Wednesday, December 17, 2025

 


ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமாவளி –219,220,221, &222

ஓம் நமசிவாய:

சிவதாஸன் ஜகன்நாதன்  

புதன் கிழமை,17, டிஸம்பர், 2025   

அனைவருக்கும் வணக்கம்.

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்.                                                           நாம் தற்பொழுது    அம்பாளின் சகுண வடிவங்கள் பற்றி, பார்த்து வருகின்றோம்..இதுவரை அம்பாளை மனதாலும் ஞானத்தாலும் எண்ணி வணங்கியது நிறைவடைந்து இப்பொழுது அம்பாளின் சகுண வடிவ குணங்களைப் பார்த்து வருகிறோம்.

                                                                                                                                                                                இன்றும் அம்பாளின் ஐம்பதாவது ஐந்தாவது ஸ்லோகத்திலிருந்து 219 220,221 மற்றும் 222,ஆகிய  நான்கு நாமாவளிகளையும் பார்ப்போம். இவைகள் அம்பாளின் சகுண வடிவங்களைப் பற்றியும் அவைகளின் குணாதிசயங்களைப்ப ற்றியும் விளக்கிகின்றன.

219.மஹா-போகா

மஹா-====== பெரும்

போகா ===== செல்வமாகத்திகழ்பவள்

போகங்கள் என்பன செல்வச் செழிப்பினால் உண்டாகுபவை, போகங்கள் அனுபவித்து மகிழத்தக்கவை.

அவள் அளவிட முடியாத மகிழ்ச்சியின் உருவகம். இந்தப் பிரபஞ்சத்தில் நிலவும் அனைத்தும் அவளுக்குச் செல்வம்தான், ஏனெனில் அவள் பிரபஞ்சத்தையே ஆள்கிறாள். தனது பக்தர்களும் இவ் இக உலகில் வளமாக வாழவேண்டிய செல்வங்களை அம்பாள் அளித்து போக வாழ்வுக்கு அருள்கிறாள்.


 

220.மஹாய்ஷ்வர்யா

மஹா ======= பெரும்

ய்ஷ்வர்யா======== வளங்களும்,செல்வங்களும்

அவள் பிரபஞ்சத்தின் வெளிப்பாடான பிரம்மத்தின் எங்கும் நிறைந்த பண்பை சித்தரிக்கிறாள். இது பிரம்மத்தின் இயல்பான உயர்ந்த மகிமையான விபூதி என்று அழைக்கப்படுகிறது. அவள் சிவனின் ஸ்வதந்த்ரிய சக்தி (சுயாட்சி சக்தி, முழுமையான சுதந்திரம், விமர்சன சக்தி) மற்றும் அவள் இந்த சக்தியின் மூலம் பிரபஞ்சத்தை வெளிப்படுத்துகிறாள்.

ஈஸ்வர்ரின் விரிந்து கிடக்கும் ஸக்தி விபூதியாகும்.அதன் சிறு சிரு அம்சத்தைத் தனித்துக்காண்முடியும்.அரசனின் ஆளுமை,குருவின் போதனை,மலையின் திட்பம், பூமியின் பொறுமை,கர்ணனின் கொடை,ஹரிச்சந்திரனின் வாய்மை,பெண்ணின் அழகு,சிசுவின் பேதமை,மற்றும் பூவின் மணம் இவை ஒவ்வொன்றுமே ஈஸ்வரனின் விபூதி துகள்களே.

ஸ்வர்யா என்றால் செல்வம், அவளுடைய அருளின் வடிவிலான செல்வம்.


 

221.மஹா-வீர்யா

மஹா-======= பெரும்

வீர்யா ===== வீரம் மிகுந்தவள்

அம்பாளின் அவதாரமே பண்டாசுரனை போரில் வெற்றி கொள்வதற்கே.பண்டாசுர யுத்த்த்தில் அம்பாளின் வீரத்தையும் அம்பாளின் படைகளின் தைர்யத்தையும் பெருமைகளையும் பார்த்தோம்.

வீர்யா என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன. பொதுவாக இது தைரியம், சக்தி, பளபளப்பு, கண்ணியம், ஆற்றல் போன்றவற்றைக் குறிக்கிறது. அவளே இந்த எல்லா குணங்களுக்கும் ஆதாரம், அவள் தன் பக்தர்களின் பக்தியின் ஆழத்தைப் பொறுத்து இந்த குணங்களை வழங்குகிறாள்.

வீரம் மிகுந்த அம்பாள் தன் பக்தர் களுக்கு தேவையான பொழுத வீரத்தின் அனைத்து குணங்களையும் வழங்குகிறாள்


 

222.மஹா-பலா  

மஹா-======== மாபெரும்

பலா  ========= பலம், வலிமை

பலா என்றால் வலிமை என்று பொருள். அவள் வல்லமை மிக்கவள், பிரம்மத்தின் குணம். ஆனால் 219 ஆம் நாமத்தில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தின் அடிப்படையில், அவளுடைய சிந்தனை மட்டுமே ஆறுதல், செல்வம், தைரியம் போன்றவற்றைத் தருகிறது. அதனை நாம் அம்பாளை நிர்குண ரூபியாக வணங்கும்போது கொள்ளவேண்டும்

இந்த நாமங்கள் மூலம் பிரம்மத்தின் குணங்களை வாக்தேவிகள் விவரிக்கிறார்கள். பிரம்மம் இரண்டு விதமாக விளக்கப்படுகிறது. ஒன்று, இது பிரம்மம் ஸ்தூலமாக இல்லை அல்லது அது பிரம்மம் இல்லை என்று மறுப்பதன் மூலம் கூறுவது. மற்றொன்று, தைரியம், மங்களம், புத்தி, மகிழ்ச்சி போன்ற சில பண்புகளை உறுதிப்படுத்துவதன் மூலம் சகுண ரூபியாக அம்பாளை விளக்குவது;

ஆனால் உண்மையில், பிரம்மம் என்பது ஒன்றுமில்லாததிலிருந்து உணரப்பட வேண்டும்.

இத்துடன்இன்றையபதிவினைநிறைவுசெய்கிறேன் .                       நாளை ஐம்பத்து ஐந்தாவது ஸ்லோகத்தில் வரும்  223நாமாவளியிலிருந்து அம்பாளின் சகுண ரூப வழிபாட்டையும் அம்பாளை சகுணஸ்வரூபியாக வழிபடுவதன் பலன்களையும் அது தொடர்பான விளக்கங்களையுமான் பகுதியில்   பார்ப்போம்.

இந்த பதிவுகள் அனைத்தையும் இதனுடனே ஒலி வடிவமாவும் தினம் மேலும் விளக்கமாகத் தந்து வருகிறேன்அவசியம் அதையும் கேட்டு அம்பாளின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்.

ஓம் நமசிவாய:

சிவதாஸன் ஜகன்நாதன்  

புதன் கிழமை,17, டிஸம்பர், 2025   

நன்றி .வணக்கம்


No comments:

Post a Comment