Friday, November 25, 2011


உங்கள் நெஞ்சு வலி  இருதயவலியா

  நெஞ்சுவலி என்றவுடன் நாம் எல்லொரும் நினைப்பது இருதயத்தைத்தான்.எத்தனையோ வலிகள் வந்தாலும் நெஞ்சுவலி என்றவுடன் நமக்கு அளவில்லாதபயம் உண்டாகின்றது.
நெஞ்சுவலி என்பது நாம் பயப்பட வேண்டிய ஒன்றுதான்
ஆனால் எல்லா நெஞ்சுவலியும் இருதய வலியா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்..
நெஞ்சுவலியிலே இரண்டு வகைகள் உண்டு
1 இதயம் சார்ந்த நெஞ்சுவலி     CARDIAC(HEART) PAIN
2.இதயம் சாரா நெஞ்சுவலி        NONCARDIAC PAIN
   இதயம் சாரா நெஞ்சுவலி பல காரணங்களால் வரலாம்.
நாம் இன்று இதயம் சார்ந்த நெஞ்சுவலியின் தன்மைகளைப் பற்றி
தெரிந்துகொள்ளுவோம் .இருதய வலி என்பது ஒரு அபாய சங்கு ஆகும் .அதை சரியாகக்கண்டறிந்து உரிய நேரத்தில் முறையான மருத்துவம் செய்தால் உடல் உபாதைகளையும் உயிர் இழப்பையும் தடுக்கலாம்.நெஞ்சுவலியின் சரியான காரணத்தை முறையான மருத்துவர்தான் கண்டறிந்து குணப்படுத்த முடியும் என்றாலும் நாமும் முன்னெச்சரிக்கையுடன் செயல் பட்டால்தான் மோசமான பின் விளைவுகளைத் தவிற்கமுடியும்.

இதயவலியின் தன்மைகள்

1 இடம்  
      இதயவலி மார்பின் நடுப்பகுதி (தொண்டக்குழியிலிருந்து மேல்வயிறு வரையிலானபகுதி) இடது மார்புப்பகுதி இடது தோள் மற்றும் இடது மேற்கை இடது தாடைப்பகுதி இடது முதுகின் மேற்பகுதி நடு வயிற்றின் மேற்பகுதி மற்றும் சில வேளைகளில்
வலது பகுதிகளிலும் வரலாம்.
     பொதுவாக இதயவலி பரவலானதாகவே இருக்கும்.எங்கே வலிக்கிறது என்னும்போது உள்ளங்கை முழுவதையும் வைத்துக்காட்டினால் அது இதய வலியாக இருக்கலாம் ஆனால்
ஒரு விரலால் ஒரு புள்ளியில் வலி என்றால் அனேகமாக அது இதயவலியாக இருக்க வாய்ப்பில்லை

2 வலியின் தன்மை

      இதயவலி பொதுவாக ஒரு பாராங்கல்லை வைத்து மார்பிலே அழுத்துவது போலிருக்கும் .சிலருக்கு SHARP PAIN என்று சொல்லக்கூடிய பளிச் என்ற வலியிருக்கும் பல நேரங்களில் எரிச்சல் மட்டுமே இருக்கும் மற்றும் சிலருக்கு நெஞ்சில் ஒரு இனம்புரியாத உணர்வு CHEST DISCOMFORT AND UNEASINESS மட்டும் இருகும்
    இந்த வகையான குறிகள் இதயசாரா நோய்களிலும் வரலாம்
உதாரணமாக குடல் மற்றும் இறைப்பை நோய்களிலும் நடுவயிற்றின் மேற்பகுத்யில் வலி வரலாம் அவகளை பாகுபடுத்தி உண்மையான காரணத்தை அறியவேண்டியது அவசியம்.

3 நேரம்   DURATION

    பொதுவாக இதயவலி நீண்ட நேரம் தொடற்சியாக இருக்காது. பல வேளைகளில் விட்டு விட்டே வரும். நாள் பூராவும் தொடர்ந்து வலி இருந்தால் அனேகமாக அது இதயவலியாக இருக்க வாய்ப்பில்லை.
  ஆனால் மிக மோசமான மாரடைப்பு (MAJOR HEART ATTACK)
போன்ற சமயங்களில் தொடர்ந்து வலி இருக்க வாய்ப்புண்டு

4 பரவுதல்   RADIATION

   இதயவலி பொதுவாக அது வருகின்ற பகுதியில் மட்டும் நிற்பதில்லை. நெஞ்சிலிருந்து அது சில இடங்களுக்கு பரவும்
நெஞ்சிலிருந்து இடது தோள் புஜம் தாடை நெஞ்சுக்குழி முதுகு
ஆகிய இடங்களுக்கு வலி பரவலாம்
5 எதனால் வருகிறது   WHAT BRINGS THE PAIN

    பொதுவாக சாதாரண நிலைகளில் வலி வருவதில்லை.
அதிகமான உடல் உழைப்பு (EXERTION) மனச்சோர்வு (DEPRESSION)
மன அழுத்தம் (ANXIETY) TENSION அளவுக்கு அதிகமான உணவு
மாறுபட்ட வெப்ப நிலைகள் போன்றவைகள் இதயவலியை உண்டாக்கக்கூடியவை

6 எப்படிப்போகிறது     WHAT RELIEVES THE PAIN

    நெஞ்சுவலி வந்தவுடன் நாம் செய்கின்ற செயலை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்தால் வலி நின்றுவிட்டால் அது இதயவலியாகும்.PAIN RELIEVED BY REST
   நாக்கின் அடியில் வைக்கும் NITRATE மாத்திரைகள் வைத்து வலி நின்றால் அது இதயவலியாகும்
   அமைதியான சூழலில் வலி நின்றால் அது இதய வலியாக இருக்கலாம்
    இவைகள் எல்லாம் செய்த பின்னும் வலி தொடர்ந்திருந்தால்
அது அனேகமாக இதயவலியாக இருக்க வாய்ப்பில்லை

உடனான குறிகள்   ASSOCIATED SYMPTOMS

    நெஞ்சுவலி இதயவலியாக இருந்தால் அதனுடன் கீழ்க்கண்ட குறிகளும் காணப்படும்
    அளவில்லா வியர்வை EXCESSIVE SWEATING
    தலைசுற்றல்          GIDDINESS
    மயக்கம்              DIZZINESS
    மூச்சுத்திணரல்       BREATHLESSNESS  (DYSPNOEA)
    வாந்தி               VOMITING
    படபடப்பு             PALPITATION
    நினைவிழப்பு         UNCONSCIOUSNESS

நான் குறிப்ப்ட்டுள்ள செய்திகளை மனதில் கொண்டு நாம் வரும் நெஞ்சுவலியின் தன்மையை உணர முடியும்
இருந்தாலும் உண்மையான சரியான கணிப்பை (DIAGNOSIS) ஒரு
மருத்துவரால் மட்டுமே செய்ய முடியும் எனவே இந்த உண்மைகளை உங்களின் தெரிந்துகொள்ளுதலுக்காகவே கொடுத்துள்ளேன் (FOR YOUR KNOWLEDGE AND INFORMATION)
உண்மையான நெஞ்சுவலியின் தன்மையை கண்டறிந்து முறையான மருத்துவம் செய்யவேண்டியவர் உங்கள் மருத்துவர் மட்டுமே என்பதை மறவாதீர்கள்
   


1 comment: