Saturday, November 19, 2011


நீலகண்டன்

சிவன் நீலகண்டன் என்று அழைக்கப்படுகிறார் அதன் காரணம் அவரது கண்டம் அல்லது தொண்டை நீலமாக இருப்பதுதான்.
ஒரு முறை அமிர்தத்துக்காக தேவர்களும் அசுரர்களும் மேரு மலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பை
கயிறாகவும் கொண்டு பார்க்கடலை கடைந்தபோது முதலில் அமிர்தம் வராமல் ஆலகால விஷம் வந்தது. ஆலகால விஷம் இந்த உலகம் முழுவதையும் அழிக்கவல்லது.அதன் கொடுமையிலிருந்து மீள்வதற்காக தேவர்கள் ஈசனையடைந்து தங்களைக்காக்குமாறு வேண்டினார்கள் சர்வேஸ்வரனும் சுந்தரரை
அனுப்பி அந்த ஆலகால விஷத்தைக்கொண்டுவருமாறு பணித்தார்.
சுந்தரரும் பார்க்கடல் சென்று ஆலகால விஷத்தை ஒரு நாவற்கனி போல கொண்டுவந்து ஈசனிடம் அளித்தார். அதனாலேயே அவர் ஆலால சுந்தரர் என்ற பெயர் பெற்றார்.
ஈசனும் உலகமெல்லாம் காக்கும் பொருட்டு அந்த விஷத்தை வாயிலே இட்டு விழுங்கத்தொடங்கும்போது லோகனாயகியான
உமையம்மை தன் கைகளினாலே ஈசனது தொண்டையை நெருக்கி அந்த விஷம் உள்ளே செல்லாமல் தடுத்து நிறுத்தினார்.
அந்த ஆலகால விஷம் ஈசனது கண்டத்திலே நின்றுவிட்டதினால்
அவர் நீலகண்டன் என்ற பெயர் பெற்றார்.உலகையும் சகல் ஜீவராசிகளையும் அக்கொடிய ஆலகால விஷத்தினின்றும்
காத்தருளினார்.
இது அனேகமாக நாம் எல்லோரும் அறிந்த செய்திதான்.
ஈசனை ஆலகால விஷம் தீண்டுமா என்பதே கேள்வி. உமையம்மையின் பயத்துக்கு என்ன காரணம்.?

ஈசன் சகலமுமானவர்.அமுதமும் அவரே விஷமும் அவரே .அவரை ஆலகாலவஷம் எதுவும் செய்யாது ஆனால் ப்ரபஞ்சம் முழுவதும் சகல ஜீவராசிகலும் அவருள் அடக்கம்.
எனவே அவர் உண்ட ஆலகாலவிஷம் அவரை எதுவும் செய்யாவிடினும் அவருள்ளே அடக்கமான ஜீவராசிகளுக்கு தீங்கு
விளைக்குமோ என்ற் எண்ணித்தான் உமையம்மை அதை ஈசனின் கண்டதிலே நிறுத்தினார்.

அந்த நீலகண்டனை  நாள்தோரும் வணங்கி மகிழ்வோம்

ஓம் நமசிவாய

No comments:

Post a Comment