அபிராமி
அந்தாதி -13
ஓம்
நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
ஞாயிறு, அக்டோபர் 13, 2024
ஆன்மீக
அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் னமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை
பன்னிரெண்டு பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் பதிமூன்றாவது பாடலைப் பார்ப்போம்.
நேற்றைய
பாடலில் அம்பாளை அவர் மனம் மொழி மெய்களால் வணங்கும் விதத்தைச் சொல்லி தான் இப்பிறவியில்
இவ்வாறு அம்பாளை வங்குவதற்க் நான் முற்பிறவியில் என்ன தவம் செய்தேனோ என் வினவினார்
இன்று
இந்த பூவுலகங்கள் அனைத்துஇயும் படைத்துக் காத்து ம்றைக்கும் தோழிலைச் செய்யும் அம்பாளை
,மூன்று தேவர்களுக்கும் முதன்மையானவளை அன்றி மற்றொரு தெய்வத்தை வணங்குவேனோ என் வினவுகிறார்.
பூத்தவளே, புவனம்
பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே
பின்கரந்தவளே, கறைக் கண்டனுக்கு
மூத்தவளே, என்றும்மூவா
முகுந்தற் கிளையவளே,
மாத்தவளே, உன்னை
அன்றிமற் றோர்தெய்வம் வந்திப்பதே?
பொருள்:
பூத்தவளே
புவனம்
பதினான்கையும் – பதினான்கு உலகங்களையும் பெற்றவளே
பூத்தவண்ணம்
காத்தவளே – எப்படி அவற்றைக் கருணையுடன் பெற்றாயோ அதே போல் காப்பவளே
பின்
கரந்தவளே – பின் அவற்றை உன்னுள் மறைத்துக் கொள்பவளே
கறைகண்டனுக்கு
மூத்தவளே – பாற்கடலைக் கடைந்த போது எழுந்த ஆலகால விஷத்தை உண்டதால் கறை கொண்ட கழுத்தினை உடைய சிவபெருமானுக்கும் மூத்தவளே
என்றும்
மூவா
முகுந்தற்கு
இளையவளே – என்றைக்கும் முதுமையடையாமல் இளமையாகவே இருக்கும் முகுந்தனுக்கும்
இளையவளே
மாத்தவளே –
மாபெரும் தவம் உடையவளே
உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே – உன்னையன்றி மற்றோர் தெய்வத்தை நான் வணங்குவேனா?
உரை
உலகம்
பதினான்ங்கையும் திருவருளால் ஈன்றோய், அவ்வாறு அருள் கொண்டு ஈன்றது போலவே அவற்றைப் பாதுகாத்தோய், பின்னர் அவற்றைச்
சங்காரம் செய்வோய், விடத்தையுடைய
நீலகண்டப் பெருமானுக்கு முன் பிறந்தோய், மூப்பை அடையாத திருமாலுக்குத் தங்கையே, பெரிய தவத்தையுடையவளே, அடியேன் உன்னையே தெய்வமாக வழிபடுவதன்றி வேறு ஒரு தெய்வத்தை வழிபடுவது
ஆகுமா?
விளக்கம்:
உலகம் பதினான்கையும் பெற்றவளே! எப்படிப் பெற்றாயோ, அப்படியே உலகத்தைக் காப்பவளே! பின்பு ஏதோ ஒரு காரணம் கருதி, உலகத்தை உன்னில் அடக்கிக் கொண்டவளே! கறைக் கண்டனுக்கு (ஆலகால விஷத்தை உண்டதால் கறை எனப்பட்டது) மூத்தவளே! (ஆதி சக்தியிலிருந்தே சிவன், பிரம்மா, விஷ்ணு முதலானோர் தோன்றினார்கள் என்பது வரலாறு) என்றும் சீர் இளமை பொருந்திய திருமாலுக்குத் தங்கையே! அருந்தவத்தின் தலைவியே! அபிராமி அன்னையே! உன்னையன்றி மற்றொரு தெய்வத்தை வணங்கேன்.
இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன்
.நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன்
அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும்
பாத்திரமாகுங்கள்
ஓம்
நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
ஞாயிறு, அக்டோபர் 13, 2024
No comments:
Post a Comment