தினம்
ஒரு லலிதா நாமம்----47
& 48
ஓம்
நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
செவ்வாய்க் கிழமை, அக்டோபர், 7 ,2025
அனைவருக்கும்
வணக்கம்.
இன்று நாம் அம்பாளின் நாற்பத்து ஏழாவது
மற்றும் நாற்பத்து எட்டாவது திவ்ய நாமங்களைப் பார்ப்போம். இந்த நாமங்கள் அம்பிகையின் நளினமான நடையழகையும் அழகின் நளின
லாவண்யத்தையும் அதன் உண்மைத் தத்துவத்தையும் விவரிக்கின்றன. இந்த நாங்கள் அம்பாளின் இருபதாவது ஸ்லோகத்தில் வருகின்றது
47. மராலீ மந்த கமநா
மராலீ |
அன்னப்பறவை |
மந்த |
மெதுவான,மென்மையான
|
கமனா |
நடையழகு |
அம்பாளுடைய நடையழகு ஒரு
பெண் அன்னத்தின் நளினமான நடையைப் போன்றது. அம்பாள் அக்னி குண்டத்திலிருந்து (நாமம் 4) வெளியே வந்து தெய்வங்களை நோக்கி நடக்கும்போது, அவளுடைய நடை இவ்வாறு
விவரிக்கப்படுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், அவளுடைய நடையை அன்னங்களின் நடையுடன்
ஒப்பிட முடியாது, ஏனெனில் அவளுடைய நடை எதனுடனும் ஒப்ப்டமுடியாத பெருமையுடையது. அவளுடைய
நடையைப் பற்றி ஒரு விளக்கம் கொடுக்க இதுபோன்ற காட்சி ஒப்பீடுகள் செய்யப்படுகின்றன.
சவுந்தர்ய லஹரி (பாடல் 91) கூறுகிறது, "ஓ! அழகான நடையின் தெய்வமே! உங்கள்
வீட்டு அன்னங்கள், தங்கள் கால்களைத் தடுமாறும் நடையுடன் சமநிலைப்படுத்தப் பயிற்சி செய்வதை
சரிசெய்து நடக்கப் பழகுவதுபோல உங்கள் னடையின் நளினத்தை அவைகளுக்குக் காட்டி அவைகள்
நடப்பதற்கு பழக்கி அவைகளைக் கைவிடாதீர்கள்."
இதன் விளக்கம்
என்னவெனில் இந்த ப்ரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயர்வான பொருள்களும் அம்பிகையின் பேரருளுக்கு
முன்னால் எதுவும் உயர்வானதில்லை என்பதாகும்.
இந்த
நாமத்துடன் பஞ்சதசியின் சக்தி கூடத்தின் நுட்பமான விளக்கம் முடிகிறது.
48. மஹா லாவண்ய ஶேவதி
மஹா |
மஹத்துவம் பொருந்திய
|
லாவண்ய |
அழகு, எழில் மிகுந்த
|
ஸேவதி |
பொற்கிடங்கு, பொக்கிஷம் |
அம்பாள் சர்வ அழகும் கொண்டு மிளிரும் அழகுப் பெட்டகம் அல்லது அழகின் பொக்கிஷமாகத் திகழ்கிறாள்.
அம்பாளின் அழகின் லாவண்யத்துக்கு இந்த ப்ரபஞ்சத்தில் ஈடு இணை யாருமே கிடையாது .எங்கு தேடினாலும் அப்படிப்பட்ட அழகுப் பொக்கிஷத்தை எங்கும் காண முடியாது.
அம்பாள் அழகின் பொக்கிஷக் கூடம். சவுந்தர்ய லஹரி (பாடல் 12) கூறுகிறது, "பிரம்மா போன்ற சிறந்த
சிந்தனையாளர்கள் உங்கள் அழகுக்கு பொருத்தமான ஒப்பீட்டைக் கண்டுபிடிக்க மிகுந்த
முயற்சி செய்கிறார்கள். தெய்வீக கன்னிகைகள் கூட, உங்கள் மகிமையைக் காண மிகுந்த ஆர்வத்தால், மனதளவில் சிவத்யானத்தில் மூழ்கும்
நிலையை அடைகிறார்கள், இது தவத்தால் கூட அடைய முடியாதது."
மீண்டும்
இந்த நாமாவளியும் அம்பாளின் உன்னத த்தையும் ஒப்பிடமுடியாத உச்சத்தையும் விளக்குகின்றது
இத்துடன் இன்றைய
பதிவினை நிறைவு செய்கிறேன் .நாளை நாற்பத்து ஒன்பதாவது நாமாவளியின் விளக்கமோடு சந்திப்போம்.
இந்த பதிவுகள் அனைத்தையும் இதனுடனே ஒலி வடிவமாவும் தினம் மேலும் விளக்கமாகத் தந்து வருகிறேன். அவசியம் அதையும் கேட்டு அம்பாளின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்.
நன்றி. வணக்கம்.
ஓம்
நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
செவ்வாய்க் கிழமை, அக்டோபர், 7 ,2025
No comments:
Post a Comment