Thursday, November 29, 2012


ஸ்ரீ ருத்ரம்
பகுதி  4
ஸ்ரீ ருத்ரம் பதினொறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது அவைகள் அனுவாகங்கள் எனப்படுகின்றன.
  முதல் அனுவாகத்தில் ஸ்ரீ ருத்ரர் தன்னுடைய கோர ரூபத்தை சாந்தமாக மாற்றிக்கொள்ளவும் அவருடைய ஆயுதங்களை தள்ளி வைக்கவும் வேண்டப்படுகிறார் அவர் சாந்தமடைந்தபின் இம்மந்திரம் யாரால் ஜபிக்கப்படுகிறதொ அவர்களது பாபங்களை அழிக்குமாறும் வேண்டப்படுகிறார்
  முதல் அனுவாகம் எல்லாப்பாபங்களை அழிக்கவும்,தலைமைபதவியடையவும் இறையருள் பெறவும் பஞ்சத்திலிருந்து பாதுகாக்கப்படவும்,பயம் போக்கப்படவும், ஆநிறைகள் பெறவும் மரணம் புலி திருடர்கள்,பேய்கள் தீயசக்திகள் போன்றவைகளின் மீது பயம் போக்கவும் வேண்டப்படுகிறது மேலும் அது வியாதிகளினின்றும் காக்கும் கவசமகவும்,கோள்களின் தோஷங்களை நீக்குவதகவும்,தீய கர்ம வினைகளைப்போக்குவதாகவும் வளமான வாழ்வும் சிறந்த மக்களை அடையவும், எல்லா செல்வங்களை அடையவும் எதிரிகளை அழிக்கவும் உத்வுகிறது
  இப்போது ஸ்ரீ ருத்ரத்தின் முதல் அனுவாகத்திலிருந்து ஆரம்பிப்போம்

ஓம் நமோ பவதே ருத்ராய
நமஸ்தே ருத்ர மன்யவ உதோத இஷவே நமஹ
நமஸ்தே அஸ்து தவனே பாகுப்யாம் முததே நமஹ
  ஓ ருத்ர தேவரே தங்களுடைய கோபத்துக்கும் பாணங்களுக்கும் வில்லிற்கும் இரு கரங்களுக்கும் என் வணக்கங்கள்
யாத இஷு சிவதமா சிவம் ப்பூவ தே தனுஹூ
சிவம் சரவ்யா ய தவ தயா நோ ருத்ர ம்ருடய
  ஓ ருத்ர தேவரே தங்களுடைய கோபத்தை விடுத்துப் புனிதமடைந்த தங்களுடைய வில் பாணங்கள் மற்றும் அம்பராதுணி இவைகளின் வயிலாக எங்களுக்கு மகிழ்வளியுங்கள்
யாதே ருத்ர சிவா தனூரகோரா பாபஹாஷினி
தயா நஸ்தனூவ சாந்தமயா கிரிஷந்தா பிசாஹஷிகி     6
  ஓ ருத்ரரே தங்களுடைய கோரமில்லாததும் எங்களுக்கு துன்பம் தராததும் மிகப் புனிதமானதும் இன்பம் அளிக்கத்தக்கதுமான் தங்களின் ரூபத்தின் வாயிலாக எங்களுக்கு ஒளி காட்டி வழி நட்த்திச்செல்லுங்கள்

  இந்த ஸ்ரீ ருத்ரத்தின் முதல் அனுவாகத்தின் ஆறு வரிகளையும் இன்று கற்றுக்கொள்ளுங்கள் ஈசனருள் பெறுங்கள்


No comments:

Post a Comment