Thursday, May 30, 2024

 

 

 

விபூதி திருமண்ணின் மகிமை

 

காஞ்சி மகா பெரியவா

 

தொகுப்பு :-  சிவதாஸன் ஜகன்நாதன்

 

 

விறகுக் கட்டையை அக்னியானது பஸ்பமாக்குவது போல், ஞானம் என்கிற அக்னி எல்லா கருமங்களையும் பஸ்பமாக்குகிறது’ என்று பகவத் கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார்.

பஸ்பமாகிய விபூதி, இவ்விதம் கர்மங்களை எரித்த பின் நிற்கும் ஞானத்திற்கே அடையாளம் ஆகும். விபூதி என்பதும் ஐஸ்வர்யம் என்பதும் ஒரே பொருள் தரும். எந்த பொருளையும் தீயிலிட்டால் முதலில் அது கருப்பாக ஆகும். பிறகு இன்னும் அக்னியுடன் போட்டால் நீற்றுப் போகும். சுத்த வெளுப்பாக ஆகிவிடும். அப்புறம் தீயில் போட்டால் அது மாறாது. அதுவே முடிவான நிலை. இப்படி நீற்றுப்போனதே திருநீறு. நீறு பஸ்மம் எனப்படும்.                                                             ஈஸ்வரன் மகாபஸ்பம். எல்லாம் அழிந்த பின்னும் எஞ்சி நிற்கிற அழியாத சத்தியமான மகாபஸ்மம் அவன்.

பஸ்மமாக நீற்று வெளுத்துப் போனதற்கு முந்திய மாறுதல் கருப்பு. அதுதான் கரி. நிலக்கரிதான் இவ்வுலக ஐஸ்வர்யத்தில் முதலிடம் பெற்றுள்ளது. ரொம்பவும் விலைமதிப்பான வைரமும் அதுதான். இந்த கரியாக மாறிய பொருளை விட மிகவும் உயர்ந்தது நீற்றுப்போன திருநீறு. திருநீற்றுக்கு மேலான பொருள் கிடையாது.

பல வண்ணங்களைக் கொண்ட பொருட்களை காண்கிறோம். ஆனால், இந்த வர்ணங்களை எல்லாம் வஸ்துவை எரித்த பின் மாறிவிடுகின்றன. எல்லாம் கடைசியில் வெளுத்துப் போய்விடும். நாம், ‘சாயம் வெளுத்து போய்விட்டது’ என்கிறோம். சாயம் என்பது வேஷம். வேஷம் போனபின் இருப்பதே மெய். மெய்யான ஆத்மாவின் தூய்மைக்கு அடையாளமாக இருப்பதே விபூதிதான்.

இதை, இந்த பொய்யான மெய் தேகம் முழுவதிலும் பூசிக்கொள்ள வேண்டும். எல்லாம் எரிந்த பின் எஞ்சி நிற்பது விபூதியின் வெண்மை ஒன்றுதான். மற்ற சாயம் எல்லாம் பொய் வெண்மையை உண்மை.

ஞானம் என்னும் தீ மூண்டபின் காரியங்கள் எல்லாம் பஸ்பமாகிவிடும்’ என்று ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா உபதேசித்ததில், பஸ்பம் ஆகிவிடும் என்றால் எல்லாம் அழிந்து, புத்தர் சொன்ன மாதிரி சூன்யம் ஆகிவிடும் என்று அர்த்தம் இல்லை. விறகு கட்டைகள் தீயில் எரிந்து போன பின் எல்லாமே சூன்யம் ஆகிவிடவில்லை. அப்போது எஞ்சி நிற்பது நீறு. அவ்வாறே ஞானம் என்னும் தீயில் கர்மாக்கள் யாவும் எஞ்சி நிற்கும். மிகுந்து நிற்பதே மகா பஸ்மமான பரமாத்மா.

விபூதியை தேகம் முழுவதும் பூசிக்கொள்ள வேண்டும். விபூதியை தரித்துக் கொள்வதினால் சகல ஐஸ்வர்யங்களையும் அடையலாம். பூத, பிரேத, பைசாச சேஷ்டைகளிலிருந்து காப்பாற்றும் பெரிய ரக்ஷையாக இருப்பது விபூதியே. வைஷ்ணவர்கள் திருமண் இடுவார்கள். துளசி செடியின் அடியில் உள்ள மண்ணை இட்டுக் கொள்வது வழக்கம்.

 

மண்ணை இட்டுக் கொள்வதும், திருநீறு இட்டுக் கொள்வதும் நமக்கு உயர்ந்த தத்துவத்தையே விளக்குகின்றன. மன்னனும் மாசறக் கற்றோனும் கடைசியில் பிடி சாம்பலாகத்தான் போகிறோம். வாழ்க்கை மாயமானது என்பதை விபூதி உணர்த்துகிறது.

