Thursday, May 9, 2013

ஸ் துதி  க ள்


ஸ்ரீ அகோரீசன் திருப்பள்ளி எழுச்சி

2
ஈசனின் தென் முகமாய்த் திகழ்பவனே
நேசமிகுநல் அடியார்க் கருள்பவனே
பாசமுடன் நான் பாடும் பள்ளிஎழுபாடல்கேட்டு
தேசம் நாளும் நலமுற அகோரீசா பள்ளிஎழுந்தருளாயே            1

சேவல்கள் கூவிட் காகங்கள் கரைந்திட
ஆவலுடன் மஞ்ஞைகள் தோகைவிரித்தாடிட
ஆதவனும் குணதிசை மெல்ல எழுந்திட உன்
பாதம் நான்  பணிந்திடஅகோரீசா  பள்ளி எழுந்தருளாயே                   2

பரமனின் கருநிற வடிவான கருணதயாளா
கரங்கள் எட்டினால் மங்களங்கள் பலவருளுமீசா
மரம் செடிகொடிகள் ஆதவன் வரக்கண்டு ஆடினவே
வரம்பலவருள்பவா வணங்கி தொழ அகோரீசா  பள்ளி எழுந்தருளாயே  3 



வரங்கள் வேண்டி நல் வேதமோதும் வேதியர் ஒலியும்
உரங்களிட்டு நற்பயிர் வளர்க்கும் உழவர் ஒலியும்
அரவணி ஈசன் புகழ் பாடும் அடியார் பாட்டொலியும்
பரவித்திகழ் வெண்காடுறை அகோரீசா பள்ளி எழுந்தருளாயே           4 

ரீங்காரமிடும் வண்டுகளின் பாங்கான இன்னிசையும்
ஓங்காரமிடும் வங்கக்கடலின் பேரலை ஓசையும்
பாங்காய் பெண்டிர்பாடும் பதிகப்பண் ஒலியும்
நீங்காது பரவு வெண்காடுறை அகோரீசா பள்ளி எழுந்தருளாயே      5

வேதநாத்னே நீ நாளும் மகிழ்ந்து உணர்ந்து விழையும்
நாதஒலியும் உள்ளத்தை உருக்கும்  அடியார் உருகிப்பாடும்
கீதஒலியும் மறையோர் தப்பாது தினம்தியானித்து ஓதும்
வேதஒலியும் திகழ் வெண்காடுறை அகோரீசா பள்ளி எழுந்தருளாயே  6


கழனியிலெல்லாம் இளநெற்கதிர் மெல்ல மெல்ல ஆடிட
பழங்கள்  முதிர்ந்து உதிர்ந்து பரந்து மணம்பரப்பும்
வரங்கள் நாளும் தப்பாது பலவருளும் வெண்காடுறை
கரங்கள் எட்டுடை அகோரீசா பள்ளி எழுந்தருளாயே   
      
             7



செந்தாமரையும் மல்லி சம்பங்கியும் நல்மணம் பரப்ப
சந்தனமும் சாம்பிராணியும் தூபங்களும் மெல்மணம்வீச
வந்து வீசும் தென்றலும் குளிர் வாடைகாட்டி மகிழ்த்தும்
அந்தமில் புகழ் வெண்காடுறை அகோரீசா பள்ளி எழுந்தருளாயே      8

வேதங்கள் நாலும் நாளும் ஓதக்கற்றிடும் இளம் பாலகரும்
கீதங்கள் இசைத்து  என்றும் ஈசன்புகழ் பாடும் சிவனடியாரும்
நாதங்கள் நாளும் இசைக்கும் தேவரடியாரும் இக்கணம் உன்
பாதம் பணி வெண்காடுறை அகோரீசா பள்ளி எழுந்தருளாயே           9

உறைய வைக்கும் குளிரிலும் நன்னீராடிவரும் அடியாரும்
மறையோதும் அந்தண்ரும் திருமுறையோதுமோதுவாரும்
குறையாவும் நீங்கி நிறைவான வாழ்வுவாழ சீர்மிகு
இறைவாழ்த்த  வெண்காடுறை அகோரீசா பள்ளி எழுந்தருளாயே 10

நல்லுயிர் மாந்தரும் அவர்தம் உற்றாரும் மற்றாரும்
பல்லுயிர் ஓம்பும் நல்லறவோரும் நல்லோரும்
எல்லோரும் இன்றிங்கு இப்பொழுதே கூடினர் ஆதியில் ஆட
வல்லான் நின்ற வெண்காடுறை அகோரீசா பள்ளி எழுந்தருளாயே     11




