ஓம் நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
புதன்
கிழமை, ஜனவரி 22, 2025
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள்.
நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை ஐம்பது பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று
நாம் ஐம்பத்தொன்றாவது பாடலைப் பார்ப்போம்.
இந்த பாடலில் பட்டர் அம்பாள் ஆணவம் கொண்டு திரிந்த திரிபுராந்தக அசுர்களை
அழித்த சிவபெருமானும் திருமாலும் மற்றைய தேவர்களும் தொழும் அம்பிகை அடியார்களை பிறப்பு
இறப்பு என்ற சுழர்சிய்லிருநு காத்து மோக்ஷம் அருள்வதை விளக்குகின்றார்ர
மோகம் நீங்க
அரணம் பொருள் என்று, அருள் ஒன்று இலாத அசுரர் தங்கள்
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே,
சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார்,
மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே.
அரணம் |
தங்களின் திரிபுரம்
எனும் |
பொருள் என்று |
கோட்டையே நிலையானதென்று
எண்ணி |
அருள் ஒன்றும் |
யார்மேலும் கருணை |
இலாத அசுரர்தங்கள் |
இல்லாத அசுரர்களின் |
முரண் |
கோட்டைகளை |
அன்று அழிய |
முன்பு அழித்தொழிய |
முனைந்த |
சினம்கொண்டு சிரித்த |
பெம்மானும் |
சிவபெருமானும் |
முகுந்தனுமே |
அவருக்குத்துணையாய்
அம்பாகி நின்ற திருமாலும் |
சரணம் சரணம் |
சரணம் சரனம் |
என நின்ற |
என்று தொழும் |
நாயகி |
நாயகியான அம்பாளின் |
தன் அடியர் |
அடியவர்கள் |
இந்த வையகத்தே |
இந்த மண்ணுலகில் |
மரணம் |
மரணம் |
பிறவி |
மீண்டும் பிறப்பு
என்னும் |
எய்தார் |
சூழலில் அகப்படமாட்டர்கள் |
பொருள்:
அரணம் பொருள்
என்று – தாங்கள்
கட்டிய திரிபுரம் என்னும் தங்கம், வெள்ளி, இரும்பினால்
ஆன கோட்டைகளை நிலையென்று நினைத்து
அருள் ஒன்றும்
இலாத – யார் மேலும்
கருணை என்பதே இல்லாமல் கொடுமைகள் செய்து திரிந்த
அசுரர் தங்கள் – திரிபுர
அசுரர்களின்
முரண் அன்று
அழிய – பகை முன்னொரு
நாள் அழிந்து போகும் படி
முனிந்த
பெம்மானும் – சினம் கொண்டு
சிரித்து எரி கொளுத்திய சிவபெருமானும்
முகுந்தனுமே – அவருக்குத்
துணையாக அம்பாகி நின்ற முகுந்தனும்
சரணம் சரணம்
என நின்ற நாயகி – சரணம் சரணம்
என்று அடிபணிய நிற்கும் தலைவியான அம்மையே!
தன் அடியார்
மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே – அவள் தம்
அடியவர்கள் மரணமில்லா பெருவாழ்வை எய்துவார்கள். இந்த உலகில்
மீண்டும் இறப்பு, மீண்டும்
பிறப்பு என்ற சுழலுக்குள் அகப்படமாட்டார்கள்.
உரை
பொன், வெள்ளி, இரும்பு
என்பவற்றாலாகிய திரிபுர மதில்களே உண்மையான செல்வமென்று எண்ணி இரக்கம் சிறிதும்
இல்லாத வித்யுன்மாலி, தாரகாக்ஷன், கமலாக்ஷன்
என்னும் மூன்று அசுரர்களுடைய வலிமையும் அன்றொரு நாள் அழிந்துபோகுபம்படி கோபித்த
பெருமானாகிய சிவபிரானும் திருமாலுமே, ‘ நின்
திருவடியே எமக்குப் புகல்’ என்று
கூறாநிற்க, நின்ற
தலைவியின் அடியார்கள் இறப்பு, பிறப்பு
என்னும் இரண்டையும் இவ்வுலகத்தில் அடியார்.
பொருள் – உறுதிப்
பொருளுமாம். அன்று: பண்டறி சுட்டு. சரணம்-அடைக்கலம்
அடைக்கலம் என்று கூறினும் பொருந்தும். இருவரும்
பணிதல்: 7,56
விளக்கம்:
திரிபுரத்தை
நிலையென்று நினைத்த, தன்மையற்ற
அசுரர்களை அழித்த சிவபெருமானும், திருமாலும்
வணங்கக்கூடிய அபிராமியே! அன்னையே! உன்னையே சரணம்
சரணம் என்று அண்டிய அடியார்களின் மரண பயத்தை ஒழிப்பாய்! அது மட்டுமல்ல; அவர்களைப்
பொய்மையான இந்த உலக வாழ்வினின்றும் விடுவிப்பாய் (பிறப்பறுப்பாய்), பெருநிலை
தருவாய்!
இத்துடன் இந்தப் பதிவை
இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை
ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும்
சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
புதன்
கிழமை, ஜனவரி 22, 2025
No comments:
Post a Comment