ஓம் நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
திங்கள்,
ஜனவரி 27, 2025
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள்.
நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை ஐம்பது பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று
நாம் ஐம்பத்தொன்றாவது பாடலைப் பார்ப்போம்.
இந்த பாடலில் பட்டர் அம்பாள் ஆணவம் கொண்டு
திரிந்த திரிபுராந்தக அசுர்களை அழித்த சிவபெருமானும் திருமாலும் மற்றைய தேவர்களும்
தொழும் அம்பிகை அடியார்களை பிறப்பு இறப்பு என்ற சுழர்சிய்லிருநு காத்து மோக்ஷம் அருள்வதை
விளக்குகின்றார்ர
கடன் தொல்லைகள் தீர
இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பாற் சென்று, இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில், நினைகுவிரேல், நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.
இல்லாமை |
தமது வறுமையை |
சொல்லி, |
சொல்லிக்கொண்டு |
ஒருவர் தம்பாற் |
முன்பின் தெரியாத ஒருவரிடம் |
சென்று, |
சென்று உதை கேட்டு |
இழிவுபட்டு |
அவரால் அவமானப் படுத்தப்பட்டு |
நில்லாமைநெஞ்சில், |
நிற்கும் நிலையை அடையாமல் இருக்க |
நினைகுவிரேல், |
எண்ணுவீர்களானால் |
நித்தம் |
நித்தமும் எப்பொழுதும் |
நீடு தவம் |
பெருமை பெரும் தவம் |
கல்லாமை |
செய்யாதிருப்பது என்று |
கற்ற கயவர் |
நங்கு கற்றகயவர்கள் |
தம்பால் |
தம்மிடத்தில் |
ஒரு காலத்திலும் |
எந்தக் காலத்திலும் |
செல்லாமை |
சென்று நிற்காத நிலமையை |
வைத்த |
எனக்கு அருளிய |
திரிபுரை |
மூன்று லோகங்களையும் ஆளும் |
பாதங்கள் |
தேவியின் திருவடிகளை |
சேர்மின்களே |
சென்று தொழுங்கள் |
பொருள்: இல்லாமை சொல்லி – வறுமையைச்
சொல்லிக் கொண்டு
ஒருவர் தம்பால்
சென்று – முன்பின்
தெரியாத ஒருவரிடம் (தெரிந்திருந்தாலும்
உதவி கேட்க வருவதால் தெரியாதவர் போல் நடந்து கொள்ளும் ஒருவரிடம்) சென்று உதவி
கேட்டு
இழிவுபட்டு – அவரால்
அவமானப்படுத்தப்பட்டு
நில்லாமை
நினைகுவிரேல் – நிற்கும்
நிலையை அடையாமல் இருக்க நினைப்பீர்களானால்
நித்தம் நீடு
தவம் – எப்போதும்
பெருமை மிக்க தவத்தை
கல்லாமை கற்ற
கயவர் தம்பால் – செய்யாமல்
இருப்பது எப்படி என்று நன்கு கற்ற கயவர்கள் தம்மிடம்
ஒரு காலத்தும்
செல்லாமை வைத்த – எந்தக்
காலத்திலும் சென்று நிற்கும் நிலையை எனக்கு ஏற்படுத்தாத
திரிபுரை
பாதங்கள் சேர்மின்களே – மூன்று
உலகங்களையும் உடையவளின் திருவடிகளைத் தொழுங்கள்
(உரை):
மக்களே, ஒரு செல்வரிடத்திலே போய் உங்களுடைய வறுமை நிலையைச் சொல்லி அவர்களால் அவமானப்பட்டு நில்லாத நிலை வேண்டுமென்று நெஞ்சில் கருதுவீர்களானால், தினந்தோறும் உயர்ந்த தவத்தைப் பயிலாமையைக் கற்ற இழிகுணத்தவரிடம் ஒருபொழுதும் செல்லாத பெருமிதத்தை என்பால் அருளிவைத்த திரிபுர சுந்தரியின் திருவடிகளைப் புகலாக அடைவீர்களாக.
விளக்கம்:
ஏ, வறிஞர்களே! நீங்கள் வறுமையால் பாதிக்கப்பட்டு, ஒருவரிடத்திலே பொருளுக்காகச் சென்று, அவர்கள் உங்களை இழிவு படுத்தாமல் இருக்க வேண்டுமா? என் பின்னே வாருங்கள். முப்புர நாயகியின் பாதங்களையே சேருங்கள். தவத்தையே செய்யாத பழக்கமுடைய கயவர்களிடத்திலிருந்து என்னைத் தடுத்தாட்
கொண்டவள் அவளே!
இத்துடன் இந்தப் பதிவை
இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை
ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும்
சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
திங்கள், ஜனவரி 27,
2025
No comments:
Post a Comment