ஓம்
நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
திங்கட்கிழமை, ஜனவரி 20,
2025
ஆன்மீக
அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை
நாற்பத்து எட்டு பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் நாற்பத்து ஒன்பதாவது பாடலைப்
பார்ப்போம்.
இந்த
பாடலில் பட்டர் இந்த பூவுலகில் வாழ்வு முடிந்து காலன் அழைக்கவரும்போது என்னை அஞ்சாய்
என்று ஆறுதல் சொல்லி காக்க நீ வரவேண்டும் என்று விழைகிறார்
குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி, வெங்கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது, வளைக்கை அமைத்து,
அரம்பை அடுத்த அரிவையர் சூழவந்து, அஞ்சல் என்பாய்
நரம்பை அடுத்த இசைவடிவாய் நின்ற நாயகியே.
குரம்பைஅடுத்துக் |
இந்த உடலாகிய குடிலில்
தங்கி |
குடிபுக்க ஆவி |
குடிபுகுந்துள்ள
எனது உயிர் |
வெங்கூற்றுக்கு |
கொடுமையான கூற்றுவன் |
இட்ட |
அளித்ட கால வரம்பின்
எல்லையை அடையும்போது |
மறுகும்அப்போது |
நான் மனம் வருந்தி
மயங்கும் அந்த வேளையில் |
வளைக்கை |
வளையல்கள் அணிந்த
உன் திருக்கரத்தினால் |
அமைத்து, |
அபய முத்திரையுடன் |
அரம்பை அடுத்த |
அரம்பை போன்ற |
அரிவையர் |
அழகான பெண்கள் |
சூழவந்து, |
உன்புடை சூழ வந்து |
அஞ்சல் என்பாய் |
என் பயம் போக்கி
அஞ்சல் என்றருளுவாய் |
நரம்பை அடுத்த |
நரம்பினால் இசை
எழுப்பும் வீணை போன்ற |
இசைவடிவாய் |
கருவிகள் ம்ற்றும் இசையின் வடிவமாய் |
நின்ற |
விள்ங்கும் |
நாயகியே. |
தலைவியே என் தாயே |
நரம்பினால் செய்யப்பட்டு இனிமையான் ஒலியெழுப்பும் யாழ் மற்றும் வீணை போன்ற இசைக்கருவிகளின் வடிவமாகவும்,அவை எழுப்பும் இனிய நாதமாகவும் இருக்கும் அபிராமித்தாயே
இந்த பூவுலகில் எனக்கு அளிக்கப்பட்ட காலம் முடிந்து என்னுடைய உடலானது இந்தக் குடிலில் இருந்து கால தூதர்கள் என்னுயிர் பிடிக்கவரும் நேரம் நான் மதிமயங்கி பயந்து நடும்கும் வேளை உன்னை நான் எண்ணி வேண்டும்போது உன்னுடைய அழகான வளையள்கள் அணிந்த திருக்கரத்தினால் அஞ்சேல் என்று அருள் முத்திரை காட்டி, உன்னுடன் எப்போதும் சூழ்ந்திருக்கும் அரம்பை போண்ற் அழகான தேவ மாந்தர்கள் புடை சூழ வந்து என் பயம் போக்கி அருளி எனை ஆட்கொள்ளவேண்டு தாயே
விளக்கம்: நரம்புக் கருவிகளைக் கொண்ட, இசையே வடிவாக உள்ள அபிராமியே! அடியேனாகிய என்னுடைய உடலையும், அதிலே இணைந்த உயிரையும் கொடுமையான எமன்
வந்து பறிக்க, நானும் மரணத்திற்கு அஞ்சி வருந்துவேன். அப்பொழுது அரம்பையரும், தேவமகளிரும் சூழ என்னிடத்து வந்து அஞ்சேல்
என்பாய்! எனக்கு அருள் புரிவாய்!
இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும்
அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு
மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்
ஓம்
நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
திங்கட்கிழமை,
ஜனவரி 20, 2025
No comments:
Post a Comment