மிருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம்
ஓம் ருத்ரம் பசுபதிம் ஸதானும் நீலகண்டம் உமாபதிம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி! 1
ஸ்ரீ மஹா ருத்ரரானவரும், ப்ரபஞ்சத்தின் பசுக்களான சகல ஜீவராசிகளுக்கும் தலைவரானவரும்,என்றும் நிலைத்திருப்பவரும்,
கருநீலமான கண்டத்தை
உடையவரும்,அன்னை
உமாதேவியின் கணவருமான ஸ்ரீபரமேஸ்வரரின்
பாதத்தில் என் தலையை வைத்து வணங்கினால்
கொடும் காலனான எமதர்மனால் என்ன செய்ய முடியும்
காலகண்டம் கால மூர்த்திம் காலாக்னிம் கால நாசனம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி! 2
கண்டத்திலே கொடும் ஆலகால ழிஷத்தைக் கொண்டவரும்,
திரிகால்ங்களின் தலைவரானவரும், திரிபுரங்களை எரித்தவரும் ஊழிக்காலத்தில்
பெரும் தீயாய் விளங்குபவரும்,
காலனான எமதர்மை நாசம்ெய்தவருமான
ஸ்ரீபரமேஸ்வரரின் பாதத்தில் என் தலையை வைத்து வணங்கினால்
கொடும் காலனான எமதர்மனால் என்ன செய்ய முடியும்
நீலகண்டம் விருபாக்ஷம் நிர்மலம் நிருபத்ரவம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி! 3
கருநீலமான கண்டத்தை உடையவரும்,நெற்றியிலே
மூன்றாம் கண்ணை உடையவரும்,தூய்மையான
நிர்மாமானவரும்
உணர்ச்சிகளுக்கு ஆட்படாதவருமான
ஸ்ரீபரமேஸ்வரரின் பாதத்தில் என் தலையை வைத்து வணங்கினால்
கொடும் காலனான எமதர்மனால் என்ன செய்ய முடியும்
வாமதேவம் மகாதேவம் லோகநாதம் ஜகத்குரும்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி! 4
தனது இடப்பாகத்தில் உமை அம்மையைக் கொண்டவரும்
தேவர்களுக்கெல்லம் தலைவரான மஹாதேவரும்,இந்த
ப்ரபஞ்சத்தின் தலைவரானவரும்,இவ்வுலகினர்
அனைவருக்கும் குருவானவருமான் ஸ்ரீபரமேஸ்வரரின் பாதத்தில் என் தலையை வைத்து வணங்கினால்
கொடும் காலனான எமதர்மனால் என்ன செய்ய முடியும்
தேவதேவம் ஜகன்னாதம் தேவேசம் வ்ருஷபத்வஜம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி! 5
அனைத்துக் கடவுள்களுக்கும் தேவர்களுக்கும் மேலான
தலைவரும் ,இந்த ஜகமான லோகத்தின் தலைவரும்,
தேவர்களின் ஈஸ்வர ரும்,ரிஷப வாஹனத்தில் ஆரோகணித்து வருபவருமான ஸ்ரீபரமேஸ்வரரின் பாதத்தில் என் தலையை வைத்து வணங்கினால்
கொடும் காலனான எமதர்மனால் என்ன செய்ய முடியும்
த்ரயக்ஷம் சதுர்ப்புஜம் சாந்தம் ஜடாமகுடதாரிணம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
6
மூன்று கண்களை உடையவரும்,,நான் கு கரங்களைக்
கொண்டவரும்,அமைதியே உருவானவரும்,சிரசில்
ஜடாமுடியை அணிந்தவருமான ஸ்ரீபரமேஸ்வரரின் பாதத்தில் என் தலையை வைத்து வணங்கினால்
கொடும் காலனான எமதர்மனால் என்ன செய்ய முடியும்
பஸ்மோத் தூளித சர்வாங்கம் நாகாபரண பூஷிதம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி! 7
தனது திவ்ய தேகம் முழுதும் திருவெண்ணீறு பூசியவரும்
கொடிய பல நாகங்களையே ஆபரணங்களாகப் பூண்டவருமான
ஸ்ரீபரமேஸ்வரரின் பாதத்தில் என் தலையை வைத்து வணங்கினால்
கொடும் காலனான எமதர்மனால் என்ன செய்ய முடியும்
அனந்தம் அவ்யயம் சாந்தம் அக்ஷமாலா தரம்ஹரம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்ய 8
ஆதியும் அந்தமும் இல்லாதவரும்,என்றென்றும் பழமை
மாறாதிருப்பவரும்,அமைதியே உருவானவரும்
,மணிகளாலான மாலையைக் கொண்டவருமான
ஸ்ரீபரமேஸ்வரரின் பாதத்தில் என் தலையை வைத்து
வணங்கினால் கொடும் காலனான எமதர்மனால்
என்ன செய்ய முடியும்
ஆனந்தம் பரமம் நித்யம் கைவல்ய பத்தாயினம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி! 9
ஆனந்தமே வடிவானவரும், என்றுமழியாப்
பரம்பொருளானவரும்,
என்றென்றுன் நித்யமாக இருப்பவரும்,மகிழ்ச்சியான
