Wednesday, October 16, 2024

 


 

அபிராமி அந்தாதி -15

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

புதன், அக்டோபர் 16, 2024

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை பதிநான்கு  பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் பதிநாலாவது பாடலைப் பார்ப்போம்.

நேற்றைய பாடலில் அம்பாளைக் காண்வும் அருளைப் ப்பெறவும் மண்ணின் மாந்தரும்,தேவ்ர்களும் அசுர ரும்,தெய்வங்களுன் அவ்வாறு காத்திருந்து தரிசித்து அருளைப் பெற்றார்கள் என்பதைப் பார்த்தோம்.

இன்று பதினைந்தாவது பாடலில் அம்பாளின் கருணையினால் மூன்று உலகங்களிலும் சிறப்பான இடம் எப்படிக் கிடைக்கும் என்பதைக் கூறுகின்றார்.

 

தண்ணளிக் கென்று,முன்னே பலகோடி தவங்கள்செய்வார்,       மண்ணளிக் கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம்
விண்ண ளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ?
பண் ணளிக்கும் சொற் பரிமள யாமளைப் பைங்கிளியே.

 

பொருள்:

 தண்ணளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார் உன் குளிர்ச்சியான திருவருள் பெறுவதற்காக பல கோடி தவங்கள் செய்பவர்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் இந்த மண்ணுலகம் கொடுக்கும் செல்வங்களை மட்டுமா பெறுவார்?
மதி வானவர் தம் விண்ணளிக்கும் செல்வமும் சிறந்த வானவர் தம் விண்ணுலகம் தன்னில் வாழ்ந்து அனுபவிக்கும் செல்வமும்
அழியா முக்தி வீடும் அன்றோ என்றும் அழியாத இன்பம் தரும் முக்தி எனும் வீடு பேறும் அன்றோ பெறுவார்.
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே இசையின் பிறப்பிடமாகும் சொற்களைச் சொல்லும், நறுமணம் வீசும், ஈசனின் தோழியான பசுங்கிளியே.

 

விளக்கம்: 

அன்னையே! அபிராமித் தாயே! இசையை எழுப்பக்கூடிய அழகிய இன்சொல் கூறும் எம் பசுங்கிளியே! நின் திருவருள் நாடிப் பலகோடி தவங்களைச் செய்தவர்கள் இவ்வுலகத்தில் கிடைக்கக் கூடிய செல்வங்களை மட்டுமா பெறுவர்? சிறந்த தேவேந்திரன் ஆட்சி செய்யக்கூடிய விண்ணுலக போகத்தையும் பெறுவர். மற்றும், அழியாத முக்திப் பேற்றையும் அடைவார்கள் அல்லவா!

 

இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

புதன், அக்டோபர் 16, 2024

 


No comments:

Post a Comment