Tuesday, December 10, 2024


 


 

அபிராமி அந்தாதி-40

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

செவ்வாய், டிசம்பர்,  10,  2024

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை முப்பத்து  ஒன்பது பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் நாற்பதாவது பாடலைப் பார்ப்போம்.

இந்த பாடலில் அபிராமிப்பட்டர்  நெற்றிக் கண்ணுடையவளும்,தேவர்கள் விழைந்து பணிந்து வணங்குபவளும் தன் மீது அன்பில்லாதவர்க்ளால் அணுகமுடியாதவளுமான அபிராமி தனக்கு நெருங்கிய்வளாக இருப்பது தான் முற்பிறவீல் செய்த த்வ்த்தின் பயனே எங்கிறார்

வாணுதற் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற் கெண்ணிய எம் பெரு மாட்டியை, பேதைநெஞ்சிற்
காணுதற் கண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு
பூணுதற் கெண்ணிய எண்ணமன்றோ, முன்செய் புண்ணியமே.

வாணுதற்

ஒளி பொருந்திய நெற்றிக்

கண்ணியை,

கண்ணை உடையவளை,

விண்ணவர் யாவரும்

விண்ணில் வாழும் தேவர்கள் யாவரும்

வந்திறைஞ்சிப்

வந்து வணங்கிப்

பேணுதற் கெண்ணிய

போற்றுதற்கு விருப்படும்

எம் பெரு மாட்டியை

எங்கள் தலைவியை,

பேதைநெஞ்சிற்

ஒன்றுமறியா பேதை நெஞ்சில்

காணுதற்

காணுவதற்கு

கண்ணியள் அல்லாத

எளிதில்லாத

கன்னியைக்

கன்னியை

காணும் அன்பு பூணுதற்

காணும் அன்பு கொள்ளவேண்டும்.

கெண்ணிய எண்ணமன்றோ

என்று எண்ணினேனே

முன்செய் புண்ணியமே.

அந்த எண்ணம் நான் முன்பு செய்த புண்ணியப் பயன் தானே.

 

ஒளி பொருந்திய நெற்றியிலே திருவிழி படைத்தவளை, தேவர்களெல்லோரும் வந்து வழிபட்டுப் பூசை செய்ய நினைத்ததற்கு லட்சியமாகிய எம் தலைவியை, அறியாமையையுடைய நெஞ்சினாற் காண்பதற்கு அருகே உள்ளவள் அல்லாத கன்னிகையைத் தரிசித்துப் பேறு பெறும் அன்பை மேற்கொள்ளுவதற்கு எண்ணிய எண்ணமன்றோ முற்பிறவிகளிலே செய்த புண்ணியத்தின் பயனாவது?

விளக்கம்: 

ஒளி பொருந்திய நெற்றியுடையவள் அபிராமி! தேவர்களும் வணங்க வேண்டும் என்ற நினைப்பை உண்டு பண்ணக்கூடியவள்! அறியாமை நிறைந்த நெஞ்சுடையார்க்கு எளிதில் புலப்படாதவள். என்றும் கன்னியானவள். இப்படிப்பட்டவளை நான் அண்டிக் கொண்டு வணங்க எண்ணினேன். இதுவே நான் முற்பிறவிகளில் செய்த புண்ணியமாகும்.


 

இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

செவ்வாய், டிசம்பர்,  10,  2024

 

 

  

  

No comments:

Post a Comment