முதன்மையான விடுதலைப் பாதையை அமைப்பவருமான ஸ்ரீபரமேஸ்வரரின் பாதத்தில் என் தலையை வைத்து வணங்கினால்
கொடும் காலனான எமதர்மனால் என்ன செய்ய முடியும்
அர்த்தநாரீஸ்வரம் தேவம் பார்வதீ பிராணநாயகம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி! 10
உமாதேவியை தன்னுடைய இடப்பாகத்தில் கொண்டு
உமையொருபாகராகவிளங்குபவரும்,தேவாதி தேவரும்
பார்வதி தேவியின் ப்ராண நாதருமான ஸ்ரீபரமேஸ்வரரின் பாதத்தில் என் தலையை வைத்து வணங்கினால்
கொடும் காலனான எமதர்மனால் என்ன செய்ய முடியும்
ப்ரளய ஸ்திதி கர்த்தாரம் ஆதகர்த்தாரம் ஈஸ்வரம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி! 11
ப்ரபஞ்சம் ஒடுங்கும் ப்ரளய காலத்தில் அனைத்தும்
ஒடுங்கிய நிலையிலும் இருப்பவைகளைக் காப்பவராகவும்
வழிகாட்டியாகவும், அனைத்திற்கும் ஈஸ்வ்ரராகவும்
இருக்கும் ஸ்ரீபரமேஸ்வரரின் பாதத்தில் என் தலையை
வைத்து வணங்கினால்
கொடும் காலனான எமதர்மனால் என்ன செய்ய முடியும்
வ்யோமகேசம் வ்ருபாக்ஷம் சந்திரார்க்கிருத சேகரம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி! 12
பிண்ணிப் சிக்கி உயர்ந்த முடியான கேசமுடையவரும்
நெற்றியிலே மூன்றாவது கண்ணை உடையவரும்
தன்னுடைய ஜடாமுடிவிலே இளம் சந்திரனை
அணிந்தவருமான ஸ்ரீபரமேஸ்வரரின் பாதத்தில் என் தலையை வைத்து வணங்கினால்
கொடும் காலனான எமதர்மனால் என்ன செய்ய முடியும்
கல்பாயுர் தேகிமேபுண்யம் யாவதாயுர் அரோகரம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி! 13
நோய் நொடிகளாய் துன்பமுறும் உடலைப் புனிதமாக்குபவரும்
ஆயுள்முழுதும் நோய் நொடிகள் அண்டாமல் காப்பவருமான
ஸ்ரீபரமேஸ்வரரின்
பாதத்தில் என் தலையை வைத்து வணங்கினால்
கொடும் காலனான எமதர்மனால் என்ன செய்ய முடிய
கங்காதரம் சஸிதரம் சங்கரம் சூல பாணிநம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி! 14
க்ங்கையை தந்து ஜடாமுடியிலே அணிந்தவரும இளமையான
சந்திரனை பிறைவடிவில் சிரசில்
தரித்தவரும்,திரி சூலத்தை கையிலே தரித்து
சூலபாணியானவருமான ஸ்ரீபரமேஸ்வரரின் பாதத்தில் என் தலையை வைத்து வணங்கினால்
கொடும் காலனான எமதர்மனால் என்ன செய்ய முடியும்
ஸ்வர்க்கா பவர்க்க தாதாரம் ஸ்ருஷ்டி ஸ்திதியந்த காரணம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி! 15
ஜீவராசிகளுக்கு பூலோக வாழ்வின் முடிவில் ஸ்வர்கத்தை
அளிப்பவரும்,மறு பிறவி இல்லாத மோக்ஷம்
அருள்பவரும்
படைத்தல்,காத்தல் மற்றும் அழித்தல் ஆகிய மூண்று
தொழில்களுக்கும் காரண்மாயிருப்பவர்மான ஸ்ரீபரமேஸ்வரரின் பாதத்தில் என் தலையை வைத்து வணங்கினால்
கொடும் காலனான எமதர்மனால் என்ன செய்ய முடியும்
சிவேசானம் மஹாதேவம் வாமதேவம் ஸதாசிவம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி! 16
சிவமே சகலமாகவும் இருப்பவரும், ஐந்து தொழில்களில்
நாலாவதான மறைத்தல் தொழிலைப் புரியும்
மஹாதேவராகவும்,
உமையம்மையை தன்னுடைய இடது பாகத்திலே அர்த்த்நாரீஸ்வரராகக்
கொண்டு வாமதேவராகவும்,
ஐந்தொழில்களில் இறுதியான அருளல் என்ற உன்னதம்
அருளும் மஹாதேவராகவுமான ஸ்ரீபரமேஸ்வரரின் பாதத்தில் என் தலையை வைத்து வணங்கினால்
கொடும் காலனான எமதர்மனால் என்ன செய்ய முடியும்
மார்க்கண்டேயக்ருக்கும் ஸ்தோத்ரம்ய : படேத் சிவஸந்நிதௌ தஸ்ய ம்ருத்யு பயம் நாஸ்தி ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம் ஸத்யம் ஸத்யம் புனஸ் ஸத்யம் உதரஜ்யபுஷ முச்யதே
வேத சாஸ்திராத் பரம் நாஸ்தின தைவம் சங்கராத் பரம்
மார்க்கண்டேயர் அருள் பெற்ற இந்த் ஸ்தோஸ்த்ரத்தை
சிவஸ்ன்னிதியில் படித்துப் பாராயணம் செய்தால் சத்தியமாக எமபயம் ஓடிவிடும்
மீண்டும் ௷எண்டும் சத்தியமாகும்
ஓம் நமசிவாய
No comments:
Post a Comment