Thursday, November 6, 2025

 

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமாவளி -86 & 87

ஓம் நமசிவாய:

சிவதாஸன் ஜகன்நாதன்  

வியாழன், 6, நவம்பர், 2025                            

அனைவருக்கும் வணக்கம்.          

இன்று நாம் அம்பாளின் எண்பத்து ஆறு மற்றும் எண்பத்து ஏழாவது திவ்ய நாமாவளிகளைப் பற்றிப்பார்ப்போம்.

இந்த நாமாவளிக்ள் இரண்டும் பஞ்சதசி மந்திரத்தின் பத்து அக்ஷரங்களைக் குறிக்கின்றன. இவைகள் அம்பாளின் மத்ய கூட்த்தையும்,சக்திகூட்த்தையும் விவரிக்கின்றன.

கந்த தாஹ் கடி பர்யந்த-மத்ய கூட- ஸ்வரூபிணி  

கந்த ====== கண்டமான தொண்டையில்

தாஹ் ====== கீழிருந்து

கடி ======= இடைப் பகுதியான இடுப்பு

பர்யந்த-=======  வரையிலும்

மத்ய கூட- =======  மத்திய கூட

ஸ்வரூபிணி ======== வடிவமாக்க் கொண்டவள்

கழுத்துஇலிருந்து இடுப்புவரையிலான சூக்ஷும உடலின் பகுதிகளை பஞ்சதஸி மந்திரத்தின் நடுவில் உள்ள ஆறு பீஜங்களை தனது மத்திய கூடமாகக் கொண்டவள்.

நாம் நேற்று பார்த்த வாக்பவ கூடம் பஞ்சதஸி மந்திரத்தின் முதல் ஐந்து பீஜங்களுடன் அறிவின் வடிவமாக விளங்குகிறது.

இந்த இரண்டாவது கூடமான மத்ய கூடம் இச்சையின் வடிவமாக விளங்குகிறது.

பஞ்சதஸாக்ஷர மந்திரத்தின் பதினைந்து பீஜங்களும் அம்பாளின் முழு உருவத்தையும் அம்பாளே இச்சா  சக்தியாகவும், க்ரியா சக்தியாகவும், ஞான சக்தியாகவும் விளங்குவதை இந்த நாமங்கள் விவரிக்கின்றன

மத்திய கூடம் அல்லது பஞ்சதசாக்ஷர மந்திரத்தின் நடுப்பகுதி என்பது அவளுடைய கழுத்துக்கும் இடுப்புக்கும் இடையிலான பகுதியைக் குறிக்கிறது. முந்தைய பெயர் அறிவு, இந்த பெயர் இச்சா, அடுத்த பெயர் க்ரியா.

அடுத்து 87 வது நாமாவளி:-

 சக்தி-கூடைகடபன்ன-கட்யதோபாக-தாரிணி

சக்தி-கூடைகட ======= பஞ்ச தஸாக்ஷரி மந்திரத்தின் கடைசி நான் கு அக்ஷரங்கள் சக்தி கூடம் எனப்படும்

பன்ன- ========  பெற்றிருத்தல்

டி ========  இடைக்கு

யதோபாக- ====== கீழ் பாகங்களைக்

தாரிணி ========  கொண்டிருப்பவள்

அம்பாளின் மூன்றாவது கூடமான சக்திகூடம் பஞ்ச தஸாக்ஷரி மதிரத்தின் கடைசி நான் கு எழுத்துக்களாலானது.அந்தப் பகுதி அம்பாளின் இடைக்குக் கீழே உள்ள பகுதிகளால் ஒப்பிடப் படுகிறது.இந்த வடிவம் க்ரியா சக்தியின் வடிவமாகும்

இத்துடன்இன்றையபதிவினைநிறைவுசெய்கிறேன் .                       நாளை ண்பத்து எட்டு மற்றும் எண்பத்து ஒன்பதாவது,நாமாவளிகள்  மற்றும் முப்பத்து ஐந்தாவது ஸ்லோகத்தின்விளக்கமோடும்சந்திப்போம் 

நாளையும் அம்பாளின் நிர்குண மற்றும் சூக்ஷும ஸ்வரூபம் விளக்கப் படுகின்றது                                                                                   

இந்த பதிவுகள் அனைத்தையும் இதனுடனே ஒலி வடிவமாவும் தினம் மேலும் விளக்கமாகத் தந்து வருகிறேன்அவசியம் அதையும் கேட்டு அம்பாளின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்.

ஓம் நமசிவாய:

சிவதாஸன் ஜகன்நாதன்  

வியாழன், 6, நவம்பர், 2025                            

அனைவருக்கும் வணக்கம்.          


 

No comments:

Post a Comment