Saturday, December 15, 2012

                                           டெங்குக் காய்ச்சல்    நீண்ட நாட்களுக்குப்பின் ஒரு மருத்துவத் தலைப்பில் இன்று டெங்குக் காய்ச்சல் பற்றி
 எழுதலாம் என எண்ணுகிறேன்.இன்று தமிழகத்தையே ஆட்டிப்படைத்துக்
 கொண்டிருக்கின்ற விஷயம் டெங்குக் காய்ச்சல்தான் காய்ச்சல் என்று வந்த உடனே
 எல்லோரும் பயப்படுவது இது டெங்குவாக இருக்குமோ என்பதுதான்

.
  இதுவும் மற்ற வைரச் காய்ச்சல்கள் போன்றதுதான்.காய்ச்சல் வந்தவுடனேயே அதை
அலக்ஷியம் செய்யாமல் தகுந்த மருத்துவரிடம் காட்டி முறையான சிகிச்சை 
மேற்கொண்டால் இந்நோய் பற்றி எந்த பயமோ கவலையோ கொள்ளத்தேவை இலை


டெங்கு காய்ச்சல் என்பது திடீரென தோன்றும் ஒரு வைரஸ் நோயாகும். இது டெங்கு வைரஸின் டைப்-1, டைப்-2, டைப்-3 மற்றும் டைப்-4 ஆகிய 4 வகை வைரஸ்களாலும் ஏற்படுவது. ஒரு வகையான கொசு மூலம் இது பரவுகிறது. வெப்ப மண்டல மற்றும் வெப்ப மண்டல அணிமையிடம் சார்ந்த நாடுகளில் காணப்படும் ஏடிஸ் ஏஜிப்டி (Aedes aegypti) என்ற ஒரு வகை கொசுவால் இது பரவுகிறது.

நோய் அறிகுறிகள் :

1. 
காய்ச்சல், திடீரெனக் காய்ச்சல் ஏற்பட்டு, 40-40.5 டிகிரி செல்சியஸ் வரை உடல் உஷ்ணம் திடீரென அதிகரித்தல்.

2. 
சருமத்தில் வேனற்கட்டிகள், அல்லது வெடிப்புகள், நோய் தொற்றிய 3-4 நாட்களில் உடலின் நடுப்பகுதியில் தோன்றி, முகம், கை, கால்கள் என்று பரவ தொடங்கும்.

3. 
தசை வலி.

4. 
மூட்டுகளில் வலி.

5. 
தலைவலி.

நோய்க் கணிப்பு :

வெள்ளை அணுக்களின் மொத்த அளவை பரிசோதனை செய்தல், அதாவது ரத்தத்தில் சாதாரணமாக இருக்க வேண்டிய லியூகோசைட்ஸ் [WHITE BLOOD CWLLS ] என்ற வெள்ளை ரத்த அணுக்களின் அளவு (4000-10,000 சி.எம்.) எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை பரிசோதனை செய்தல்.

த்ராம்போசைட்டோபீனியா [THROMBOCYTOPNAEA]: டெங்கு காய்ச்சலின் போது ரத்தத்தில் உள்ள ரத்த வட்டுக்களின் (platelets)எண்ணிக்கை குறைவாக காணப்படும்.

டெங்கு வைரஸிற்கு எதிராக உடல் உற்பத்தி செய்யும் ஆன்ட்டி-பாடி [ANTIBODY]என்று அழைக்கப்படும் எதிர்ப்பு சக்தியை பரிசோதனை செய்யும் ரத்த நிண நீர் பரிசோதனை ஆகியவைகள் இந்த நோயை கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும்.
சாதாரண சோதனைசாலைகளில் செய்யப்படும் பரிசோதனைகள்[cord test]  நம்பகரமான முடிவுகளைத்தரும் என்று சொல்லமுடியாது
ELISA என்ற டெஸ்ட் மூலம் மட்டுமே ஒரளவுக்கு நம்பகரமான் முடிவுகளைப்பெறமுடியும்

1990 
ஆம் ஆண்டுகளில் கொசு மூலம் பரவும் முக்கியமான நோயாக டெங்கு இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் இதற்கு பாதிப்படைந்துள்ளனர். இது ஒரு தொற்று நோயாக பரவும் நெருக்கடி மிகுந்த பகுதிகளில் சுமார் 2.5 பில்லியன் மக்கள் வாழ்ந்து வருவதாக உலக சுகாதார கழகம் தெரிவித்துள்ளது.

ஏடிஸ் ஏஜிப்டி என்ற கொசு அதிகமாக காணப்படும் தென் கிழக்கு ஆசியா, இந்தியா, மற்றும் அமெரிக்க வெப்பமண்டல நாடுகளில் டெங்கு காய்ச்சல் அதிகமாக வருகிறது. வெப்பமண்டல நாடுகளில் இது மிகவும் சகஜமாக தோன்றுகிறது. மக்கள் நெரிசல், தண்ணீரை திறந்த வெளியில் சேமிப்பது, பாசன கால்வாய்கள் ஆகியவைகளில் இந்த வகை கொசுக்கள் அதிகம் முட்டையிடுகின்றன.

சிகிச்சை :

டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை, ஓய்வும், திரவங்கள் வகை உணவு அதிகம் உடலில் ஏற்றப்படுவதும், உடல் உஷ்ணத்தைக் குறைக்க அசிட்டாமினோஃபென் [PARACETAMOL]மாத்திரைகள் ஆகியவை அவசியம். ரத்த வட்டுக்களை கண்காணிக்கும் அளவுக்கு சீரியஸாகப் போகும் போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அவசியம். இதற்கான தகுந்த ஆலோசனைகளை உங்கள் மருத்துவர் வழங்கக்கூடும். ரத்த வட்டுக்கள் அளவு 40,000-த்திற்கும் குறைவாக இறங்கும்போது புதிய ரத்தமோ அல்லது ரத்தவட்டுக்கள் நிறைந்த ஊனீர் (பிளாஸ்மா), அதாவது பி ஆர் பி ஏற்றப்படும்.

கொசுக்கடிகளிலிருந்து நம்மை பாதுகாப்பதன் மூலம் இதனை தடுக்கலாம். பாதுகாப்பான உடைகள், கொசு விரட்டிகள் இவைகளின் பங்கு அவசியமாகும். வாழ்விடங்களுக்கு அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். மேலும் வெள்ள காலங்களில் எந்த நீரையும் நன்றாக காய்ச்சிய பிறகு பயன்படுத்துவது மிக மிக அவசியமாகும்.

  டெங்குக் காய்ச்சலே வந்த்தாலும் பீதி அடையாமல் முறையான் மருத்துவம் செய்தால் பயமடையத்தேவை இல்லை

No comments:

Post a Comment