ஓம்
நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
புதன்,
டிசம்பர், 4, 2024
ஆன்மீக
அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை
முப்பத்து மூன்று பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் முப்பத்து நாலாவது பாடலைப்
பார்ப்போம்.
இந்த பாடலில் அபிராமிப்பட்டர் அம்பாள் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு ஸ்வ்ர்கலோகம் அருளிவிட்டு
தான் போய் ஆறு இடங்களில் தங்கி இருப்பதை சொல்லுகிறார்.
வந்தே சரணம்புகும் அடியாருக்கு, வானுலகம்
தந்தே பரிவொடுதான்போய் இருக்கும் சதுர்முகமும்,
பைந்தேன் அலங்கல் பருமணிஆகமும் பாகமும், பொற்
செந்தேன் மலரும், அலர் கதிர்ஞாயிறும், திங்களுமே.
வந்தே சரணம் புகும் |
தன் திருவடிகளை
வந்தடைந்த |
அடியாருக்கு |
அடியார்களுக்கு |
வானுலகம் தந்தே பரிவொடு – |
அன்னையின் பரிவோடு
வானுலகம் தந்து |
தான் போய் இருக்கும் – |
அன்னை அபிராமி) என்றும் இருக்கும் (இடங்கள்): |
சதுர்முகமும் |
வேதங்களை ஓதி உலகங்களை
எல்லாம் படைக்கும் நான்முகனின் திருமுகங்கள் (கலைமகளாக). |
பைந்தேன் அலங்கல் |
நறுந்தேன் நிரம்பிய
மலர்களால் ஆன மாலைகளும் |
பருமணி ஆகமும் |
பெரிய மாணிக்க
மாலைகளும் விளங்கும் திருமாலின் நெஞ்சகமும் (திருமகளாக) |
பாகமும் |
சிவபெருமானின் உடலில்
ஒரு பாகமும் |
பொற் செந்தேன் |
பொன்னிறத்துடன்
நறுந்தேனை உடைய |
மலரும் |
தாமரை மலரும் |
அலர் கதிர் ஞாயிறும் |
அன்றாடம் சுடர் வீசித்
திகழும் கதிரவனும் |
திங்களுமே |
நிலவுமே. |
அபிராமி தன்பால் வந்து புகலடையும் அடியவர்களுக்குச் சொர்க்க லோக பதவியை அன்பொடு தந்து, தான் பிரமதேவனுடைய நான்கு முகத்திலும், பசிய தேன் ஒழுகும் துழாய் மாலையும் பருத்த கவுத்துவ மணியும் அணிந்த திருமாலின் திருமார்பிலும், சிவபிரானது வாம பாகத்திலும், செந்தேன் சொரியும் பொற்றாமரை மலரிலும், பரவிய கிரணங்களையுடைய சூரியனிடத்திலும், சந்திரனிடத்திலும் போய் வீற்றிருப்பாள்.போகப் பொருள்கள் பலவுடையதாகி விரிந்த வான் உலகத்தைத் தந்துவிட்டுத் தான் குறுகிய இடங்களில் போய் வீற்றிருப்பாளென்று நயம் பெறக் கூறினார்.
விளக்கம்:
தாயே! அபிராமி, நீ நான்முகங்களையுடைய பிரம்மனின் படைப்புத் தொழிலில் இருக்கின்றாய்! பசுமையான தேன் கலந்த துபள மாலையையும், நவமணி மாலைகளையும் அணிந்த மார்பினனாகிய திருமாலின் மார்பில் இருக்கின்றாய்! சிவபெருமானின் இடப்பாகத்திலும், பொன் தாமரை மலரிலும், விரிந்த கதிர்களுடைய சூரியனிடத்திலும், சந்திரனிடத்தும் தங்கியிருக்கின்றாய். உன்னைச் சரணமென்று வந்தடையும் பக்தர்களைத் துயரங்களிலிருந்து நீக்கி, வானுலக வாழ்வைக் கொடுப்பவள் நீயே.
இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும்
அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு
மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்
ஓம்
நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
செவ்வாய், டிசம்பர், 3, 2024
No comments:
Post a Comment