 மண்ணிலே பிறந்த மரம் கடைசியில் மட்கி அதே மண்ணோடு மண்ணாகத்தானே ஆகிறது. நம்மை முடிவில் அடக்கிக்கொள்ளப் போகிற தத்துவம் அதுதான். இதை ஞாபகப்படுத்திக் கொள்ளவே நம்மில் சிலர் திருமண் அணிகிறோம்.

வில்வம் மகாலட்சுமி வசிக்குமிடம். பசுவும் மகாலட்சுமியின் வாஸ்து ஸ்தானம். விபூதி பசுவின் சாணத்தை அக்னியிலிட்டு பஸ்பமாக்குவதிலிருந்து உண்டாகிறது. பசுவின் சாணம் எல்லா துர்நாற்றங்களையும் போக்க உதவுகிறது. நமது உடல் பல துர்நாற்றங்களை உடையது. இந்த உடலை சுத்தப்படுத்துவதோடு, ஆத்மாவையும் பரிசுத்தப்படுத்த வல்லது பஸ்மமாகிய திருநீறு. மகா பஸ்மமான பரமாத்மாவும் விபூதியும் ஒன்றானபடியால் விபூதி அணிவதால் ஈஸ்வரர் சாக்ஷாத்காரம் ஏற்படும்.

திருநீறு, திருமண் இவற்றை தரிப்பது பரமாத்மா சொரூபத்தின் உண்மையையும் உலகில் உள்ள பொருட்களின் அநித்தியுமான நிலையையும் நினைவூட்டுகிறது.

காஞ்சி மகா பெரியவா ‘தெய்வத்தின் குரல்’ நூலிலிருந்து…

ஓம் நமசிவாய

பதிவு :-  சிவதாஸன் ஜகன்நாத

 

 

 

Trulicity (Dulaglutide)

This is a short and small presentation on the recently added hypoglycemi agent  DULAGLUTIDE from the GLP-1 Receptor antagonist group of drugs

Compiled by  Jagannathan

Trulicity is the trade name of dulaglutide, a type 2 diabetes medication 

                                                                                                                                           Trulicity is part of a class of drugs called GLP-1 receptor agonists 

 

Other GLP-1 receptor agonists include:

Exenatide)

Unlike most other GLP-1 receptor agonists, Trulicity is injected only once per week.

What is Trulicity?

Trulicity is a GLP-1 receptor agonist for people with type 2 diabetes.                                                                                                                                      It is not prescribed to people with type 1 diabetes 

Trulicity is prescribed when diet and exercise have failed to bring blood glucose levels under control.                                                                                                                                     It may also be prescribed instead of metformin, if metformin is unsuitable for you. Trulicity comes in dosages of 1.5mg and 0.75mg.

How does Trulicity work?

Like other GLP-1 receptors agonists, Trulicity works by stimulating the body’s natural production of insulin It also inhibits the release of glucagon and slows digestion.

                                                               
Trulicity also aids weight loss.

 

Again, this is similar to other GLP-1 receptor agonists. Trulicity is prescribed primarily to people who need to lower their blood glucose levels; the weight loss is an added benefit.

How do I take Trulicity?

Trulicity is taken in the form of injection                                                                                                 These injections are taken once per week.

Trulicity is usually packaged as pre-filled syringes.

Each syringe is to be used only once, for one injection.                                                                                                                                    Do not re-use a Trulicity syringe over more than one week.                                                        Throw the syringe away after use, even if there is some left over.

Trulicity should be injected on the same day of each week.                                                         If you can, try to inject it at roughly the same time of day, too                                                                 .                                                                              If you realise that you’ve missed an injectio, think how long there is until your next one. If there’s less than three days until your next injectio, leave it. If there’s more than three days, inject as soon as you realise.

You should never inject Trulicity twice within a three-day period.

Dosage

The initial dose is a single SC inj of 0.75 mgm once in a week                                                this can be increaded upto 4.5 mgm per wees maximum untill                                            a favourable response in blood sugar is achieved.

Trulicity can be combined with other hypoglycemic agents namely                                             Insulin                                                                                                                                            Biguanides like Metformin                                                                                                           Secretogogues like Glipizide,Gluburide Glimipride etc                                                                   Gliptins like Sitagliptin                                                                                                           SGLT 2 inhibitors like the Jardiace etc

Side effects of Trulicity

Common side effects of Trulicity include stomach pain, indigestion, diarrhoea and loss of appetite.                                                                                                                            If you experience rashes, difficulty in breathing, or swelling, you may be allergic to Trulicity. You should seek emergency medical help immediately.


