ஓம்
நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
வெள்ளி,
டிசம்பர், 13, 2024
ஆன்மீக
அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள்
நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை நாற்பத்து இரண்டு பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று
நாம் நாற்பத்து மூன்றாவது பாடலைப் பார்ப்போம்
இந்த பாடலில் அபிராமிப்பட்டர் அம்பாள் விளங்கும் அழகையும்
திரிபுர சம்ஹாரம் செய்த சர்வேஸ்வர ருடன் இணைந்திருப்பதையும் அழகாகக் கூறுகின்றார்
தீமைகள் ஒழிய
பரிபுரச்
சீறடிப் பாசாங்குசை,பஞ்சபாணி, இன்சொல்
திரிபுர
சுந்தரி, சிந்துர
மேனியள் தீமைநெஞ்சில்
புரிபுர, வஞ்சரை
அஞ்சக் குனிபொருப்புச்சிலைக் கை,
எரிபுரை மேனி, இறைவர் செம்பாகத் திருந்தவளே.
பரிபுரச் |
சிலம்பினை அணிந்த |
சீறடிப் |
அழகிய சிறிய திருவடிகளை உடையவளே |
பாசாங்குசை |
பாசத்தையும் அங்குசத்தையும் ஏந்தியவளே |
இன்சொல் |
இனிய சொற்களையுடைய |
திரிபுரசுந்தரி |
மூவுலகங்களிலும் அழகில் சிறந்தவளே |
சிந்துர மேனியள் |
சிந்துரத்தை மேனியெங்கும் அணிந்தவளே |
தீமை
நெஞ்சில் |
தீய நெஞ்சத்தைக் கொண்டிருந்த |
புரி புர
வஞ்சரை |
திரிபுர அசுரர்களை அவர்கள் |
அஞ்சக் |
அஞ்சும்படியாக |
குனி
பொருப்புச் |
மேருமலையால் ஆன |
சிலைக் கை |
வில்லை வளைத்தக் கையினை உடைய |
எரிபுரை
மேனி |
எரியும் நெருப்பினை ஒத்த மேனியைக் கொண்ட |
இறைவர் |
நம் தலைவராம் சிவபெருமானின் |
செம்பாகத்து |
சரிபாதியாக |
இருந்தவளே |
இருந்தவளே |
பொருள்: பரிபுரச் சீறடிப் பாசாங்குசை – சிலம்பினை அணிந்த அழகிய சிறிய
திருவடிகளை உடையவளே; பாசத்தையும் அங்குசத்தையும் ஏந்தியவளே
பஞ்சபாணி – ஐந்து வித மலர்களால் ஆன அம்புகளை (பாணங்களை) ஏந்தியவளே
இன்சொல் திரிபுரசுந்தரி – இனிய சொற்களையுடைய மூவுலகங்களிலும்
அழகில் சிறந்தவளே
சிந்துர மேனியள் – சிந்துரத்தை மேனியெங்கும் அணிந்தவளே
தீமை நெஞ்சில் புரி புர வஞ்சரை – தீய நெஞ்சத்தைக் கொண்டிருந்த திரிபுர
அசுரர்களை அவர்கள்
அஞ்சக் குனி பொருப்புச் சிலைக் கை – அஞ்சும்படியாக மேருமலையால் ஆன வில்லை
வளைத்தக் கையினை உடைய
எரிபுரை மேனி – எரியும் நெருப்பினை ஒத்த மேனியைக் கொண்ட
இறைவர் செம்பாகத்து இருந்தவளே – நம் தலைவராம் சிவபெருமானின் சரிபாதியாக
இருந்தவளே
சிலம்பை அணிந்த சிறிய திருவடிகளையும் பாசாங்குசத்தையும் உடையவள்; ஐந்து மலர்ப் பாணங்களைத் தரித்தவள்’ இனிய சொல்லையுடைய திரிபுரசுந்தரி: சிந்துரம்போலச் சிவந்த திருமேனியை உடையவள்: நெஞ்சினால் நினைந்து தேவர்களுக்குத் தீங்குகள் செய்த திரிபுரத்தில் உள்ள வஞ்சகராகிய அசுரர்களை அஞ்சுவிக்க வளைத்த மேருமலையாகிய வில்லையுடைய திருக்கரத்தையும் நெருப்பையொத்த திருமேனியையும் உடைய சிவபிரானது ஒத்த ஒரு பாதியில் எழுந்தருளி இருந்தவளாகும்,
விளக்கம்
சிலம்பணிந்த அழகிய பாதங்களை உடையவளே! பாசத்தையும்
அங்குசத்தையும் உடையவளே! பஞ்ச பாணங்களையும், இனிமையான
சொல்லையுமுடைய திரிபுர சுந்தரியே! சிவந்த சிந்தூர மேனி
உடையவளே! கொடிய மனத்தையுடைய
முப்புரத்தை ஆண்ட அசுரரை அஞ்சி நடுங்கும்படி
முப்புரத்தை அழித்த சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே!
இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும்
அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு
மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்
ஓம்
நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
வெள்ளி,
டிசம்பர், 13, 2024
No comments:
Post a Comment