ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்—3
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
அனைவருக்கும்
வனக்கம்,
இன்று நமது
ல்லிதா சஹஸ்ர நாம மூன்றாவது பதிவில் முதலாவது ஸ்லோகத்தையும், அதன் விளக்கத்தையும் பார்ப்போம்
ல்லிதா சஹஸ்ர
நாமத்தின் முதல் ஸ்லோகத்தில் 5 நாமங்கள் வருகின்றன.இன்று முதல் ஸ்லோகத்தின் விளக்கம்
பார்ப்போம்
1) ஸ்ரீ மாதா, ஸ்ரீ மஹாராஜ்ஞீ, ஸ்ரீமத்-ஸிம்ஹாஸனேஸ்வரீ |
சிதக்னி குண்டஸம்பூதா, தேவகார்ய ஸமுத்யதா || 1 ||
ஸ்ரீ மாதா |
உலகின்
அனைத்திற்கும் தாயானவள் |
ஸ்ரீ மஹா |
பெருமைக்குரிய
அளப்பிடதர்க்கரிய |
ராஜ்ஞீ |
ப்ரபஞ்சத்தை ஆளும் பேரரசி |
ஸ்ரீமத் |
பெருமைக்குரிய |
ஸிம்ஹ |
சிம்மம் |
ஆஸன |
பீடம் இருக்கை |
ஈஸ்வரி |
இறைவி |
சித் |
சித் என்ற அறிவு,ஆன்மா |
அக்னிகுண்ட |
அக்நியிலான ஹோம
குண்டம் |
ஸம்பூதா |
தோண்றியவள் |
தேவகார்ய |
தேவர்களின்
செயல்களுக்காக |
சமுத்யதா |
ஈடுபடுதல் வழங்குதல் |
சர்வோத்தமான ஜகன் மாதா, சகல ப்ரபஞ்சங்களையும் பரிபாலம் செய்பவள்,சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவள்,சித்என்றஅறிவாகிய ஹோம குண்டத்திலிருந்து உதித்தவள்,தேவர்களின் காரியங்களை செய்வதில் ஊக்கமுடையவள்.தர்மத்தின் அடிப்படையில் அமைந்த நேர்மைக்கும் நீதிக்கும் உட்பட்ட காரியங்களுக்கு
துணை நிற்பவள்
இந்த முதல் ஸ்லோகம் அம்பாளின் உதயம் என்னும் முதல்
பகுதியில் ஆரம்பிக்கின்றது.இந்த முதல் ஸ்லோகத்தில் ஐந்து நாமங்கள் உள்ளன.
நாளை முதல் தினம் ஒரு நாமமாக இந்த ஐந்து நாமங்களின்
விளக்கங்களையும் பார்ப்போம்.
இந்தப் பதிவினை எனது VOICE ஆகவும் தந்துள்ளேன்
.கேட்டு உணர்ந்து மகிழ்ந்து அம்பாளின் பேர்ருட் கருட்கருனைக்கு பாத்திரமாகுங்கள்
நாளை மீண்டும் சந்திப்போம்
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
2025-08-23
No comments:
Post a Comment