ஓம்
நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
வியாழன்,
டிசம்பர், 12, 2024
ஆன்மீக
அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை
நார்பத்து ஒரு பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் நாற்பத்து இஅண்டாவது பாடலைப்
பார்ப்போம்.
இந்த பாடலில் அபிராமிப்பட்டர் அம்பாள் தன்னுடைய அருள் மிகுந்த அங்க லாவண்யங்களினால் பரமேஸ்வர ரின்
இதயம் இறுகிப்பகும் நேரங்களினால் அவைகளை இளகச்செய்கிறாள் என்பதை விளக்குகின்றார்
இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு
இறுகி, இளகி, முத்து
வடங்கொண்ட
கொங்கை மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட
கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் லரவின்
படங்கொண்ட
அல்குல் பனிமொழி, வேதப்
பரிபுரையே.
இடங்கொண்டு |
தகுந்த இடத்தில்
இருந்து கொண்டு |
விம்மி |
பெருமிதத்தால்
விம்மி |
இணை கொண்டு |
ஒன்றிற்கொன்று
இணையென்னும்படியாகஅமைந்து |
இறுகி இளகி |
இறுகியும் அதே
நேரத்தில் இளகியும் |
முத்து வடங் |
முத்து மாலையை |
கொண்ட |
அணிந்தும் இருக்கும் |
கொங்கை மலை |
மலைகள் என்னும்
படியான கொங்கைகளைக் |
கொண்டு |
கொண்டு |
இறைவர் |
நம் தலைவராம்
சிவபெருமானின் |
வலிய நெஞ்சை |
எதற்கும் அசையாத
வலிய நெஞ்சையும் |
நடங்கொண்ட |
உன் எண்ணத்திற்கு
ஏற்ப ஆடும் படி செய்த |
கொள்கை நலம் |
பிள்ளைகளான
எங்களுக்கு அருள் செய்யும் |
கொண்ட நாயகி |
நல்ல நலம் கொண்ட
தலைவியே |
நல் அரவின் படம் |
நல்ல பாம்பு
படமெடுத்ததைப் போல் |
கொண்ட அல்குல் |
இருக்கும்
அல்குலைக் கொண்ட |
பனி மொழி |
குளிர்ந்த
பேச்சினையுடைய |
வேத |
வேதங்களைக் |
பரிபுரையே |
காலில் சிலம்பாய் அணிந்தவளே. |
பரந்த இடத்தைக் கொண்டு பருத்து ஒன்றோடொன்று ஒக்க வளர்ந்து தளர்ச்சியின்றிச் செறிந்து பெத்தெனக் குழைந்து முத்துமாலையை அணியாகக் கொண்ட தனமென்னும் மலையைக்கொண்டு சிவபிரானது வன்மைபெற்ற நெஞ்சைத் தான் நினைத்தவாறெல்லாம் ஆட்டிவைக்கும் விரதத்தையும் அதற்கு ஏற்ற அழகையும் உடைய தேவி, நல்ல பாம்பின் படத்தையொத்த நிதம்பத்தையும் குளிர்ச்சியையுடைய
விளக்கம்:
அம்மையே! ஒளிவீசும் முத்துமாலை உன்னுடைய தனங்களில் புரள்கின்றது. உம்முடைய தனங்களோ ஒன்றுக்கொன்று இடமின்றி பருத்து மதர்த்திருக்கின்றது. இந்தக் கொங்கையாகிய மலை சிவபெருமானின் வலிமை பொருந்திய மனத்தை ஆட்டுவிக்கின்றது. அபிராமி சுந்தரியே! நல்ல பாம்பின் படம் போன்ற அல்குலை உடையவளே! குளிர்ச்சியான மொழிகளையுடையவளே! வேதச் சிலம்புகளைத் திருவடிகளில் அணிந்து கொண்டவளே! தாயே!
இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும்
அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு
மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்
ஓம்
நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
வியாழன், டிசம்பர், 12,
2024
No comments:
Post a Comment