ஸ்ரீ லலிதா
சஹஸ்ரநாமாவளி -85
ஓம் நமசிவாய:
சிவதாஸன்
ஜகன்நாதன்
புதன், 5, அக்டோபர், 2025
அனைவருக்கும்
வணக்கம்.
இன்று நாம் அம்பாளின் எண்பத்து ஐந்தாவது திவ்ய நாமாவளியைப் பற்றிப்பார்ப்போம்.
இந்த நாமாவளி
முப்பத்து நாலாவது ஸ்லோகத்தில் வருகின்றது. இந்த ஸ்லோகம் முதல் நாம் அம்பாளின் மந்த்ர
ரூப வ்ரணனைகளைப் பார்க்கப்போகின்றோம்.85 முதல் 89 வது வரையிலான நாமங்களில் அம்பாளின்
நிர்குண ஸ்வரூபம் விளக்கப்படுகின்றது
85. ஶ்ரீமத் வாக் பவ கூடைக ஸ்வரூப முக பங்கஜா: ।
ஶ்ரீமத்
====== மேன்மைதங்கிய உன்னதமான
வாக் ======
வார்த்தைகள்
பவ ======
தோன்றும்
கூடைக =====
தாடை முகடு
ஸ்வரூப
======= வடிவம்
முக ====== முகம்
பங்கஜா
======== தாமரை
அம்பாளின்
மந்த்ர ஸ்வரூப வர்ணனையில் அம்பாளின் ரூபம் மந்த்ரஸ்வரூபமாக வர்ணிக்கப்படுகின்றது.பஞ்சதஸி
மந்திரம் பதினைந்து அக்ஷரங்கள் கொண்ட்து .அம்பாளின் ரூபம் மூன்று பகுதிகளாக விளக்கப்படுகின்றது.அவை
1.வாக்பவ கூடம்,2.மத்ய கூடம், மற்றும் 3. சக்தி கூடமாகும்
இதுபற்றி
முன்னரே நாம் பார்த்துள்ளோம்.உங்களுக்கு நினைவிருக்கலாம்.
இந்த நாமத்தில்
அம்பாளின் தாமரைபோன்ற முகம் மேன்மையான மற்றும் உன்னதமான வார்த்தைகளை தோற்றுவிக்கும்
தாடை ம்ற்றும் முகத்தைக்கொண்டு விளங்குகிறது
இந்த நாமாவளி
அம்பாளின் வாக்பவ கூடம் பற்றி விவரிக்கின்றது. அடுத்து வ்ரும் நாமாவளிகளில் மத்திய
கூடம் பற்றியும்,சக்தி கூடம் பற்றியும் பார்க்கப்போகிறோம்
ஸ்ரீமத்வாக்பவ-கூடைக-ஸ்வரூப-முக-பங்கஜா
(85) என்ற இந்த நாமத்தைத் தொடங்கி, அவளுடைய பஞ்சதசி மந்திரம் விளக்கப்படுகிறது. அறிமுக
அத்தியாயத்தில் பஞ்சதசி மந்திரம் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
இப்போது, அவளுடைய சூட்சும வடிவத்தின் விளக்கம் தொடங்குகிறது. அவளுடைய
நுட்பமான வடிவம் மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது, அதாவது. நுட்பமானது, நுட்பமானது
மற்றும் நுட்பமானது.
வாக்பவ கூடம்
என்பது உச்சியிலிருந்து கழுத்துவரையில் உள்ள பகுதி என்பதை நாம் முன்னரே பார்த்துள்ளோம்
பஞ்சதசி
மந்திரம் நுட்பமான வடிவமாகும். இந்த நாமத்தில், அவளுடைய முகம் முதல் கூடத்துடன் ஒப்பிடப்படுகிறது, அதாவது. பஞ்சதசி மந்திரத்தின் வாக்பவ-கூடம், இது அறிவையும் ஞானத்தையும் தருகிறது. பஞ்சதசி மந்திரத்தின்
முழு சக்தியையும் குறிக்க இங்கே ஸ்ரீமத் என்ற முன்னொட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீமத் என்பது மந்திரத்திற்குக் கொடுக்கப்படும் மரியாதையையும் குறிக்கிறது.
இந்தக் பகுதி முதலில் விவரிக்கப்படுவதால், இந்தப் பெயருடன் இந்த முன்னொட்டு சேர்க்கப்பட்டுள்ளது.
இத்துடன்இன்றையபதிவினைநிறைவுசெய்கிறேன் . நாளை எண்பத்து ஆறு மற்றும் எண்பத்து ஏழாவது,னாமாவளிகள் மற்றும் முப்பத்து நாலாவது ஸ்லோகத்தின்விளக்கமோடும்சந்திப்போம்
நாளையும் அம்பாளின் நிர்குண
மற்றும் சூக்ஷும ஸ்வரூபம் விளக்கப் படுகின்றது
இந்த பதிவுகள்
அனைத்தையும் இதனுடனே ஒலி வடிவமாவும் தினம் மேலும் விளக்கமாகத் தந்து வருகிறேன். அவசியம்
அதையும் கேட்டு அம்பாளின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்.
ஓம் நமசிவாய:
சிவதாஸன்
ஜகன்நாதன்
புதன், 5, அக்டோபர், 2025
அனைவருக்கும்
வணக்கம்.
No comments:
Post a Comment