Monday, November 14, 2011


ஓம் நமசிவாய

சிவனின் சஹஸ்ர நாமங்களில் அதி உன்னதான நாமம் நமசிவாய வாகும்.நமசிவாய மந்திரத்துக்கு ஈடு இணை ஏது
மில்லை.நமசிவாய என்று சொன்னால் நா இனிக்கும் ஊன்
உருகும் நெஞ்சம் நெகிழும் உயிர் சிலிற்கும்.நமசிவாய என்று
நாளைத்துவக்கி மீண்டும் நமசிவாய என்று முடித்து உறங்கச்
செல்வோற்கு நாளெல்லாம் நண்ணாளாகவே அமையும்

இந்த நாமம் எங்கிருந்து வந்தது?
ரிக் ,யஜுர் ,சாமம், அதர்வணம் என்னும் நாங்கு வேதங்களிலே
சிறப்புடையவை ரிக் யஜுர் சாம வேதங்களாகும். இம்மூன்று
வேதங்களில் நடு நாயகமாக விளங்குவது யஜுர் வேதமாகும்
யஜுர் வேதத்தில் நடு நாயகமாக விளங்குவது ஸ்ரீருத்ரம் ஆகும்
அதன் எட்டாவது அணுவாகத்தில் நமசிவாய ச என்று வருகிறது.
எனவே வேதத்தின் நடு நாயகமாக விளங்குவது நமசிவாய.

நமசிவாயத்தை பல் பெயர்களிலே அழைக்கிறோம்.அவை
   பஞ்சாக்ஷரம்
   பஞ்சாக்ஷரி
  ஐந்தெழுத்து
   அஞ்செழுத்து   என்பனவாகும்

பஞ்சாக்ஷர ஸ்லோகம் என்ற அதி உன்னதமான ஸ்லோகம்
  நாஹேந்த்ர ஹாராய த்ரிலோசனாய என்று ஆரம்பித்து ஐந்து
ஸ்லோகங்களா பஞ்சாக்ஷரத்தின் பெருமையை விளக்குவதாக
அமைந்துஅள்ளது ந ம சி வா ய என்ற் ஐந்து அட்சரங்களுக்குமாக ஐந்து ஸ்லோகங்கள் அமைந்துள்ளன.முடிந்தவர்கள் அந்த ஸ்லோகத்தை தினம் சிவன்
முன்னே சொன்னால் அளவிலா நன்மைகளும் வளங்களும் பெருகும்.பல இசை வல்லுனர்கள் [MSS போன்றவர்கள்] இந்த ஸ்லோகங்களை இசை வடிவமாக தந்துள்ளார்கள்.
நம்முடய தேவாரத்திருமுறைகளிலே நமசிவாயத்தின் பெருமையை நால்வருமே பாடியுள்ளனர்.
திரு நாவுக்கரசர் நமசிவாயப்பத்து என்ற அதி உன்னதமான
பதிகத்தைப் பாடியுள்ளார் நம்மில் அனேகருக்கும் அந்த பத்துப்
பாடல் களுமேத் தெரியும் என எண்ணுகிறேன்

சொற்றுணை வேதியன் ஜோதி வானவன் பொற்றூணை திருந்தடிபொறுந்தக் கைதொழ கற்றுனைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவயவே என்று தொடங்கும்
பத்துப் பாடல்களுமே நாம் பலரும் அறிந்ததுதான்
அதிலே கற்றுணைப்பூட்டியோர் கடலினுள் பாய்சினும்
நற்றுணையாவது நமசிவாய வே என்கிறார்.
மேலும் நாவினுக்கு அருங்கலம் நமசிவாயவே என்கிறர்.
முடிந்தவர்கள் இந்த நமசிவாயப்பத்து என்ற் உன்னதமான
பதிகத்தை தினம் ஈசன் முன் படித்து அவனருள் பெறலாம்

ஞானசம்பந்தப் பெருமான் இதே போன்று நமசிவாயத்தின்
பெருமையை விளக்கும் அஞ்செழுத்துப் பதிகம் ஒன்றை
வெகு நேர்த்தியாகப் பாடியருளியுள்ளார். .இதிலும் பத்துப் பாடல்கள் நேர்த்தியாக அமைந்துள்ளன.

துஞ்சலிலும் துஞ்சலில்லாத போழ்தினும்
நெஞ்சம் நைந்து நினைமின் என்று தொடங்கும் சிறப்பான
பதிகமும் நெஞ்சம் நெகிழ்விக்கும். .இதிலே உள்ள பத்துப் பதிகங்களிலும் எல்லாவற்றுக்கும் தலையானது அஞ்செழுத்தே
என்று நமசிவாயத்தின் பெருமையை போற்றுகின்றார்

நாமும்  நாள்தோறும் பஞ்சாக்ஷ்ர மந்திரத்தை ஓதி
உய்வடைவோம்

ஓம் ந ம சி வா ய.



MEDINEWS

  நம்மில் பலருக்கு இரததக்கொதிப்பு [HYPERTENSION] பற்றி குழப்பமாண கருத்துக்கள் உள்ளன.நாம் முதலில் சில முக்கியமான சொற்களையும் அவற்றின் பொருளையும் உணர வேண்டும்,

1 இரத ஓட்டம் [CIRCULATION]
2 இரத அழுத்தம் [BLOOD PRESSURE]
3 இரத்தக்கொதிப்பு  [HYPER TENSION  HIGH BLOOD PRESSURE]
4 குறைவான இரத்த அழுத்தம்  [HYPO TENSION  LOW B P ]

இதிலே இரத்த ஓட்டம் மற்றும் இரத்த அழுத்தம் என்பவை இயல்பானவை
இரத்தக்கொதிப்பு அல்லது குறைவான இரத அழுத்தம் மட்டுமே
நோயைக்குறிப்பதாகும்
எனக்கு  BP இருக்கிறது என்று யாராவது சொன்னால் அது இய்ல்பானது [NORMAL] Iஇயல்பான இரத்த அழுத்தம் இல்லை என்றால் மனிதன் உயிர் வாழமுடியாது.
சீரான இரத்தஓட்டதிற்கு அளவான இரத்த அழுத்தம் அவசியம்.
இதைத்தான் நாம் சீரான இரத்த அழுத்தம் NORMAL BP ] என்கிறோம் இந்த சீரான BP இருந்தால்தான் உடலின் இரத்த ஓட்டம் இயல்பாக இருந்து நல வாழ்வுக்கு துணை புரியும்.
இரத்த அழுத்தத்தின் இயல்பு நிலை மாறுபட்டு அதன் அளவு உயரும் போது அதை இரத்தக்கொதிப்பு என்கிறோம்.
சிலனேரங்களில் இரத்த அழுத்தத்தின் அளவு குறையும் போது
தேவையான இரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் கிடைக்காமல்
மோசமான விளைவுகளை உண்டாக்கும்.
என்வே இரத்த அழுத்தத்தின் அளவு எல்லா  நிலைகளிலும் சீராக இருக்கவேண்டியது அவசியமாகும்.
  இதுபற்றி மீண்டும் நாளை சந்திப்பில் அறிவோம்






No comments:

Post a Comment