தினம் ஒரு லலிதா
நாமம்----37, & 38
ஓம் நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
புதங்கிழமை,
அக்டோபர், 1 ,2025
அனைவருக்கும்
வணக்கம்.
இன்று நாம் அம்பாளின் முப்பத்து ஏழு
மற்றும் முப்பத்து எட்டாவது திவ்ய
நாமங்களைப் பார்ப்போம். இந்த நாமங்கள் அம்பிகையின் இடையான இடுப்புப் ப்ரதேசத்தில் அணிந்துள்ள
ஆடையையும், அணிகலன் களின் அழகையும்,,அவைகளின் உண்மைத் தத்துவத்தையும் விவரிக்கின்றன. இந்த நாமங்கள் இரண்டும் அம்பாளின் பதினாறாவது ஸ்லோகத்தில் வருகின்றன
அருணாருண
கௌஸும்ப வஸ்த்ர பாஸ்வத் கடீதடீ
அருணாருண
|
உதய சூரியன்
மற்றும் மாணிக்கத்தின்சிவப்பு |
கௌசும்ப
|
சிவந்த
செம்பருத்தி மலர்
|
வஸ்த்ர
|
ஆடை
|
பாஸ்வத்
|
மிளிருதல், மின்னுதல்= |
கடீ |
இடை,இடுப்பு
|
தடீ |
இடையின்
சரிவு |
அம்பாள் இடுப்பைச் சுற்றி சிவப்பு பட்டுத் துணியிலான ஆடையை அணிந்திருக்கின்றாள். அந்த சிவப்பு உதிக்கும் இளம் சூரியனைப்
போன்றும், மலர்ந்த இளம் சிவப்பான செம்பருத்தி மலர்
போன்றும் உள்ளது.சிவப்பு நிறம் என்பது கருணையைக் குறிக்கிறது. அம்பாளுடன் தொடர்புடைய அனைத்தும் சிவப்பு நிறத்தில் உள்ளன, இது அவளுடைய வடிவம் கருணையால் நிறைந்தது (ஸ்ரீ மாதாவாக
இருப்பதற்கான காரணங்களில் ஒன்று) என்பதைக் குறிக்கிறது. அவள் தனது மூன்று
செயல்களையும் (படைத்தல், பராமரித்தல்
மற்றும் கலைத்தல்) கருணையுடன் செய்கிறாள் என்று கூறலாம். இந்த சிவப்பு நிறம் என்பது
வாக் தேவிகளில் ஒருவரான அருணையையும் குறிக்கலாம்.
இந்த
சஹஸ்ரநாமம் எட்டு வாக் தேவிகளால் இயற்றப்பட்டது. அவர்கள் வாசினி, காமேஸ்வரி (சிவனின் மனைவி அல்ல), மோதினி, விமலா, அருணா, ஜைனி, சர்வேஸ்வரி மற்றும் கௌலினி. அருணா வாக் தேவி அவள் இடுப்பில்
இருக்கிறாள்.
இந்த நாம்ம்
அருணா தேவியை மட்டும் குறிப்பிடாது அன்னையின் மாபெரும் கருணை வடிவத்தையும் உள்ளத்தையும்
குறிப்பிடுவதாக அமைந்துள்ளது.
38.ௐம் ரத்ந கிங்கிணிகா ரம்ய ரஶநா தாம பூஷிதா
ரத்ன |
ரத்னங்கள் பதித்த
|
கிண்கிணிகா |
கிண்கிணிக்கும் சிறு மணிகள்
|
ரம்யா |
அழகாக, இதமாக
|
ரஸனா |
ஒட்டியானம்,அதை அணியும் இடை |
தாம |
மாலை,சங்கிலி
|
பூஷிதா |
அலங்கரித்து அணிந்திருத்தல் |
அம்பாள் இடை சிறிய மணிகள் மற்றும் ரத்தினங்கள் பதித்த கச்சையாலும், ஒட்டியானத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது தேவியின் பஞ்சதசி மந்திரம் மூன்று
பகுதிகளை அல்லது கூடங்கள் கொண்டது . இது அம்பாளின் ரூபங்களில் விவரிக்கப்படுகின்றது. அவை 1.வாக்பவ
கூடம்,
2.மத்திய கூடம், மற்றும்
3.சக்தி
கூடம்
வாக்பவ
கூடம் நாமம் 13 முதல் 29 வரை விவாதிக்கப்பட்டது. மத்தியகூடம்30முதல்38வரைவிவாதிக்கப்பட்டது, சக்தி கூடம் 39 முதல் 47 வரை
விவாதிக்கப்படும்.
1.தேவியின் முகம் வாக்பவ கூடம், 2.முகம் முதல் இடுப்பு வரை மத்திய கூடம் (காமராஜ கூடம் என்றும் அழைக்கப்படுகிறது) மற்றும் 3.சக்தி கூடம் இடுப்பு கீழ்நோக்கி உள்ளது.
முழு பஞ்சதசி மந்திரமும் நாமங்கள் 13 முதல் 47 வரை மறைக்கப்பட்டுள்ளது.
அம்பாளுடைய மொத்த ரூப விளக்கமும் நாமங்கள் 13 முதல் 54 வரை
விவாதிக்கப்படுகிறது
இத்துடன் இன்றைய பதிவினை நிறைவு செய்கிறேன் .நாளை
முப்பத்து ஒன்பதாவது நாமாவளியின் விளக்கமோடு சந்திப்போம்
இந்த பதிவுகள் அனைத்தையும் இதனுடனே ஒலி வடிவமாவும் தினம் மேலும் விளக்கமாகத் தந்து வருகிறேன். அவசியம் அதையும் கேட்டு அம்பாளின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்.
நன்றி. வணக்கம்.
ஓம் நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
புதங்கிழமை,
அக்டோபர், 1 ,2025