தினம் ஒரு லலிதா
நாமம்----34
ஓம் நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
ஞாயிறு,28,
செப்டம்பர், 2025
அனைவருக்கும்
வணக்கம். இன்று நாம் அம்பாளின் முப்பத்துநாலாவது திவ்ய நாமத்தைப் பார்ப்போம். இந்த நாமம் அம்பிகையின் ஸ்தனங்களின் அழகையும்,அம்பாளின் அடிவயிற்றிலிருந்து மேலே
படரும் மெல்லிய அழகான ரோமம் ஒரு அழகிய கொடி போலவும் அம்பாளின் ஸ்தன்ங்கள் இரண்டும்
நல்ல கனிகள்போலவும் இருப்பதை விளக்குகின்றது.
இந்த நாமம்
அம்பாளின் பதிநாலாவது ஸ்லோகத்தில்
வருகின்றன
34.நாப்யாலவால ரோமாலி லதா பல குச த்வயீ।
நாப்யாலவால |
தொப்புள் கொடியிலிருந்து |
ரோமாலி |
முடி, ரோமம்
|
லதா |
கொடி
|
ஃபல |
பழங்கள், கனிகள்
|
குச |
மார்பகங்கள்
|
த்வயீ |
இரண்டும் |
அவளுடைய
இரண்டு மார்பகங்களும் அவளுடைய தொப்புளிலிருந்து தோன்றும் கொடியின் முடிவில் உள்ள பழுத்தபழங்கள் போல மிளிர்கின்றன. இந்த நாமத்தின் முக்கியத்துவம்
தொப்புள் மற்றும் இதய சக்கரங்களைப் பற்றியது. தொப்புள் சக்கரத்திலிருந்து
குண்டலினியை மேல்நோக்கி நகர்த்துவதன் மூலம் இதய சக்கரத்தை தியானிப்பது தியானத்தின்
பலனைத் தரும். தொப்புள் மணிபூரக சக்கரத்தைக் குறிப்பதாகும்.மார்பில் இதயப் பகுதிக்கு அருகில் உள்ளது அனாகதமாகும் .
சவுந்தர்ய
லஹரி (பாடல் 76) கூறுகிறது, "சிவனின் கோபத் தீயால்
பீடிக்கப்பட்ட அன்பின் கடவுள் உங்கள் தொப்புளில் தஞ்சம் புகுந்தார்."அம்பாள் துன்பத்தால் பீடிக்கப்பெற்றவர்கள்
அனைவரையும் தன் தாய்மை அன்புடன் அரவணைத்து அடைக்கலம் தருவாள் என்பதையே இந்த வசனம் குறிக்கின்றது
இத்துடன் இன்றைய பதிவினை நிறைவு செய்கிறேன் .நாளை
முப்பத்து ஐந்தாவது நாமாவளியின் விளக்கமோடு
சந்திப்போம்
இந்த பதிவுகள் அனைத்தையும் இதனுடனே ஒலி வடிவமாவும் தினம் மேலும் விளக்கமாகத் தந்து வருகிறேன். அவசியம் அதையும் கேட்டு அம்பாளின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்.
நன்றி. வணக்கம்.
ஓம் நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
ஞாயிறு,28, செப்டம்பர், 2025
No comments:
Post a Comment