அபிராமி அந்தாதி-38
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
ஞாயிறு, டிசம்பர், 8, 2024
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது
அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை முப்பத்து ஏழு பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் முப்பத்து எட்டாவது பாடலைப் பார்ப்போம்.
இந்த பாடலில் அபிராமிப்பட்டர் அம்பாளின்
வடிவழகில் சிவபெருமான் மயங்கி மகிழ்ந்து தோற்றுப் போகிறார் என்பதையும் ,அம்பாள்
தன் மெய்யன்பர்களுக்கு இந்திர லோகம் ஆளும் தேவேந்திரப் பதவியையும் வழங்குவாள்
என்பதையும் கூறுகின்றார்
வேண்டியதை வேண்டியவாறு அடைய
பவளக் கொடியில் பழுத்தசெவ் வாயும், பனிமுறுவல்
தவளத் திருநகையும் துணையா, எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது, துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர், அமராவதி ஆளுகைக்கே.
பவளக்
கொடியில் |
பவளக் கொடியில் |
பழுத்த
செவ்வாயும் |
பழுத்த பவளம் போல் இருக்கும் செவ் விதழ்களும் |
பனி
முறுவல் |
குளிர்ந்த முறுவலும் |
தவளத் |
முத்து போன்ற பற்கள் தெரிய செய்யும் |
திருநகையும் |
புன்னகையும் |
துணையா |
துணையாகக் கொண்டு |
எங்கள்
சங்கரனைத் |
எங்கள் (தலைவனாம்) சங்கரனைத் |
துவளப்
பொருது |
துவண்டு போகும்படி போரிட்டு |
துடியிடை
சாய்க்கும் |
உடுக்கையைப் போன்ற இடையை கீழே
சாய்க்கும் |
துணை
முலையாள் |
ஒன்றிற்கு ஒன்று துணையான முலைகளை
உடையவள் |
அவளைப்
பணிமின் கண்டீர் |
அவளைப் பணியுங்கள் |
அமராவதி
ஆளுகைக்கே |
தேவருலகாம் அமராவதியை ஆளுவதற்கு. |
நல்ல இன்பப் பதவி வேண்டுமென்று நினைக்கும் மனிதர்களே, இந்திரப் பதவியைப் பெற்றுத் தேவலோகராசதானியாகிய அமராவதியை ஆள வேண்டுமெனெனின் அதன்பொருட்டு, பவளக் கொடிபோலக் கனிந்த செவ்வாயும் குளிர்ந்த புன்னகையோடு கூடிய வெள்ளிய அழகிய பல் வரிசையும் தமக்குத் துணையாக நிற்க, எங்கள் கடவுளாகிய சிவபெருமானைக் குழையும்படியாக எதிர்ப்பட்டுத் துடிபோன்ற இடையைக் கனத்தால் மறையச் செய்யும் இரண்டு தனங்களை உடையவளாகிய அபிராமியை வழிபடுவீர்களாக.
விளக்கம்:
என் அன்னை அபிராமி பவளக்கொடி போலும் சிவந்த வாயை உடையவள். குளிர்ச்சி தரும் முத்துப்பல் சிரிப்பழகி, அது மட்டுமா? எம் ஈசன் சங்கரனின் தவத்தைக் குலைத்தவள். எப்படி? உடுக்கை போலும் இடை நோகும்படியுள்ள இணைந்த முலைகளால்! அப்படிப்பட்டவளைப் பணிந்தால் தேவர் உலகமே கிடைக்கும். ஆகவே அவளைப் பணியுங்கள்.
இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும்
அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும்
கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும்
பாத்திரமாகுங்கள்
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
ஞாயிறு, டிசம்பர், 8, 2024
No comments:
Post a Comment