Wednesday, November 28, 2012


ஸ்ரீ ருத்ரம்
பகுதி  3
சிவன் ஆதிமூலமான்வர் அவரே சகல கடவுள்களுக்கும் தேவர்களுக்கும் மூலாதாரமானவர் ஒரு பெரிய் மரத்தின் வேரிலே தண்ணீர் ஊற்றும் போது அது அதன் கிளைகள் இலைகள் காய் கனிகள் என்று எல்லா இடமும் பரவுவதுபோல் நாம் ஈசனுக்களிக்கும் பிரார்த்தனை எல்லாக்கடவுள்களையும் சென்றடைகிறது ப்ரதோஷ வேளையிலே சகல கடவுள்களும் தேவ்ர்களும் ஈசனைத் தரிசிப்பதற்காக சென்றுவிடுவதால் ப்ரதோஷ நேரத்தில் சிவனை வழிப்டும்போது அந்தப்பிரார்த்தனை சகல கடவுள்களையும் சென்றடைகின்றது.பல கோயில்களில் ப்ரதோஷ காலங்களில் சன்னிதி மூடியிருப்பதன் காரணம் இதுவேயாகும்
சிவபிரார்த்தனைகளில் மிகசிறப்புடையது ஸ்ரீ ருத்ரமாகும்
இது பல ஜன்ம பாபங்களையும் போக்கவல்லது
வேதத் துதிகளிலே மிகசிறப்புடையது ஸ்ரீ ருத்ரமாகும்
ஸ்ரீ ருத்ரத்தில் சொல்லப்படுள்ள முக்கியமான் மந்திரங்களாவன
1.      த்ரய்ம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம்
   உருவாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்
  இது ம்ருத்யுஞ்சய மஹா மந்திரம் எமனை வென்று எம பயம் போக்கவல்லது
2 நமஸ்தே அஸ்து பகவான் விஸ்வேஸ்வராய மஹாதேவாய       த்ரயம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்னிகாலாய காலாக்னி ருத்ராய       நீலகண்டாய ம்ரித்யுஞ்ஜயாய சர்வேஸ்வராய சதாசிவாய ஸ்ரீமன் மஹாதேவய நமஹ
  இது ஈசனின் பலரூபங்களையும் பெருமைகளையும் சொல்லும் ஸ்லோகமாகும்
ஓம் நமசிவாய
   இதுவே பஞ்சாக்ஷரி மந்திரம் ஐந்தெழுத்து மந்திரம் ஈசனின் ஸ்வரூபம் என்றெல்லாம் அழைக்கப்புடும் அதி உன்னதாமான மந்திரமாகும்
  பஞ்சாக்ஷரத்துக்கு மிஞ்சிய மந்திரம் வேறொன்றுமில்லை
பஞ்சாக்ஷரத்தால் ஈசன் மகிழ்வார்.சடாக்ஷரத்தால்[சரவனபவா] அவர் மைந்தன் முருகன் மகிழ்வார் அஷ்டாசரத்தால்[நமோ நாராயணாய] அவர் மைத்துனர் பெருமாள் மகிழ்வார்
  இதையே ஞானசம்பந்தப்பெருமானார் வந்த கூற்று அஞ்ச உதைத்தன் அஞ்செழுத்துமே என்று அஞ்செழுத்துபதிகத்திலே கூறுவார் மார்கண்டேயரை எமன் பாசக்கயிறு வீசிப் பிடிக்கவந்தபோது அவர் நமசிவய என்ற பஞ்சாக்ஷரி மந்திரத்தை சொன்ன மாத்திரத்தில் அந்த கூற்றுவன் அஞ்சுமாறு ஈசன் எமனை உதைத்தார் என்று சொல்லுகிறது
  இத்தகைய பெருமை வாய்ந்த இந்த பஞ்சாக்ஷரி மந்திரம் வருவது ஸ்ரீ ருத்ரத்தில் தான் ஓம் நமசிவாய நம் எல்லோருக்கும் தெரியும் ஆனால் அது ஸ்ரீ ருத்ரத்திலிருந்துதன் வந்த்து என்பது எத்தனை பேருக்குத்தெரியும்
  அய்ம் மே ஹஸ்தெ பகவான் அயம் மே பஹவத்ர
  அயம் மே விஷ்வ பேஷஜே அயம் சிவா விமர்சின

இதிலே பக்தனுடைய கை கடவுளுக்கு இணையானது அது இறைவனிலும் மேலானது உலகின் சகல் ஜீவன்களின் வியாதிகளுக்கும் மருந்தானது                          ஏனென்றால் இந்தக்கை சிவனை வன்ங்குகிறது என்று சொல்லுகிறது
சிவனை வணங்குகின்ற ஒரே காரணத்துக்காக சிவபக்தனின் கை கடவுளாகவு அதற்கு மேலும் சகலவியாதிகளுக்கும் மருந்தாகவுமாகிறது என்றால் சிவ வழிபாட்டின் பெருமையை சொல்லவும் முடியுமோ
  இத்தகைய சிறப்புடைய ஸ்லோகங்கள் எல்லாம் ஸ்ரீ ருத்ரத்தில்தான் வருகின்றன

No comments:

Post a Comment