விண்னவரும் தேவரும் கிண்ணரரும் கந்தர்வரும்
மண்ணின் மாந்தரும் மாபெரும் மன்னரும்
எண்ணிலாப் புகழ்கொண்டோரும் ஏற்றமுடையோரும்
நண்ணிநாடும் வெண்காடுறை அகோரீசா பள்ளி எழுந்தருளாயே            12


முக்குளமும் மூவிருக்கமும் மும்மூர்த்திகளும்
எக்காலும் எல்லோரும் எவ்விட்த்தும் எவ்வாறும்
வளமான வாழ்வுற நல்லருள் தந்தருள் வெண்காடுறையென்
உளம்வாழ் அகோரீசா  உன்னடிதொழப் பள்ளி எழுந்தருளாயே                13     

ஐங்கரனார் பெரிய வாரணராய் பெருமையுடன் திகழ அப்பன்
சங்கரன்சாமி சுந்தர சுப்பிரமணியனாக வித்யாம்பிகையுடனுறை
எங்கள்தெய்வம் சுவேதாரண்யேஸ்வரராய் அருள்பாலிக்கும்  பெரு
மங்கலமிகு வெண்காடுறை அகோரீசா பள்ளி எழுந்தருளாயே              14

அம்மையும் அப்பனும் அயராது அருள்சுரந்து அடியார்க்கு
இம்மையும் மறுமையும் இடர்நீக்கி இன்பமருளி எந்நாளும்
எம்மை ஏழ்மை இன்னல் நோய்நொடி இன்றி நல்வாழ்வை
செம்மையுறும் வெண்காடுறை அகோரீசா பள்ளி எழுந்தருளாயே      15   




வெள்ளம் பெருக்கெடுத்து ஊரெல்லாம் நீரான காலத்தும்
துள்ளும் தூயாஆதவன் நெருப்பாய் சுட்டெரிக்கும் நாளிலும்
அள்ளும் மனம் மயக்கி இனிதீர்க்கும் வசந்தம் வந்தபோதும்
கள்ளமிலார் நாடும் வெண்காடுறை அகோரீசா பள்ளி எழுந்தருளாயே   16

பிள்ளையில்லார்க்கு நல்மக்கட்பேறருளி உடல்வருத்தும்
கொள்ளை நோய்கொண்டார் பிணிதீர்த்தருள்பொழிந்து பெரு
வெள்ளை யானை சாபம்தீர்த்தருள் செய்த எனதுள்ளம்
கொள்ளை கொண்ட வெண்காடுறை அகோரீசா பள்ளி எழுந்தருளாயே    17

கரங்கள் எட்டும் படைக்கலங்கள் பலப்பலக்கொண்டிலங்க
வரங்கள் வற்றாதருளும் வள்ளல் பெருமான் என்றும்
நிரந்தரமான் நடைக்கோலம் கொண்டருள்பாலிக்கும்
பரந்தபுகழ் வெண்காடுறை அகோரீசா பள்ளி எழுந்தருளாயே                 18

எள்ளுப்பூ நாசியும் இளமூங்கில் தோளும்கொண்டு மிக்க
கொள்ளை அழகோடுமிளிர் வித்யாம்பிகையுடனுறை மனம்
அள்ளும்எழில்மிகுந்து அருள்சுரக்கும் வெண்காட்டீசனருள்
வெள்ளை நிறப்பதியுறை அகோரீசா பள்ளி எழுந்தருளாயே                         19





முக்குள நீராடி மும்மூர்த்திகளை வலம் வந்து அன்றே
அக்கணம் தேவியர் மூவர் நல்லருள் நாடி தப்பாது
தக்க நலமருள் மூவிருக்கங்கள் தரிசனம் செய்தோருக்கு
எக்காலமுமருள் வெண்காடுறை அகோரீசா பள்ளி எழுந்தருளாயே      20

சிரம்தீப்பற்றியெரியழ்கும்  மார்பு மணிமாலைபூண்டவழகும்
கரமெட்டில் மணி வாள் பலகையுடன் சீரிலங்கு இரு
கரமேந்திய திரிசூலமொடு கொண்ட நடைக்கோலவழ்குடன் இலங்கும்
பரமேசா வெண்காட்டுறை அகோரீசா பள்ளி எழுந்தருளாயே                                   21  

