தினம்
ஒரு லலிதா நாமம்----46
ஓம்
நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
திங்கட் கிழமை, அக்டோபர், 6 ,2025
அனைவருக்கும்
வணக்கம்.
இன்று நாம் அம்பாளின் நாற்பத்து ஆறாவது திவ்ய நாமத்தைப் பார்ப்போம். இந்த நாம்ம் அம்பிகையின் பாதங்களின் அழகையும் பற்றியும்,,அந்தக் கால்களில் அம்பாள் அணிந்துள்ள
கொலுசு பற்றியும் அவைகளின் உண்மைத் தத்துவத்தையும் விவரிக்கின்றன. இந்த நாமம் அம்பாளின் பத்தொன்பதாவது ஸ்லோகத்தில் வருகின்றது
46. ஶிஞ்ஜாந மணி மஞ்ஜீர மண்டித ஶ்ரீபதா
ம்புஜா:
ஸிஞ்ஜான |
கிண்கிணி என ஒலி எழுப்பும் |
மணி |
முத்து மணிகள், ரத்தினங்கள்
|
மஞ்ஜீர |
கொலுசு
|
மண்டித |
அழகூட்டும்
|
அம்புஜா |
தமரையை போன்ற
|
ஸ்ரீ பத |
மேன்மையான பாதங்கள் |
அம்பாள் விலைமதிப்பற்ற ரத்தினங்களால் ஆன கொலுசுகளை
அணிந்திருக்கிறாள்.
அம்பாளின் மேன்மையான தாமரையை போன்ற அழகிய பாதங்களை முத்துக்களாலும் ரத்தின்ங்களாலும் கிண்கிணி என்று ஒலி எழுப்பும் அழகிய கொலுசுகள் மேலும் அழகூட்டி அலங்கரிக்கின்றன
42 முதல் 46 வரையிலான ஐந்து நாமங்கள் அவளுடைய பாதங்களைப் பற்றி மட்டுமே
விவரிக்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவளுடைய பாதங்கள் மட்டும்
இவ்வளவு விரிவாக விவரிக்கப்படும்போது, அவளுடைய சக்திவாய்ந்த வடிவத்தைப் பற்றி சிந்திப்பது மனித புரிதலுக்கு
அப்பாற்பட்டது. அவளுடைய பிரகாச விமர்சன மஹா மாயா ஸ்வரூபிணி வடிவத்தைப் பற்றி
ஈர்க்க வாக் தேவிகளால் இது அவ்வாறு செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் இன்றைய பதிவினை நிறைவு செய்கிறேன் .நாளை
நாற்பத்து ஏழாவது நாமாவளியின் விளக்கமோடு சந்திப்போம்
இந்த பதிவுகள் அனைத்தையும் இதனுடனே ஒலி வடிவமாவும் தினம் மேலும் விளக்கமாகத் தந்து வருகிறேன். அவசியம் அதையும் கேட்டு அம்பாளின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்.
நன்றி. வணக்கம்.
ஓம்
நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
திங்கட் கிழமை, அக்டோபர், 6 ,2025
No comments:
Post a Comment