Wednesday, January 11, 2023

 


சிவதாஸன் ஜகன்நாதனின் 

சர்வேஸ்வரரின் திருப்பள்ளி எழுச்சி  16--20

சர்வேஸ்வரர் திருப்பள்ளி எழுச்சியில்

இன்று 16 முதல் 1529 ஆவது பாடல் வரை

தந்துள்ளேன் படித்து மகிழ்ந்து ஈஸனருள்

பெற்றுய்யுங்கள்


தில்   யிலே சிவகாமியோடு நடமாடிய நடேசனே                                                                                       வல்லபுகழ் மதுரையிலே மீனாக்ஷியை மணந்த சொக்கனே                                                 நல்ல திருவருணையிலே அடிமுடிகாட்டா நின்ற அருணனே                         பல்லாயிரம்பேர் கூடினரே ரமனே பள்ளி எழுந்தருளாயே      16

உறங்கும்பொழுதும் உறங்கி எழும் பொழுதும் தினமும்                                                             மறவாதுனை எண்ணுவோமே மாத்திரையும் எம்மனத்தகலா                                              மறையோனே மஹேஸ்வரனே மாலயன் தொழும் இளம்                                                               பிறை முடியணிந்தோனே பரமனே பள்ளி எழுந்தருளாயே            17

ஊழிப்ரளயத்தில் உமையோடு தாண்டவமாடினாய்                                                              ஆழிசூழ் அகிலமெல்லாம் அளவிலா அன்போடு புரந்தாய்                                 ஏழிசைகேட்டு இலங்கைஅரயனுக்கருளினாய் இன்றிங்கு     தாழடிதொழுவோமே பரமனே பள்ளி எழுந்தருளாயே      18

காலங்கள் எதுவாயினும்  உன்னடி தொழவிழைந்தோமே                                                                    ஞாலம் முழுதும்  உன்திசைகள் நோக்கித்தொழுவேமே                                 மாலயனும் முத்தேவியருமுனைத் தொழுதனரே                                                          காலகாலனே  திருவடிதொழ பரமனே பள்ளி எழுந்தருளாயே   19

இளமதியும் ஓங்காரமிடும் கங்கையும் முடி கொண்டாய்                                        ஆலஹாலம் உண்டு உன் கண்டம் கருக்கவைத்தாய்                                இளம்புலியின் உரிவை இடையில் என்றும்அணிந்தாய்                                             அளவிலா அன்போடுதொழ பரமனே பள்ளி எழுந்தருளாயே               


No comments:

Post a Comment