Tuesday, November 18, 2025

 


ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமாவளி -111

ஓம் நமசிவாய:

சிவதாஸன் ஜகன்நாதன்  

செவ்வாய்க் கிழமை, 18, நவம்பர், 2025   

அனைவருக்கும் வணக்கம்

இன்று அம்பாளின் நாற்பதாவது ஸ்லோகத்தின் 111 வது நாமாவளியைப் பார்ப்போம்.இதில் அம்பாள் சஹஸ்ராரத்தை அடைந்து அங்கு பரமேஸ்வரருடன் ஐக்கியமானதையும், அங்கு அம்பாள் பண்டிகைகளில் மிகவும் விருப்பம்கொண்டு விளங்குவதியும்,அம்பாளே குண்டலிணியாக உருவெடுத்து விளங்குவது பற்றியும் பார்த்தோம். கண்ணுக்குத்தெரியாத குண்டலிணி ரூபமாக இருந்த அம்பாள் இப்பொழுது சாத்கனின் கண்ணுக்குப் புலப்படும் மெல்லிய தாமரைத்தண்டின் நார் போல காக்ஷியளிக்கிறாள்.

111. பிஸதந்துதநீயஸீ

பிஸதந்து ====== தாமரைத்தண்டின்

தநீயஸீ  ========மெல்லிய இழைபோலக் காணப்படுகிறாள்

அவள் தாமரைத்தண்டின் நுண்ணிய நார் போன்றவள். இது அவளுடைய நுட்பமான வடிவத்தை விவரிக்கும் கடைசி நாமம். அவள் மூலாதார சக்கரத்தில் ஒலிக்கும்போது, ​​கீழ் சக்கரத்தில் ஒரு இளம் பெண்ணைப் போல இருக்கிறாள், தொப்புள் சக்கரத்தில் மணப்பெண் போல உடையணிந்து, சகஸ்ராரத்தில் தன் துணைவியார் சிவனை சந்திக்கிறாள்

அம்பாள் மூலாதாரத்தில் உறங்கிக்கொண்டிருந்த சிறுமியாக இருந்தவளை எழுப்பியதும் ஏற்பட்ட ஆத்திரத்தில் அழுது புரண்டு நிலைகொள்ளாதிருப்பதுபோல் காணப்படுகிறாள்.ஆதலால் அந்நிலையில் உள்ள குண்டலிணியை குமாரி என்பர்.

தான் எழுப்ப்ப்பட்ட காரணத்தை றிந்து,சமாதானப் படுத்தப் பெற்று பதியாகிய சிவனை அடையும் அவசியத்தை உணர்ந்து சுறு சுறுப்புடன் இயங்கும் யுவதிபோல் ஆஜ்ஞா சக்கரம் வரை செல்கிறாள்.ஆதலின் அந்நிலையில் தருணீ,யுவநீ என்று அழைக்கப்படுகிறால்.

சஹஸ்ராரத்தில் சிவனுடன் இணைந்த்தும் பதிவிரதையாக அவரி சுற்றிச் சுற்றி வந்து ஆன்ந்த்த்தில் திளைத்து நிகிறாள்.அதனால் அந்நிலையில் குண்டலினியை பதிவிரதை என் அழைப்பார்கள்.

குமரியாக மின்னல்போல் குதித்த குண்டலிணி பதிவிரதையாகி தாமரைத் தண்டின் நூல்போல் நெகிழும் வடிவம் பெற்றாள்

இந்த நாமத்துடன் அவளுடைய குண்டலினி வடிவத்தின் விளக்கம் முடிவடைகிறது, அடுத்த நாமத்திலிருந்து, அவளுடைய ஆசீர்வாதங்களின் விளக்கம் தொடங்குகிறது.

இத்துடன்இன்றையபதிவினைநிறைவுசெய்கிறேன் .                       நாளை னாற்பதாவது ஸ்லோகத்திலிருந்து நூற்று  பதினொன்றாவது னாமாவளிலில் இருந்து மேற்கொண்டு பார்ப்போம் நாளையும் அம்பாளின் நிர்குண மற்றும் சூக்ஷும ஸ்வரூபம்விளக்கப்படுகின்றது                                                                                   

இந்த பதிவுகள் அனைத்தையும் இதனுடனே ஒலி வடிவமாவும் தினம் மேலும் விளக்கமாகத் தந்து வருகிறேன்அவசியம் அதையும் கேட்டு அம்பாளின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்.

ஓம் நமசிவாய:

சிவதாஸன் ஜகன்நாதன்  

செவ்வாய்க் கிழமை, 18, நவம்பர், 2025   

அனைவருக்கும் வணக்கம்


 


No comments:

Post a Comment