Sunday, August 31, 2025

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமாவளி 7

சிவதாஸன் ஜகன்நாதன்  

ஓம் நம்சிவாய

ஞாயி0ற்றுக்கிழமை, 31, ஆகஸ்ட்,2025      

அனைவருக்கும் வணக்கம். இன்று நாம் அம்பாளின் இரண்டாவது ஸ்லோகத்தின் இரண்டாவது நாம்மான ஏழாவது நாமாவளியின் விளக்கத்தைப்பார்ப்போம்..இந்த நாமம் அம்பாளின் ஸ்தூல ரூப வர்ணனையில் அவளின் நான் கு கரங்களை விளக்குகிறது 

7. சதுர்பாஹு ஸமந்விதா 

சதுர்== நான்கு                                                                                                                                    பாஹூ== கரங்கள்                                                                                                                        ஸமன்விதா == கொண்டிருப்பவள்

லலிதாம்பிகையின் உடல் தோற்றம் இங்கே தொடங்குகிறது. அவளுக்கு நான்கு கைகள் உள்ளன. இந்த நான்கு கரங்களிலும் நான்கு பொருள்கள் உள்ளன .அவைகள் பாஸம், அங்குஸம், கரும்புவில், மற்றும் மலர்க் கணைகள்.

மேலும் இந்த நான்கு கைகளும் அவள் நிர்வகிக்கும் அவளுடைய அமைச்சர்களைக் குறிக்கின்றன. அவர்கள் அவளுக்கு உதவி செய்யும் இந்த தேவதைகள் அடுத்த நான்கு நாமங்களில் விவரிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாளின் இட்து மேற்கையில் பாஸம் என்னும் கயிற்றைத்தாங்கியுள்ளாள்.நாம் முன்னமே சொன்னதுபோல இந்த பாஸக்கயிறு ஆத்மாக்களின் அபிலாக்ஷைகளை கட்டுகின்றது தேவி அஸ்வாரூடா இங்கு அம்பாளுக்கு பணிசெய்கிறாள்

அடுத்து வலது மேல் கையில் அங்குசத்தைத் தாங்கியுள்ளாள். தேவி சம்பத்கரி இங்கு அம்பாளுக்காக பணி புரிகிறாள்

தன்னுடைய இட்து கீழ்க் கையில் அம்பாள் கரும்பு வில்லை கொண்டுள்ளாள். தேவி மந்த்ரிணி இங்கிருந்து அம்பாளுக்கு பணி புரிகிறாள்.

தன்னுடைய வலது கீழ்க் கையில்  அம்பாள் ஐந்து மலர்க் கணைகாளான அம்புகளைத்தாங்கியுள்ளாள். இங்கு தேவி வராஹி அம்மன் அம்பாளுக்குப் பணிபுரிகின்றாள்

அம்பாள் 1.அஸ்வாருதா,2. சம்பத்கரி அல்லது காளி, 3.மந்த்ரிணி, மற்றும் 4.வராஹி.இவர்களின் மூலமாகவே தநது காரியங்களை செய்லாற்றுகிறாள்.

அடுத்து வரும் நாமாவளிகளில் இவை ஒவ்வொன்றையும் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

இத்துடன் இன்றைய பதிவை நிறைவு செய்கிறேன் .நாளை எட்டாவது நாமாவளியின் விளக்கமோடு சந்திப்போம். இந்தப் பதிவின் விளக்கத்தினை எனது குரல் வடிவிலும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேர்ருட்கருணைக்குப் பாத்திரமாகுங்கள் 


நன்றி. வணக்கம்.

சிவதாஸன் ஜகன்நாதன்

ஓம் நமசிவாய:

ஓம் நம்சிவாய

ஞாயி0ற்றுக்கிழமை, 31, ஆகஸ்ட்,2025      


No comments:

Post a Comment