If you feel any severe pain in your upperabd, vomiting, or tachycardia, this could be a sign of pancreatitis Speak to your doctor about this as soon as possible.

 

Other signs of serious aversion to Trulicity include swelling or a lump on your neck, low blood sugar– or signs of a kidney problem, such as painful urination and swelling in your feet or ankles. If you experience any of these, speak to your doctor as soon as possible.

Rest assured that serious aversions to Trulicity are rare. They are listed here only on the off-chance that they affect you. There’s no need to worry about them unduly.

Is Trulicity safe for pregnant women?

Trulicity is a relatively new drug, so little is known about its effects on pregnancy                   It’s unknown whether an unborn baby can be harmed if the mother takes Trulicity. Animal studies indicate that Trulicity can be harmful to babies, but no such studies have been conducted on humans.                                                                                                    Until the research is conducted, pregnant women are advised not to take Trulicity.

It’s also not known if Trulicity passes into breast milk. Until it is proven to be safe, mothers taking Trulicity are advised not to breast feed 

  

 

 


Wednesday, May 29, 2024

 

பஞ்சபூதத் தலங்கள் 

 சிவதாஸன் ஜகன்நாதன்

பஞ்சபூதத் தலங்கள் 

என்பவை நிலம்நீர்நெருப்புகாற்றுஆகாயம் எனும் பஞ்ச பூதங்களுக்கு உரிய சிவாலயங்களாகும்.                                                                    

இத்தலங்களில் மூலவராக உள்ள சிவலிங்கங்கள் பஞ்சபூதங்களின் பெயர்களாலேயே அழைக்கப்பெறுகின்றன. இத்தலங்கள் அனைத்தும் தென்னிந்தியாவில் அமைந்துள்ளன. உலகிலுள்ள அனைத்து உயிர்களும் பொருட்களும் பஞ்ச பூதங்களில் ஐந்தும் கலந்தோ அவற்றுள் சிலவற்றைக் கொண்டோ உருவாகி இருக்கும்.

பஞ்சபூதம் பெயர்க்காரணம்

பஞ்சம் என்பது ஐந்து என்ற எண்ணிக்கையைக் குறிக்கும். எடுத்துக்காட்டாகப் பஞ்சலோகம் என்பது 5 உலோகங்களின் கலவை எனலாம். இது போல முக்கியமான 5 கூறுகளினை 5 பூதங்கள் அல்லது பஞ்சபூதங்கள் என்பர். ஒவ்வொரு சிவத்தலமும் ஒரு வரலாறு காரணமாகவும், ஏதேனும் ஒரு தன்மையினாலும் அல்லது இயற்கையான நிலவரத்தினாலும் இப்பூதத்திற்குரிய கோயிலாக விளங்குகின்றன.

சிவத்தலங்கள்

பஞ்சபூதங்களுக்கு உரிய 5 சிவத்தலங்கள் பின்வருமாறு:

 

படிமம்

கோவில் பெயர்

குறிக்கும் பூதம்

லிங்கத்தின் பெயர்

இடம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் 

நிலம்

பிருத்வி லிங்கம்

காஞ்சிபுரம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் 

நெருப்பு

அக்னி லிங்கம் அல்லது ஜோதி லிங்கம்

திருவண்ணாமலை

திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்

நீர்

அப்பு லிங்கம் அல்லது ஜம்பு லிங்கம்

திருச்சி

சிதம்பரம் நடராசர் கோயில்]

ஆகாயம்

ஆகாச லிங்கம்]

சிதம்பரம்

திருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில்[1][6]

காற்று

வாயு லிங்கம்

திருக்காளத்தி

ஐந்து முக விளக்கும் தீபாராதனைகளும்

 

உலகத்தில் பஞ்ச பூதங்கள் ஐந்து. அவை நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம்.

உடலில் பஞ்ச பூதங்களும் ஐந்து. அவை மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை.

இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் பஞ்ச பூதங்கள் ஒளி பெற்றுச் சிறப்படைய வேண்டும் என்பதற்குக் கோவில் வழிபாடுகளில் ஐந்து முக விளக்குகள் ஏற்றுவதும், தீபாராதனைகளும் நடைபெறுகின்றன

 

பஞ்சபூதங்களாக விளங்கும் சர்வேஸ்வரை வணங்கி அவரின் பேரருள் பெற்றுய்வோமாக 

மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம்

ஓம் நமசிவாய: 

சிவதாஸன் ஜகன்நாதன்