அறு நோய் தீர்த்தருளும்
அரன்
சிவதாஸன் ஜகன்நாதன்
அனைவருக்கும் வணக்கம்.
சில நாட்களின் இடைவெளியில் அடியேனுடN இணைந்த சிலரும் அவர்களின்
உற்றாரும் பெரு நோய்களின் பிடியில் பிடிபட்டு வருந்தும் செய்தியறிந்து மனம் மிக வேதனையுற்றேன்.
நானே ஒரு மருத்துவனாயினும் அனைத்து மருத்துவர்களுக்கும் தலைவனான
ஸ்ரீ வைத்யநாதனே ப்ரபஞ்ச வைத்தியத் தலைவராவார்.
தீராத நோய் தீர்க்க வல்லானும் ஸர்வ ரோஹ நிவாரணியுமான அந்த
சர்வேஸ்வரர் பொற்பாதங்களில் ஸரணடைந்து ப்ரார்த்தித்தால் அவர் அருள் அனைத்தையும் காக்கும்
என்பது கண்கண்ட உண்மையாகும்
மார்கண்டேயன் உயிரைப் பரிக்க காலப் பாஸக்கயிற்றை வீசிய நேரத்திலும்
காலனை உதைத்துத்தள்ளி பாலனைக் காத்த காலகாலன் கருநீலகண்ட கடவுள்.
நமது வேதத்திலும் ஸ்ம்ருதிகளிலும் திருமுறை களிலும் எண்ணற்ற
பாடல்கள் நோய் தீர்த்து, ம்ருத்யு பயம் போக்குபவைகளாக உள்ளன.
நான் சிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன்
1.ஸ்ரீ ருத்ரம்
2.ஸ்ரீ வைத்யநாதாஷ்டகம்
3.மார்கண்டேய ஸ்லோகம்
4.புள்ளிருக்கு வேளூர் பதிகம்
5.கோளறு பதிகம்
இன்னும் எத்தனை எத்தனையோ உள்ளன.
நான் அவைகள் அனைத்தைபற்றியும் நான் சொல்லப் போவதில்லை.இந்த
ஐந்து பதிவு களையும் நான் முழுமையுமாக சொல்லப்போவதில்லை.
ஒவ்வொரு ப்ரார்த்தனைகளில் இருந்தும் ஒரு ஸ்லோகம் அல்லது பாடலை
மட்டும் சுட்டிக்காட்டப் போகின்றேன். காரணம் உங்களுக்கு எளிமையாகவும் அதிக நேரம் எடுத்துக்
கொள்ளாத் தாகவும் இருக்கவேண்டும் என்பதற்கேயாகும்.
நான் கீழே
தந்துள்ள பாடல்கள் அல்லது ஸ்லோகங்களை மட்டுமாவது காலையும் மாலையும் பர்மேஸ்வரரை நினைத்து
எத்தனை முறை முடியுமோ அத்தனை முறைகள் உங்கள் துயரங்களை அவரின் பொற்பாதங்களில் போட்டுவிட்டு
ப்ரார்த்தியுங்கள்
அனைத்தும் விரைவில் பரிபூரண நலமாகவே அமையும்
ஓம் நமசிவாய:
1ஸ்ரீ ருத்ரம்:-
த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம்
புஷ்டிவர்தனம் உர்வாருக - மிவ
பந்தனான்
ம்ருத்யோ - முக்ஷீய - மாம்ருதாத்
2.வைத்யநாதாஷ்டகம்
ஸ்ரீனீலகண்டாய வ்ருஷத் வஜாய ஸ்ரக்கந்த பஸ்மாத்யபிஸோபிதாய ஸுபுத்ரதாராதி ஸுபாக்யதாய ஸ்ரீவைத்யனாதாய நம: ஸீவாய ॥ 8॥
ஸம்போ மஹாதேவஸம்போமஹாதேவ ஸம்போ மஹாமஹாதேவ ஸம்போ மஹாஹேவ
ஸம்போ மஹாதேவ ஸம்போமஹாதேவ ஸம்போ மஹாமஹாதேவ ஸம்போ மஹாஹேவ ॥
வாலாம்பிகேஸ வைத்யேஸ பவரோகஹரேதி ச ।ஜபேன்நாமத்ரயம் நித்யம் மஹாரோகனிவாரணம் ॥ 9॥
ஸம்போ மஹாதேவ ஸம்போமஹாதேவ ஸம்போ மஹாமஹாதேவ ஸம்போ மஹாஹேவ
ஸம்போ மஹாதேவ ஸம்போமஹாதேவ ஸம்போ மஹாமஹாதேவ ஸம்போ மஹாஹேவ ॥
3.மார்கண்டேய ஸ்லோகம்
ருத்ரம் பஶுபதிம் ஸ்தாணும்
நீலகண்டம் உமாபதிம்
நமாமி ஶிரஸா தேவம்
கிம்
நோ ம்ருத்யுஹ் கரிஷ்யதி
4.புள்ளிருக்கு வேளூர் பதிகம்
பேரா யிரம்பரவி வானோ ரேத்தும்
பெம்மானைப், பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத
செல்வம் வருவிப் பானை,
மந்திரமுந்
தந்திரமும் மருந்து மாகித்,
தீராநோய்
தீர்த்தருள வல்லான் தன்னைத்,
திரிபுரங்கள்
தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப், புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே
ஆற்றநாள் போக்கி னேனே.
5.கோளறு பதிகம்
மதிநுதன் மங்கையோடு வடபா லிருந்து மறை யோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடு நோய்க ளான பலவும் அதிகுணம் நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே
இந்த ஐந்து எளிய பாடல் மற்றும் ஸ்லோகங்களிய்ம் தினமும் ஈஸ்வர
ரை நினைந்து படியுங்கள்
நான் என்னுடைய VOICE MESSAGE ல் இவைகளுக்கான விளக்கத்தை அளிக்கிறேன்.
கேளுங்கள்
நான் முன்னரே வெகு விரிவாக கோளறு பதிகம் மற்றும் வைத்யநாதாஷ்டகத்துக்கு
விளக்கங்கள் நமது ஆன்மீகப் பதிவுகளில் அளித்துள்ளேன் என்பது சிலருக்காவது நினைவிருக்கும்
என எண்ணுகிறேன்
இந்தப் பதிவு எல்லோருக்கும் பொதுவானது என்றாலும் இது யாருக்கானது
என்பது அவர் அவர்களுக்குத் தெரியும் என நான் அறிவேன்
CONSIDERING INDIVIDUAL PRIVACY I AM NOT MENTIONING ANYBDY
IN PATRICULAR
PLEASE LISTEN TO MY ATTACHED VOICE MESSAGE ALSO FOR
DETAILED EXPLANATION OF THESE SLOGAS AND PATHIGAMS
ஒம் நமஸிவாய:
ஸிவதாஸன் ஜகன்நாதன்
ஞாயிறு, 19, ஜனவரி 2025
வாஷிங்டன் USA
No comments:
Post a Comment