனீ ।
காமேஸ்வர |
பரமேஸ்வரரின் |
ப்ரேம |
அன்பு, காதல்,ப்ரேமை
|
ப்ரதிபண |
மாற்றாக, ப்ரதியாக
|
ரத்ன மணி |
விலை மதிப்பில்லா ரத்ன்ங்களான |
ஸ்தனீ |
தன் இரண்டு மார்பகங்களை வழங்குகிறாள் |
காமேஸ்வரனின்
(சிவனின்) அன்பிற்கு ஈடாக அவள் தன் இரண்டு மார்பகங்களையும் அவருக்குக் காணிக்கையாக
அளிக்கிறாள். பரமேஸ்வரன் அம்பாளின் மேல் கொண்டுள்ள அன்பிற்கும் காதலுக்கும் அளவே இல்லை.அம்பாளும் அதற்கு ஈடாக அவருக்கு ஏதேனு தர விரும்புகிறாள். பரமேஸ்வரரிடம் இல்லாதது எதுவுமில்லை. எனவே அவரிடம் இல்லாததும் பெண்ணான தன்னிடம் மட்டுமே உள்ள தனது
மார்பகங்களை அவருக்குப் பரிசாக தந்து மகிழ்கிறாள்.
இதன்
நுட்பமான பொருள் என்னவென்றால், அவள் தன் பக்தர்களுக்கு அளிக்கும் பக்தியைப் போல இரு
மடங்கு ஆசீர்வாதங்களை வழங்குவாள்.
இத்துடன் இன்றைய பதிவினை நிறைவு
செய்கிறேன் .நாளை முப்பத்து
மூன்றாவது நாமாவளியின் விளக்கமோடு சந்திப்போம்
இந்த பதிவுகள் அனைத்தையும் இதனுடனே ஒலி வடிவமாவும் தினம் மேலும் விளக்கமாகத் தந்து வருகிறேன். அவசியம் அதையும் கேட்டு அம்பாளின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்.
நன்றி. வணக்கம் ஓம் நமசிவாய:
சிவதாஸன் ஜகன்நாதன்
வெள்ளீ,26, செப்டம்பர், 2025
No comments:
Post a Comment