கண்டம்கருத்ததோடு மேனியெங்கும் கருநிறமானது அன்று
உண்ட ஆலகால நஞ்சினாலோ கையில் சூலம் பாங்காய்க்
கொண்ட்து வல்வினைகளறுக்கவோ அழ்குமிகு நடைக்கோலம்
பூண்ட வெண்காடுறை அகோரீசா பள்ளி எழுந்தருளாயே                                   22

 

கண்ணுறையும் நெற்றியில் ந்ந்நீறு கனிவாயிலங்கநல்
விண்ணவரையும் மண்ணவரையும் எந்நாளும் காத்திடபல்
எண்ணில்லாப்படைக்கலங்கள் எட்டுக்கரமதில் மிளிரஎன்
எண்ணமெல்லாம் என்றும்நிறை அகோரீசா பள்ளி எழுந்தருளாயே          23



 

உள்ளம் சஞ்சலமுற்று சலனமிகுந்து நைந்திருந்தபோதும்
கள்ளம் சிறிதுமில்லா நல்ல மனத்துடனே உன்மீது
வெள்ளம்போல் பெருகிவரும் பக்தியுடன் நான் பணிவேன்
அள்ளக்குறையா அன்புடை அகோரீசா பள்ளி எழுந்தருளாயே                                    24 

உடல்நலிந்தகாலையும் முதுமை வந்தென்னை விடாது
அடர்ந்தபோழ்தினும் எக்காலும் எப்போதும் சிவநாம்ம்
விடாது ஓதும் சிவனடியர்ன் நலம் சிறக்க அருளைக்
கடலெனப் பொழியும் அகோரீசா பள்ளி எழுந்தருளாயே                             25


பன்னீரும் பட்டும் பிரியமுடன் பாங்காய் அணிந்திட
எந்நாளும் மனம்விழையும் வெண்காட்டகோரீசா
உன் நாம்ம் உள்ளமுருகி பந்நாளும் பக்தர் பாடிட
இந்நாள் இப்போதே இங்கு பள்ளி எழுந்தருளாயே                                     26   

ஞாயிறுதோரும் திருநாளாய் திரள்திரளாய் பக்தர்
பாயிரம் ஆயிரம்பாடி உன்னைத் துதிக்க குறைவிலாது
தேயுறு நிலவணி வேயுறுதோள் உமைபங்கன் அருட்கருணை
ஆயிரமாயருள் வெண்காட்டுஅகோரீசா பள்ளி எழுந்தருளாயே                   27 




மருத்துவன் மஹேஸ்வரன் அருள்பெற்று பெற்ற சூலத்தால்நல்
விருத்தரையும் விண்ணவரையும் நல்லோரையும் நாளும்பல்
வருத்தமுறச்செய்தவ்னை கோபமுற்று அனுக்கிரகித்தருளியநல்
கருத்தமேனி இலங்கு அகோரீசா பள்ளி எழுந்தருளாயே                                  28


பூமாலை புதுமலர் கொய்து நான் பணிவாய்ப்புணைந்து
பாமாலை நால்வர் நாளும்புணைந்த்தனை மனமுருகிப்பாடி என்
மனமாலை நின்னருள் நினைந்துருகி உன்னடி வாழ்த்திட
மாமாலையாய வெண்காடுறை அகோரீசா பள்ளி எழுந்த்ருளாயே             29 

நாடினேன் நின்னருட்கருணை நாளெல்லாம் நலமுடனே
பாடினேன் பரம்பொருளே பலப்பலப் பதிகப்பண் பக்தியுடனே
வாடினேனல்லேன் வருமிடர்கண்டு தினம்தினம்உனை எண்ணி
ஆடினேன் வெண்கடுறை அகோரீசா பள்ளி எழுந்த்ருளாயே              30

சீர்மிகு மார்கழியின் ஏற்றம நிறை நாள்முப்பதும் தப்பாது
பார்புகழ் ஈசன்பெருமையினை ஜெகன்னாதன் தினம் தினம்
ஆர்வமுடன் பாடிப்பள்ளி எழவேண்டிய பாட்ல் கேட்டு உவந்த
மார்பணி மணிமாலையழ்கா இனி தினம் பள்ளி எழுந்தருளாயே

திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய






No comments:

Post a Comment