Thursday, October 23, 2025

 


ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமாவளி -72

ஓம் நமசிவாய:

சிவதாஸன் ஜகன்நாதன்  

வியாழன்,23,அக்டோபர்,2025                                                                                                                

அனைவருக்கும் வணக்கம்.          


இன்று நாம் அம்பாளின் எழுபத்து இரண்டாவது திவ்ய நாமாவளியைப் பற்றிப்பார்ப்போம்

இந்த நாமாவளி அம்பாளின் இருபத்து எட்டாவது ஸ்லோகத்தில் வருகின்றது
.

அம்பாள் தன்னுடைய சக்தி சேனைகள் பண்டாசுரனின் படைகளை அழித்ததைக் கண்டு பெரும்கிழ்ச்சி கொண்டாள்

72.பண்டஸைந்யவதோத்யுக்தஶக்திவிக்ரமஹர்ஷிதா:

பண்ட ==== பண்டாசுரனின்

ஸைந்ய ==== படைகளை

வதோத் ==== யுத்தத்தில் அழித்த

யுக்த ====  செயலை செய்

ஶக்தி ==== ஷக்திசேனையின்

விக்ரம ==== வலிமையைக் கண்டு

ஹர்ஷிதா ==== பெரு ம்கிழ்சியுற்றாள்

 

 

அவளுடைய சக்திகள் (படை) பண்டாசுரன் என்ற அசுரனின் படையை அழித்தபோது, ​​அவள் மகிழ்ச்சியடைந்தாள்.

அம்பாள் பண்டாசுரனை அழிக்க தன்னிடமிருந்து பல சக்தி ரூபங்களைப் படைத்தாள்.திரஸ்காடிணீ,நகுளீ,சம்பத்கரி மற்றும் அஸ்வாரூட போன்றவர்களாவர்.

பண்டாசுரன் அறியாமையினால் தன்னிலை மறந்தான்.தேவி அவனுடைய அறியாமை என்னும் மாய இருளை தனது சக்திகளால் அழ்த்தாள். ஞானம் வென்று அறியாமை தோற்றதைக்கண்டு அம்பாள் மகிழ்ந்தாள்.

பண்டம் என்பது இருமையால் பாதிக்கப்பட்ட அறியாமை உடைய ஆன்மாவையும் குறிக்கிறது, சைன்யம் (படை) என்பது இருமையையும் .குறிக்கிறது, மேலும் வதம் என்பது அழிவைக் குறிக்கிறது. ஒருவர் இருமையை அழிக்கும்போது லலிதை மகிழ்ச்சியடைகிறாள். இருமை நீக்கப்படும்போது, ​​அது மாயாவின் திரையை நீக்குவதற்கான அறிகுறியாகும். மனதின் உதவியுடன் உள் ஆய்வு மூலம் மட்டுமே இருமையை அகற்ற முடியும்.

 

இத்துடன் இன்றைய பதிவினை நிறைவு செய்கிறேன் .நாளை எழுபத்துமூன்றாவது நாமாவளியின் விளக்கமோடு சந்திப்போம்                                                                                                                            இந்த பதிவுகள் அனைத்தையும் இதனுடனே ஒலி வடிவமாவும் தினம் மேலும் விளக்கமாகத் தந்து வருகிறேன்அவசியம் அதையும் கேட்டு அம்பாளின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்.

நன்றிவணக்கம்.                                                                                                  

 ஓம் நமசிவாய:

சிவதாஸன் ஜகன்நாதன்  

வியாழன்,23,, அக்டோபர்

No comments:

Post a Comment