Friday, January 17, 2025

 

அபிராமி அந்தாதி-47

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

வெள்ளி, ஜனவரி  17,  2025

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை நாற்பத்து ஆறு பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் நாற்பத்து ஏழாவது பாடலைப் பார்ப்போம்.

இந்த பாடலில் பட்டர் அழிவற்ற இன்பவாழ்வினை அருளும் அம்பாளின் பேறருட் கருணையை அவரின் திருவ்ருளினால் தான் உணர்ந்த தையும் இந்த பாடலில் விளக்குகிறார்

வாழும் படிஒன்று கண்டு கொண்டேன், மனத்தே ஒருவர்
வீழும்படிஅன்று, விள்ளும்படிஅன்று, வேலை நிலம்
ஏழும் பரு வரை எட்டும், எட்டாமல் இரவுபகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.

வாழும்படிஒன்று

என்றென்றும் நிலைத்து வாழும் வகையை

மனத்தே

என் மனதிலே

கண்டுகொண்டேன்

கண்டுகொண்டேன்

ஒருவர்

அந்த வழியைக் கண்டவ யாரொருவரும்

வீழும்படிஅன்று,

வீழ்வதில்லை என்பதனை

விள்ளும்

அந்த வழியைக் கண்டவர்கள்மற்றவர்க்குசொல்லும்

படிஅன்று

னிலையும் எளிதானதல்ல

வேலை

கடலால் சூழப்பட்ட

நிலம்ஏழும்

தீவுகளான ஏழு நிலங்களும்

பரு வரை எட்டும்

உயர்ந்த எட்டு மலைகளுக்கும்

எட்டாமல்

எட்டாது அப்பாலுக்கும் அப்பால்

இரவுபகல்சூழும்

இரவிலும் பகலிலும் ஒளிரும்

சுடர்க்கு

சூரிய சந்திரர்களுக்கு

நடுவே கிடந்து

நடுவிலே இலங்கி

சுடர்கின்றதே.

அம்பாளின் பேர ருள் சுடர்ந்து ப்ரகாசிக்கின்றது

 

உரை

அழிவற்ற இன்பத்தில் வாழும்படியாக ஒரு பரம்பொருளை மெய்ஞ்ஞானத்தால் அறிந்துகொண்டேன்; அது மனத்தில் ஒருவர் விரும்பித் தியானிக்குமாறு உள்ளதன்று; வாயினால் இப்படி இருப்பதென்று உரைப்பதற்கும் உரியதன்று; கடலேழும் உலகேழும் பெரிய அட்டகுலாசங்களும் அணுகாமல், இரவையும் பகலையும் முறையே செய்யும் சுடர்களாகிய சந்திர சூரியர்களுக்கு நடுவே அமைந்து விளங்குகின்றது அப்பொருள்.

இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

வெள்ளி, ஜனவரி  17,  2025

 


No comments:

Post a Comment