Monday, November 26, 2012


ஸ்ரீ ருத்ரம்
பகுதி  2
ருத்ரத்தின் மகிமை சொல்லுக்கடங்காத்து வேதம் சொல்லி துதிக்கும் போது அவன் அனைத்தையும் அருள்கிறான் ஈசன் எங்கெல்லாம் எந்தெந்தெந்த வடிவங்களில் எல்லாம் இருக்கிறார் என்பதை அழகாச்சொல்லுகிறது ஸ்ரீ ருத்ரம்
 சகல உலகமும் அவரே என்பதை  ஜெகதாம் பத்யே என்ற வாஸ்கம் சொல்லுகிறது
 சகல தேவர்களின் இருதயங்களிலும் அவரே உறைகிறார் என்பதை
தேவானாம் ஹிருதயேப்ய என்றும்
 வேண்டுவோர்க்கு வேண்டுவன அருள்பவர் என்பதை விசின்வத்கேப்யஹா என்றும்
மகான்கள்வடிவிலும் அற்ப சக்தி உள்ளவர்கள் வடிவிலும்விளங்குகிறான். சேனைத் தலைவர்களாகவும் சேனைகள்எனவும் இருப்பதை , சேனாப்ய: சேனா நிப்யச்சஎன்கிறதுருத்ரம்அதே சமயம் தேர் ஓட்டுபவர் வடிவிலும்(க்ஷத்ருப்ய: ) ,தச்சர் வடிவிலும் (தக்ஷப்ய:) , குயவர்வடிவிலும் (குலாலேப்ய:கருமார்வேடத்திலும்(கர்மாறேப்ய:பறவைகளைப் பிடிக்கும் வேடர்வடிவத்திலும்புஞ்சிஷ்டேப்ய:) மீன் பிடிக்கும் செம்படவவடிவிலும்நிஷாதேப்ய:) இருக்கிறான்.


சிவ ச்வரூபமோ அலாதியானதுஆலகால விஷத்தைஉண்ட கண்டம் (நீலக்ரீவாய); அதன் மேல் விபூதி பூசப்பட்டுஇருக்கிறது (சிதிகன்டாய) . ஒரு சமயம் பார்த்தால் நீண்டஜடா முடி (கபர்தினே) இருக்கிறதுமறு கணம் பார்த்தால்கேசம் நீக்கப்பட்ட (வ்யுப்தகேசாயதலை.ஆயிரக்கணக்கான கண்கள்(சகஸ்ராக்ஷாய) . குறுகியவாமன வடிவுடைய (ஹ்ரச்வாய்ச வாமனாய்சஅவனே ,பெரிய வடிவத்துடனும் ( ப்ருஹதேதோன்றுகிறான்பாலவிருத்த வடிவங்களிலும் காட்சி அளிக்கிறான்வேதங்களால்துதிக்கப்படுவனாகவும் (ச்துத்யாயவேத முடிவில்வீற்றிருப்பவனாகவும்அவசான்யாயவிளங்குகிறான்.

ஆகவே தர்மத்தின் வடிவமான பரமேச்வரனைத் தர்ம தேவதையே வாகனமாகத் தங்குகிறது என்பதை, "பப்லுசாய" என்ற சொல்லால் வேதம் வர்ணிக்கிறது. சம்சாரமாகிய மரம் ஜனன மரணங்களுக்கு ஏதுவானது. அதை வேரோடு வெட்டி வீழ்த்தி முக்தியைத் தருபவன் ஆதலால் " பவச்ய ஹேத்யை " எனப்படுகிறான். பக்தனைக் காப்பதற்காக அவன் கூடவே செல்லுபவன் என்று "தாவதே" என்ற பதத்திற்கு அர்த்தம் சொல்லுவார்கள் பெரியவர்கள். எனவே, பக்தனுக்காகத் தூது செல்லவும் தயங்குவதில்லை பரமன் என்பதைத் திருவாரூரில் சுந்தரருக்காகப் பரவை நாச்சியாரிடம் தியாகராஜப் பெருமான் தூது சென்றதால் அறியலாம். அது மட்டுமா? இன்னும் உனக்காக வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா , அதனையும் செய்கிறேன் என்கிறானாம். இதைத்தான் ஸ்ரீ ருத்ரம், "தூதாய ச ப்ரஹி தாய ச " என்று காட்டுகிறது. 
தவறு செய்யாதவர்கள் உலகத்தில் யாரும் இல்லை. அதிலும் தனது பக்தன் செய்யும் தவறுகளைப் பொறுத்துக்கொண்டு மன்னிக்கிறான் ஈச்வரன். இதைத் தான் வேத மாதா நமக்கு, "ஸஹமானாய " என்ற பதத்தால் உணர்த்துகிறாள்.
நமஸ் ஸோமாய ச என்று தொடங்கும் எட்டாவது அனுவாகத்தில் ஸ்ரீ பஞ்சாக்ஷரம் வருவதால் பெரியவர்கள் இதை ஜபிப்பதை விசேஷமாகக் கருதுவார்கள். இதைத் தான் ஞான சம்பந்தரும், "வேதம் நான்கினும் மெய்ப் பொருள் ஆவது நாதன் நாமம் நமசிவாயவே " என்று பாடினார். இவ்வளவு மகிமை வாய்ந்த ஸ்ரீ ருத்ர பாராயணத்துடன் சி வ  பூஜை செய்பவன் சிவனாகவே  ஆகிவிடுகிறான். சுவாமியைத் தொட்டு பூஜை பண்ணிய கைகள் அத்தன்மையை அடைந்து விடுவதை, "அயம்மே ஹஸ்தோ பகவான்" என்று சொல்லும் ஸ்ரீ ருத்ரம், அப்படிப் பூஜை செய்யும் வலது கை,  நோய் தீர்க்கும் மருந்தாகவும் ஆகிவிடுவதாகக் கூறுகிறது.

       இன்னும் ஸ்ரீ ருத்ரத்தின் மஹிமையை சொல்லிக்கொண்டே போகலாம்
இதையே நான் ஈசனருளால் என்னால் முடிந்தவரையில் எளியோர்கள் புறிந்துகொள்ளும் வகையில் தர ஈசன் அருள்வேண்டித்துவங்குகிறேன் 
No comments:

Post a Comment