ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமாவளி -66 -67
சனி, 18, அக்டோபர், 2025
ஓம்நமசிவாய:
சிவதாஸன் ஜகன்நாதன்
அனைவருக்கும் வணக்கம்.
இன்று நாம் அம்பாளின் அறுபத்து ஆறு, மற்றும் அறுபத்து ஏழாவது திவ்ய நாமாவளிகளைப் பற்றிப்பார்ப்போம்
இன்று பண்டாசுர வதத்துக்காக புறப்படத் தயாராக உள்ள அம்பாளின் படைகளின் விவரங்களையும் விளக்கங்களையும் காணப் போகின்றோம். இன்று அம்பாளின் யானை மற்றும் குதிரைப் படைகளின் விளக்கங்களைப் பார்ப்போம்.
இந்த நாமாவளிகள் அம்பாளின் இருபத்து ஐந்தாவது ஸ்லோகத்தில் வருகின்றன.
66. ஸம்பத்கரீ ஸமாரூட ஸிந்துர வ்ரஜ ஸேவிதா
ஸம்பத்கரி === ஷக்தி சேனையின் தலைவி
ஸமாரூட === ஏறி அமர்ந்திருத்தல்
சிந்தூர === யானை
வ்ரஜ === மந்தை கூட்டம்
ஸேவிதா === சேவை செய்திருத்தல்
சம்பத்கரி தலைமையிலான யானைக் கூட்டங்களால் அவள் வழிபடப்படுகிறாள்.
தேவி தன் சக்திகளையே தன் சேனையாக்கினாள். க்ரோதம்,ஞானம் என்ற இரண்டின் வடிவமான அங்குசத்திலிருந்து ஒரு சக்தியை தோற்றுவித்து அவளை யானைப்படையின் தலைவியாக்கினாள்’ அவளே சம்பத்கரி,எனும் செல்வத்தை அருள்பவள். யானை செல்வத்தின் சின்னம். லக்ஷ்மியுடன் இணைந்த்து.கஜ லக்ஷ்மியையை வணங்குவது செலவத்தைப் பெருக்கும். சம்பத்கரியின் தலைமையில் யானைப் படை உள்ளது. லலிதா தேவியின் அங்குசமே சம்பத்கரியாகத் தோன்றியதால் யானைப் படை அவளுக்குக் கட்டுப்படுவதில் வியப்பொன்றுமில்லை. புலன்களே யானைகளாக விவரிக்கப்படுகின்றன. புலன்களை அடக்க குரோதம் எனும் குணத்தில் உருவான அங்குசம் உதவுகிறது.
லலிதாயை பீஜக்ரோமுடன் தியானித்தால், தியானிப்பவர் விரும்பும் அனைத்தையும் பெறுவார். இதை ஆன்மீக உணர்தலின் உயர்ந்த நிலைக்கு முன்னேற்றம் என்றும் விளக்கலாம்.
67அஶ்வா ரூடா திஷ்டிதா ஶ்வ கோடி கோடி பிராவ்ருʼதா
அஶ்வாரூடா === குதிரையில் ஏறி அமர்ந்திருத்தல்
திஷ்டிதா === அமைந்திருத்தால
ஶ்வகோடி === கோடிக்கணக்கில்
கோடி ==== உயர்வுடைய
பிராவ்ருʼதா === சூழப்பட்டிருத்தல்
அஸ்வாரூடா தேவி தலைமையிலான படையில் பல கோடிக்கணக்கான குதிரைகள் லலிதாதேவியைச் சூழ்ந்துள்ளன, அவரைப் பற்றி நாம் 8 ஆம் நாமத்தில் விவாதித்துள்ளோம். அஸ்வாரூடா தேவி போரில் பயன்படுத்தப்படும் குதிரைகளில் தலைவி. இந்த தேவியின் முகமும் ஒரு குதிரையைப் போலவே தெரிகிறது.
இந்த அஸ்வாரூடாவை அம்பாள் தனது பாஸம் எனும் ஆயுத்த்தில் இருந்து படைத்தாள். அஸ்வாரூடாவின் குதிரை அபராஜிதா எனப்படும் அதன் பொருள் யாராளும் வெல்லமுடியாதவளாகும்
இந்த கணக்கிலடங்கா குதிரைகள் ஒரு மனதின் கோடிக்கனக்கான எண்ணங்களையும் பொறிகளையும் குறிக்கின்றன. மனம் எனும் அஸ்வாரூடாதேவி இந்த கணக்கற்ற எண்ணங்களையும் பொறிகளையும் அடக்குகிறாள்
புலன்கள் குதிரைகளுடன் ஒப்பிடப்படுகின்றன, ஏனெனில் அவை கட்டவிழ்த்து விடப்பட்டால் வேகமாகவும் கட்டுப்பாட்டின்றியும் ஓடுகின்றன. மனம் மட்டுமே புலன்களைக் கட்டுப்படுத்த முடியும் என்பதால் மனம் குதிரையின் தந்திரி
இத்துடன் இன்றைய பதிவினை நிறைவு செய்கிறேன் .நாளை அறுபத்து எட்டாவது நாமாவளியின் விளக்கமோடு சந்திப்போம் இந்த பதிவுகள் அனைத்தையும் இதனுடனே ஒலி வடிவமாவும் தினம் மேலும் விளக்கமாகத் தந்து வருகிறேன். அவசியம் அதையும் கேட்டு அம்பாளின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்.
நன்றி. வணக்கம்.
சிவதாஸன் ஜகன்நாதன்
ஓம் நமசிவாய:
சனி, 18, அக்டோபர், 2025
No comments:
Post a Comment