ஓம்
நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
செவ்வாய்,
டிசம்பர், 3, 2024
ஆன்மீக
அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை
முப்பத்து ஒரு பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் முப்பத்ய்ஹு இரண்டாவது பாடலைப்
பார்ப்போம்.
இந்த பாடலில் அபிராமிப்பட்டர் அம்பாளிடம் தேவியே காலன் என்னுயிர் பரிக்க வ்ரும் வேளையில் நான்
உன்னையே நம்பி ஓடிவருவேன் அப்பொழுது நீயே என்னைக் காக்க வேண்டும் என வேண்டுகிறார்
இறக்கும்
நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்க
இழைக்கும்
வினைவழியே அடும் காலன், எனைநடுங்க
அழைக்கும்
பொழுது வந்து, அஞ்சல்
என்பாய், அத்தர்
சித்தம் எல்லாம்
குழைக்கும்
களபக் குவிமுலை யாமளைக் கோமளமே,
உழைக்கும்
பொழுது, உன்னையே, அன்னையேஎன்பன்
ஓடிவந்தே.
அத்தர் |
அத்தனாம் (தந்தையாம்) சிவபெருமானுடைய |
சித்தம் எல்லாம் |
சித்தம் எல்லாம் |
குழைக்கும் |
குழையும் படி செய்யும் |
களபக் குவிமுலை |
செய்யும் மணம் வீசும்
குவிந்த தனங்களைஉடையஇளையவளே |
யாமளைக் கோமளமே |
மென்மையானவளே! |
உழைக்கும்
பொழுது |
நான் உழன்று
அரற்றும்பொழுது |
உன்னையே அன்னையே என்பன் |
உன்னையே என் அன்னை
என்பேன். |
இழைக்கும் வினை வழியே |
நான் இழைக்கும் (செய்யும், செய்த, செய்யப் போகும்) நல்வினைத்
தீவினைகளுக்கேற்ப |
அடும் காலன் எனை நடுங்க |
எனை தண்டிக்கும் கால
தேவன் (எமன்) |
அழைக்கும் பொழுது |
நான் நடுங்கும்படி
என்னை அழைக்கும் போது |
வந்து |
வந்து |
அஞ்சல் என்பாய் |
என் முன்னே ஓடி வந்தே
அஞ்சாதே என்று சொல்வாய். |
இறைவரது திருவுள்ளம் முழுதும் உருகும்படி செய்யும் கலவைச் சந்தனத்தைப் பூசிய குனிந்த தனபாரங்களை உடைய யாமளையாகிய மெல்லியளே. அடியேன் செய்யும் பாவத்தின் விளைவாக அதுபற்றி என்னை வந்து கொல்லப் புகும் எமன் அடியேன் நடுங்கும்படி என்னை அழைக்கும் சமயத்தில் (யான் மிக வருந்துவேன்;அவ்வாறு) வருந்தும்பொழுது நின்பால் ஓடி வந்து நின்னையே, ‘அன்னையே சரணம்’
என்று புகலடைவேன்; அக்காலத்தில் என்பால் எழுந்தருளி, ‘ நீ அஞ்சற்க’ என்று கூறி என்னப் பாதுகாத்தருள வேண்டும்.
விளக்கம்:
தாயே! அபிராமியே! நான் செய்த தீய வழிகளுக்காக என்னை நெருங்குகின்ற எமன் என்னைத் துன்புறுத்தி, வதைக்கும் பொழுது, தாயே உன்னை அழைக்க, அஞ்சேல் என ஓடிவந்து காப்பவளே! சிவ பெருமானின் சித்தத்தையெல்லாம் குழையச் செய்கின்ற சந்தனம் பூசிய குவிந்த முலைகளையுடைய இளமையான கோமளவல்லித் தாயே! மரண வேதனையில் நான் துன்புறும் போது உன்னை, ‘அன்னையே’ என்பேன். ஓடிவந்து என்னைக் காத்தருள்வாய்!
இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும்
அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு
மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்
ஓம்
நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
செவ்வாய், டிசம்பர், 3, 2024
No comments:
Post a Comment