ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
ஞாயிறு, டிஸம்பர்,
15, 2024
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம்
நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை நாற்பத்து நாலு பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று
நாம் நாற்பத்து ஐந்தாவது பாடலைப் பார்ப்போம்.
இந்த பாடலில் அபிராமிப்பட்டர் பண்பட்ட தொண்டர்கள் சரியை கிரியை போண்ற்\அ வழிபாட்டு
முறைகளை கடைபிடிக்காமல் தங்கள் மனம்போல வழிபடுகிறார்கள். அடியேனான யானும் அவ்வாறு செய்ய
முடியுமா என்று கேட்கிறார்
உலகோர்
பழியிலிருந்து விடுபட
தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது, துணிந்திச்சையே
பண்டு செய்தார்உளரோ, இலரோ? அப் பரி சடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ, அன்றிச் செய்தவமோ?
மிண்டு செய்தாலும் பொறுக்கை
நன்றே, பின்வெறுக்கை அன்றே.
தொண்டு |
உனக்கும் உன் அடியார்களுக்கும் தொண்டு |
செய்யாது |
செய்யாமல் |
நின் பாதம் |
உன் திருவடிகளை |
தொழாது |
வணங்காமல் (உன்
அடியார்களை வணங்காமல்) |
துணிந்து |
துணிவுடன் |
இச்சையே |
தங்கள் மனம் விரும்பியதையே |
பண்டுசெய்தார் |
பழங்காலத்தில் செய்தவர்கள் |
உளரோ |
இருக்கிறார்களோ |
இலரோ |
இல்லையோ |
அப்பரிசு |
அவர்கள் செய்ததை |
அடியேன்கண்டு |
அடியேன் கண்டு |
செய்தால் |
அவ்வாறே செய்தால் |
அதுகைதவமோ |
அது நல்லதோ |
அன்றிச் |
அல்லாது |
செய்தவமோ |
கெட்டதோ |
மிண்டு |
அதைமீறி |
செய்தாலும் |
நான் செய்தாலும் அதை |
பொறுக்கைநன்றே |
பொறுத்தல் நலமாகும் |
பின்வெறுக்கை |
அல்லாது வெறுத்து ஒதுக்குவது |
அன்றே. |
நன்றன்று |
தேவி, நின் திருவடிக்குத் தொண்டு செய்யாமலும் நின் பாத சேவை
செய்யாமலும் உண்மைப் பொருள் இன்னதென்று தெளிந்து தம் மனம் விரும்பியவற்றையே
பழங்காலத்தில் செய்த மெய்ஞ்ஞானியராகிய நின் அடியார்கள் இருந்தனரோ, இல்லையோ; (இருந்தனராதலின்) அவரைப்போலவே அடியேனும் தெரிந்து என் இச்சைக்குரிய செயல்களைச் செய்தால் அது வஞ்சகமாகுமா? அல்லது அந்த மெய்ஞ்ஞானியர் செய்கையெல்லாம் தவமாதலைப்போல இவையும் யான் செய்யும் தவமாகுமா? அடியேன் மாறுபாடான செயல்களைச் செய்தாலும் நீ பொறுத்தல்
நலமாம்; என்னை அதனால் வெறுத்து ஒதுக்குதல் நன்று அன்று.
சரியை,
கிரியை,
யோகம்
கடந்த ஞானச் செல்வர் எது செய்யினும் அதுவே தவமாகுதலின் அத்தகையோரைப் பண்டு
செய்தாரன்பதனால் சுட்டினார்;
” தேறு
மோனமா ஞான போதனார் செய்த செய்கையே செய்யு மாதவம்,
கூறும்
வாசகம் யாவு மந்திரம் கொண்ட கோலமே கோலமாகுமால்”
விளக்கம்:
அன்னையே! உனக்கு
பணிவிடை செய்யாமல், உன்
பாதங்களை வணங்காமல், தன்
இச்சைப்படியே கடமையைச் செய்த ஞானிகளும் உளர். அவர்களின்படி
நான் நடந்தால் நீ வெறுப்பாயோ, அல்லது
பொறுத்து அருள் செய்வாயோ, எனக்குத்
தெரியாது! ஆயினும், நான்
தவறே செய்தாலும், என்னை
வெறுக்காமல் பொறுத்துக் கொண்டு நீ அருள் பண்ணுவதே நீதியாகும்.
இத்துடன் இந்தப் பதிவை
இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை
ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும்
சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
ஞாயிறு, டிஸம்பர்,
15, 2024
No comments:
Post a Comment