ஓம்
நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
சனி, டிசம்பர், 14,
2024
ஆன்மீக
அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை
நார்பத்து மூன்று பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் நாற்பத்து நாலாவது பாடலைப்
பார்ப்போம்.
இந்த பாடலில் அபிராமிப்பட்டர் அம்பாள் எப்படி ஒரு தவசியாக
இருக்கிறாள் என்பதையும்,அன்னையே பரமேஸ்வர ருக்கு மனைவியாகவும் அன்னையாகவும் இருந்து
எப்படி எல்லா தெய்வங்களுக்கும் மேலான தெய்வமாக இருக்கிறாள் என்பதையும் விளக்குகின்றார்
பேதபுத்தி நீங்க
தவளே இவள், எங்கள் சங்கரனார் மனை
மங்கலமாம்
அவளே, அவர்தமக் கன்னையும் ஆயினள், ஆகையினால்,
இவளே கடவுளர் யாவர்க்கும்
மேலை இறைவியுமாம்,
துவளேன், இனிஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு
செய்தே.
தவளேஇவள், |
தவம் செய்யும் நமது தாயன அமிராமியே |
எங்கள் |
எங்களுடைய |
சங்கரனார் |
தலைவராம் சிவபெருமான் மனையாளாகி |
மனைமங்கலமாம் |
அவர் இல்லத்துக்கு மங்களம் சேர்ப்பவளாம் |
அவளே, |
அம்மையே ஆதிபராசக்தியாக |
அவர்தமக்கு |
சிவபெருமானின் |
அன்னையும் |
தாயாராகவும் |
ஆயினள், |
ஆயினாள் |
ஆகையினால், |
அதனால் |
இவளே கடவுளர் |
அபிராமி அன்னையே அனைத்துக் கடவுளுக்கும் |
யாவர்க்கும்மேலை |
மேலான தலைவியும் |
இறைவியுமாம், |
தெய்வமுமாவாள் |
|
|
இனிஒரு தெய்வம் உண்டாக |
இனிமேல் வேறு தெய்வங்களை |
மெய்த்தொண்டு |
உண்டு என்று தொண்டுசெய்து |
செய்தே. |
|
துவளேன், |
அயர்ச்சி அடைய மாட்டேன் |
தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை
மங்கலமாம் – நமக்குத் தாயான இவளே எங்கள் சங்கரனாரின்
மனை மங்கலம் இல்லத்திற்கு நன்மையைச் சேர்ப்பவள்.
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள் – அவளே ஆதிபராசக்தி என்னும் உருவில்
சங்கரனாருக்கு அன்னையும் ஆயினள்.
ஆகையினால் இவளே கடவுளர் யாவர்க்கும்
மேலை இறைவியும் ஆம் – ஆதலால் இவளே கடவுளர் எல்லாருக்கும்
மேலான தலைவியானவள்
துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த்
தொண்டு செய்தே – இனி மேல் வேறு தெய்வங்களைத் தொழுது
தொண்டு செய்து அயர்சி அடையமாட்டேன்.
நெஞ்சிற்கு அணிய தியானப் பொருளாக உள்ள இப்பிராட்டி தவம் செய்யும் உமாதேவியே; எங்கள் பிரானாகிய சங்கரனார் மனைக்கு மங்கலமாகிய பத்தினி ஆகிய இவளே அவருக்கு ஒரு திறத்தில் தாயுமானாள்; ஆகையினால் அவளே தேவர் யாவருக்கும் மேலான தலைவியாவாள்; இவளைத் தெய்வமாகக் கொண்டு தொண்டு புரிதலல்லது வேறொரு தெய்வம் உண்டென்பதாக எண்ணி மெய்யா தொழும்பு செய்து தளைச்சி அடையேன்.
விளக்கம்:
எங்கள் இறைவனாகிய சங்கரனின் இல்லத் துணைவியே! அவருக்கே அன்னையாகவும் (பராசக்தி ஈன்ற பரமசிவம்) ஆனவளே! ஆகையால் நீயே யாவர்க்கும் மேலானவள்! ஆகவே, உனக்கே இனி உண்மையான தொண்டு செய்வேன். ஆதலால், இனி நான் துன்பங்களால் துவள மாட்டேன். தாயே!
இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும்
அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு
மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்
ஓம்
நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
சனி, டிசம்பர், 14,
2024
No comments:
Post a Comment