Tuesday, January 10, 2023

 சிவதாஸன் ஜகன்நாதனின் 

சர்வேஸ்வரரின் திருப்பள்ளி எழுச்சி

சர்வேஸ்வரர் திருப்பள்ளி எழுச்சியில்

இன்று 10 முதல் 15 ஆவது பாடல் வரை

தந்துள்ளேன் படித்து மகிழ்ந்து ஈஸனருள்

பெற்றுய்யுங்கள்

நெஞ்சமெல்லாம் நிறைந்தவனே நடன சபேசனே                             கொஞ்சுமொழியாளை வாமபாகத்தில் கொண்டவனே                                         விஞ்சுஎழில் மிகு வீர சிவனே தஞ்சமென்றோரைக்காக்கும்                                  பிஞ்சுமதி நுதற்கண்ணனே பரமனே பள்ளி எழுந்தருளாயே   10

  நல்ல நதிஅடைக்க மண்சுமந்து பிரம்படி பட்டாய்                                                            வில்லவனுக்குபாசுபதாஸ்திரமளித்து வில்லடி பட்டாய்                                    வல்ல வேடனுக்கு கண்ணில் குருதி பெருக்கி காலடிபட்டாய்                             எல்லையில்புகழுடை பரமனே பள்ளி எழுந்தருளாயே      11


   கொடுநாகங்கள்  உடல்மீது ஓடக்கொண்ட கயிலாயனே                                        பிடி வெண்ணீறு மேனிமுழுதும்  அணிந்த பரமேசனே                                 கடும்புலியின் உரிவை இடையில் அசைத்த காலகாலனே                                        அடியவர் துயரகற்றும் பரமனே பள்ளி எழுந்தருளாயே 12

     

கால்கால்தூக்கி கண்டேயனுக்காக காலனை உதைத்தவனே                                          வேல்கொண்டவனை ஈன்று  ஞாலத்தைக் காத்தவனே                                         ஆலஹாலத்தை உண்டு அகிலம்காத்த  நீலகண்டனே                                        ஆலயம் தேடி  வந்தோம் பரமனே பள்ளி எழுந்தருளாயே   13   


பெர    பெருவிரி வானமாய்  அனைத்துலகும் தாங்கும் மண்ணாய்                                   மருவி வீசி மகிழ்த்தும் தென்றல் காற்றாய் ஒளிவீசிப்பரவிப்                        பெருகும்நெருப்பாய் தண்ணமுத நந்நீராய் ஐந்து பூதங்களாய்     பரவிநிற்கும் பஞ்சபூதநாதனே பரமனே பள்ளி எழுந்தருளாயே   14


யுகயயுகங்கள்கள் அனைத்தும் நீயேயானாய் ஏகநாதனே                                 ஜெகம் முழுதும் நீயே ஆள்வாய்  ஜகதீஸ்வரனே                                            பவம் முழுதும் நீயேபரந்து  காப்பாய் பரமேஸ்வரனே                                                   தவம் புரிந்துவந்தோம் பரமனே பள்ளி எழுந்தருளாயே  15


ந்ன்ன்  நாளை மீண்டும் சந்திப்போம்

சிவதாஸன் ஜகன்நாதன்

ந்ன்









 

 

நல

No comments:

Post a Comment