Thursday, January 30, 2025

அபிராமி அந்தாதி--56


 

அபிராமி அந்தாதி-56

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

வியாழன், ஜனவரி  30,  2025

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை ஐம்பத்து ஐந்து பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் ஐம்பத்தாறாவது பாடலைப் பார்ப்போம்.

இந்த பாடலில் பட்டர் அம்பாள் இந்த ப்ர்பஞ்சம் முழுதும் பரவியுள்ள அம்பாள் தனது உள்ளத்திலும் குடிகொண்டுள்ளதை சொல்லி அதை பரமேசனும் திருமாலு அறிவார்கள் என்ரு கூறுகின்றார்

. யாவரையும் வசீகரிக்கும் ஆற்றல் உண்டாக

ஒன்றாய் அரும்பிப், பலவாய் விரிந்து, இவ் உலகு எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன், நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா, இப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்றபெம்மானும், என் ஐயனுமே.

ஒன்றாய்

ஒரே தனிப்பொருளாய்

அரும்பிப்,

முதலில் அரும்பி

பலவாய்

அனைத்துமான பலவிமாகி

விரிந்து,

விரிந்து

இவ் உலகு

இப்ரபஞ்சம் முழுதும்

எங்குமாய்

எல்லாவிடத்திலும்

நின்றாள்

பரவி நின்றாள்

அனைத்தையும்

அதே நேரம் அனைத்தையும்

நீங்கி நிற்பாள்

விலக்கிஅப்பாலும்நிற்பாள்

என்றன்,

அடியேனுடைய

நெஞ்சினுள்ளே

மனதினுள்ளே

பொன்றாது

எப்பொழுதும் நீங்காது

நின்று

உறைந்து

புரிகின்றவா,

அருள்புரிகின்றாள்

இப்பொருள்

இந்த உண்மையை

அறிவார்

அறிந்தவர்கள்

அன்று

ஊழிப்ரளய காலத்தில்

ஆலிலையில்

ஆலி லையில்

துயின்ற

பள்ளிகொண்ட

பெம்மானும்

திருமாலும்

என் ஐயனுமே

என் தந்தை ஈஸனுமே


பொருள்: 

ஒன்றாய் அரும்பி – ஒரே பொருளாய் முதலில் அரும்பி
பலவாய் விரிந்து – பல பொருட்களாய் விரிந்து
இவ்வுலகு எங்குமாய் நின்றாள் – இவ்வுலகம் எங்கும் இருக்கும் பொருட்கள் எல்லாமும் ஆகி நின்றாள்
அனைத்தையும் நீங்கி நிற்பாள் – அவை எல்லாவற்றையும் தாண்டியும் நிற்பாள் (அப்பாலுக்கு அப்பாலாய்)
என்றன் நெஞ்சினுள்ளே பொன்றாது நின்று புரிகின்றவாறு – (அப்படிப்பட்டவள் சிறியேனான) என் நெஞ்சினுள்ளே எப்போதும் நீங்காது நின்று எல்லாவற்றையும் நடத்துகின்றாள்.
இப்பொருள் அறிவார் – (அவ்வளவு பெரியவள் இந்தச் சிறியவனின் நெஞ்சில் நின்று, அணுவிற்கு அணுவாய் இருந்து, எல்லாவற்றையும் நடத்தும்) இதன் மாயம் அறிவார்கள்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் எம் ஐயனுமே – பிரபஞ்சங்கள் தோன்றும் முன் அவற்றைத் தன் வயிற்றில் வைத்துக் கொண்டு சிறு பாலகனாய் ஆலிலையில் துயின்ற மாயவனும் என் ஐயனான சிவபெருமானுமே.

(உரை): 

ஒரு பொருளாகிய பராசக்தியாய்த் தோன்றிப் பல பல சக்திகளாகி விரிந்து இந்த உலகெங்கும் நிறைந்து நின்றவளாய், அவ்வனைத்துப் பொருள்களையும் நீங்கி நிற்பவளாகிய அபிராமி என் கருத்துக்குள்ளே நீங்காமல் நிலைபெற்று விரும்பியருள்வது என்ன வியப்பு! இக் கருத்தை அறிவார் பிரளய காலமாகிய அன்று ஆலிலையில் யோகத்துயில் கூர்ந்த பெருமானாகிய திருமாலும், என் தந்தையாகிய சிவபெருமானுமே யாவர்.

விளக்கம்: 

அபிராமி அன்னையே! நீ ஒன்றாக நின்று, பலவாகப் பிரிந்து, இவ்வுலகில் எங்கும் பரந்திருக்கின்றாய் (பராசக்தியினின்று, பிரிந்த பல சக்திகள்). அவைகளிடத்திலிருந்து நீங்கியும், இருக்கக் கூடியவள் நீ! ஆனால், எளியோனாகிய என் மனத்தில் மட்டும் இடையுறாது நீடு நின்று ஆட்சி செய்கின்றாய். இந்த இரகசியத்தின் உட்பொருளை அறியக் கூடியவர்கள், ஆலிலையில் துயிலும் திருமாலும், என் தந்தை சிவபெருமான் ஆகிய இருவருமே ஆவர்.

 

இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

வியாழன், ஜனவரி  30,  2025

 


No comments:

Post a Comment