அபிராமி அந்தாதி-55
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
செவ்வாய், ஜனவரி 28, 2025
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
நாம் இதுவரை அம்பாளின் 54 பாடல்களை பார்த்துவிட்டோம் இன்றைய பாடலில் பட்டர்
அம்பாளின் பெருமைகளைச் சொல்லி நாம் அம்பாளை எண்ணினாலும் எண்னாதிருந்தாலும் அதனாள்
அம்பாளுக்காகப் போவது ஒன்றுமில்லை எங்கிறார்
விருப்பு வெறுப்பற்ற
மோனநிலை எய்த
மின்ஆயிரம்
ஒரு மெய்வடிவாகி விளங்குகின்ற
அன்னாள், அகமகிழ்
ஆனந்தவல்லி, அருமறைக்கு
முன்னாய், நடு
எங்குமாய், முடிவாய முதல்வி தன்னை
உன்னாது ஒழியினும், உன்னினும், வேண்டுவது ஒன்றில்லையே.
மின்ஆயிரம் |
ஆயிரம் மின்னல்களை ஒத்த |
ஒருமெய்வடிவாகி |
ஒரே நேர உண்மை உருவாகி |
விளங்குகின்ற |
விளங்குவதைப்போன்ற ஒளிமிகு |
அன்னாள், |
திருமேனியுடை அம்பாளை |
அகமகிழ் |
என்றும் உள்ளத்தில் மகிழ்ச்சியுடன் |
ஆனந்தவல்லி, |
ஆனன ந்த தைப் பெருக்கும் கொடியானவளை |
அருமறைக்கு |
எல்லா வேதங்களுக்கும் |
முன்னாய், |
முன்னதாய் ஆதியும் |
நடு எங்குமாய், |
நடுவாகவும் எல்லாமகவும் |
முடிவாய |
முடிவாகவும் விளங்கும் |
முதல்வி தன்னை |
முதல்வியான அம்பாளை |
உன்னாது |
உலக மக்கள் நினையாது |
ஒழியினும், |
இருந்தாலும் |
உன்னினும், |
அம்பாளை எண்ணினாலும் |
வேண்டுவது |
அம்பாளுக்கு ஆகவேண்டியது |
ஒன்றில்லையே. |
ஏதுமில்லை |
பொருள்:
மின்னாயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது
அன்னாள் – ஆயிரம் மின்னல்கள் ஒரே
நேரத்தில் உண்மை வடிவாகி விளங்குவதைப் போல் ஒளியுடையத் திருமேனி கொண்டவளை
அகம் மகிழ் ஆனந்தவல்லி – என்றும் உள்ளத்தில் மகிழ்ச்சியே
கொண்டிருக்கும் ஆனந்த வடிவானவளை
அருமறைக்கு முன்னாய் நடு
எங்குமாய் முடிவாய முதல்வி தன்னை – எல்லா
வேதங்களுக்கும் தொடக்கமாகவும் நடுவாகவும் முடிவாகவும் மற்ற எந்த நிலையாகவும்
நிற்கின்ற முதல்வியானவளை
உன்னாது ஒழியினும்
உன்னினும் வேண்டுவது ஒன்றில்லையே – உலக மக்கள்
நினையாது விட்டாலும் நினைத்தாலும் அவளுக்கு ஆக வேண்டியது ஒன்றும் இல்லையே!
(உரை):
பல மின்னல்கள் ஒரு திருமேனியின் உருவெடுத்து
விளங்குவதுபோன்ற கோலத்தையுடையவளும், அடியவர் நெஞ்சத்தில்
துய்க்கும் ஆனந்தமயமான கொடி பொன்றவளும், அரிய வேதத்திற்கு முன்னாகி நடு முழுவதுமாகி
முடிவும் ஆகி முதல்வியும் ஆகிய அபிராமியை உலகத்து உயிர்களை நினையா தொழிந்தாலும்
நினைத்தாலும் அவளுக்கு அவர்களால் வேண்டப்படுவது ஒரு பொருளும் இல்லை.
விளக்கம்:
அபிராமித் தாயே! நீ ஆயிரம் மின்னல்கள் சேர்ந்தாற் போன்ற வடிவுடையவள்! தன்னுடைய அடியவர்களுக்கு
அகமகிழ்ச்சி தரக்கூடிய ஆனந்த வல்லி! அருமையான வேதத்திற்கு
தொடக்கமாகவும் நடுவாகவும், முடிவாகவும் விளங்கும்
முதற் பொருளானவள்! உன்னை மானிடர் நினையாது
விட்டாலும், நினைத்திருந்தாலும், அதனால் உனக்கு ஆகக்கூடிய பொருள்
ஒன்றும் இல்லையே!
இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
செவ்வாய், ஜனவரி 28, 2025
No comments:
Post a Comment