ஸ்ரீலலிதா சஹஸ்ரனாமம் விளக்கம்
--- 5
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.இன்று நாம் ல்லிதா சஹஸ்ரனாமத்தின்
இரண்டாவது நாமாவளின் விளக்கத்தினைப் பார்ப்போம்
சிவதாஸன் ஜகன்நாதன்
ஓம் நம்சிவாய
26,ஆகஸ்ட்,2025
2. ஶ்ரீமஹாராஜ்ஞி
இந்த இரண்டாவது நாமமும் ஸ்ரீ என்று தொடங்குகிறது. மகாராஜ்ஞி என்றால் ராணிகளின் ராணி, பேரரசி என்று பொருள்.
முதல் நாமம் அவளுடைய படைப்பு சக்தியைப் பற்றிப் பேசுகிறது, இரண்டாவது நாமம் அவளுடைய வாழ்வாதார சக்தியைப் பற்றிப் பேசுகிறது.
ஒரு தாயாக அவள் படைக்கிறாள், உச்ச ராணியாக, அவள் பிரபஞ்சத்தை நிலைநிறுத்துகிறாள்.
அன்னை மஹாராணியாக உந்த உலகை ஆளுகின்றம் பாங்கினால் தாயாக படைத்துக் காக்கும் அவளே முறை தவராத பேர ரசியாக இந்த ப்ரபஞ்சத்தை ஆள்கிறாள்.தவறுசெய்பவர்களையும் அம்பாள் தண்டிக்கிறாள்.அது அவர்களை திருத்துவதற்கே ஆகும்.
கருணையே உருவான கடவுள்களின் கரங்களிலே உள்ள ஆயுதங்கள் அடியவர்களை தீயவர்களிடமிருந்து
காத்து தீயவர்களை திருத்தி நல்வழிப்படுத்துவதற்கேயாகும்.
அம்பாளின் அவதாரமே மூவுலகங்களையும் பண்டாசுரன் என்ற அசுரனிடமிருந்து
காப்பதற்கேயாகும்.
ஸ்ரீ மஹாராஜ்ஞியாக அம்பாள் ஸ்ரீபுரத்திலிருந்து ஐந்து
தேவர்களான ப்ரம்மா,மஹாவிஷ்ணு,ருத்ரர்,மஹாதேவர் மற்றும் சதாசிவர் மூலமாக படைத்தல்,காத்தல்,தீயவைகளை அழித்தல்,மறைத்தல் ம்றறும் அருளல் என்ற ஐந்து தொழில்களையும்
தன் மேற்பார்வையிலே இயக்குகிறாள்.
இந்த ப்ரபஞ்சத்தின் செயல்பாடுகள் அனைத்திற்குமே மஹா சக்தியா அன்னையே விளங்குவதனால்
ஸ்ரீ லலிதாம்பிகையே ந்த ப்பஞ்சத்தின் மஹாராணியாக விளங்கிகிறாள்
மேலும் இந்த நாமமும் ஸ்ரீ என்று தொடங்குகிறது. மகாராஜ்ஞி என்றால் ராணிகளின் ராணி, பேரரசி என்ற பொருளாகும்
இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன்.நாளை மீண்டும் மூன்றாவது நாமாவளியின் மோடு சந்திப்போம் .இந்தப் பதிவின் விளக்கத்தினை என்னுடய voice மூலமாகவும் தன்டுள்ளேன்.கேட்டு மகிழுங்கள்.
அனைவருக்கம் ஸ்ரீ ல்லிம்பிகையின் பேர்ருளும்,பரமேஸ்வர்ரின் அருட் கருணையும் குறைவிலாது கிடைக்க வேணெ வாழ்த்தி இன்றைய பதிவினை நிறைவு செய்கிறேன்
சிவதாஸன் ஜகன்நாதன்
ஓம் நம்சிவாய
26,ஆகஸ்ட்,2025
sree matre namaha
ReplyDelete