ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 06 2024
அடியேனின்
சொந்த அலுவல்களினால் நான் இந்தியாவில் இருந்த போது சிலநாட்களாக நமது பதிவினை தொடர முடியாமல்
போனதற்கு வருந்துகிறேன் .மீண்டும் இன்றுமுதல் நமது அப்ராமி அந்தாதிப் பதிவுகளைத் தொடர்வோம்
நாம்
முன்னதாக ஒன்பதாவது வது பதிவில் அபிராமிப் பட்டர் அழகே வடிவான அம்பாள் ப்ரபஞ்சம் முழுவதிற்கும் தாயாகி அருள்பவளும்
எல்லோருக்கும் பாலூட்டும் தாயாய் அழகிய ஸ்தனங்களையும் கைகளில் வில்லும் அம்பும்
கொண்டு ஈஸ்வரரின் கண்ணிலும் கருத்திலும் உறையும் புன்னகை திகழும் வதனமும் கொண்ட
தாய் எனக்கு காக்ஷி தரவேண்டும் என விழைவதைக் கண்டோம்.
இன்று
பத்தாவது பாடலில் அம்மையின் பெருமைகளை விவரித்து பின் தான் எந்த நிலையிலும் நினைப்பது
உன்னை மட்டுமே என்று பாடுகிறார்.
நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்ப துன்னை,
என்றும் வணங்குவ
துன்மலர்த் தாள், எழு தாமறையின்
ஒன்றும்
அரும்பொருளே, அருளே உமையே
இமயத்
தன்றும்
பிறந்தவளே, அழியாமுத்தி
ஆனந்தமே.
நின்றும், இருந்தும் |
நான் நிற்கும் போதும் அமரும் போதும் |
கிடந்தும், நடந்தும் |
கிடக்கும் போதும் நடக்கும் போதும் எந்த நிலையில்
இருந்தாலும் |
நினைப்ப துன்னை |
நினைப்பது உன்னையே. |
என்றும் வணங்குவ து |
நான் என்றும் வணங்குவதும் |
உன்மலர்த் தாள் |
உன் மலர்த்தாள்களையே |
எழு தாமறையின் |
யாராலும் எழுதப்படாமல் உணர்வால் அறியப்பட்ட வேதங்களில் |
ஒன்றும் அரும்பொருளே |
ஒன்றி நிற்கும் அறிதற்கரிய பொருளே |
அருளே உமையே |
அருள் வடிவான உமையே |
இமயத்தன்றும் பிறந்தவளே |
இமயமலைக்கரசன் மகளாய் அன்று பிறந்தவளே |
அழியாமுத்தி |
என்றும் அழியாத முக்தி |
ஆனந்தமே. |
ஆனந்தமாக விளங்குபவளே |
பொருள்: நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்
நினைப்பது உன்னை – நான் நிற்கும் போதும் அமரும் போதும்
கிடக்கும் போதும் நடக்கும் போதும் எந்த நிலையில் இருந்தாலும் நினைப்பது உன்னையே.
என்றும்
வணங்குவது உன் மலர்த் தாள் – நான் என்றும் வணங்குவதும் உன்
மலர்த்தாள்களையே
எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே – யாராலும் எழுதப்படாமல் உணர்வால்
அறியப்பட்ட வேதங்களில் ஒன்றி நிற்கும் அறிதற்கரிய பொருளே
அருளே உமையே – அருள் வடிவான உமையே
இமயத்து
அன்றும் பிறந்தவளே – இமயமலைக்கரசன் மகளாய் அன்று பிறந்தவளே
அழியா முத்தி
ஆனந்தமே – என்றும் அழியாத முக்தி ஆனந்தமாக
விளங்குபவளே
எழுதாமல் கேட்கப்படுகின்ற வேதத்திற்
பொருந்தும் அரிய பொருளாயுள்ளாய், சிவபிரானது திருவருள் வடிவே, உமாதேவியே, அன்று இமாசலத்தில் அவதரித்தாய், அழியாத முத்தியின்பமாக உள்ளாய், அடியேன் நின்றபடியும் இருந்தபடியும்
படுத்தபடியும் நடந்தபடியும் தியானம் செய்வது உன்னையே;
விளக்கம்: அறிதற்கரிய பொருளே! அருளே உருவான உமையே! அக்காலத்தில் இமயமலையில் பிறந்தவளே! என்றும் அழியாத முக்தி ஆனந்தமாக விளங்குபவளே! உணர்தற்கரிய பெருமை வாய்ந்த வேதப் பொருளில் ஒன்றிய பொருளே! நான் நின்றாலும், இருந்தாலும், கிடந்தாலும், எந்நிலையில் இருப்பினும் நின்னையே நினைத்து
தியானிக்கின்றேன். நான் வணங்குவதும் நின் மலர் போன்ற பாதங்களையே யாகும்.
இத்துடன் இன்றைய பதிவை நிறைவு
செய்கிறேன்.நாளை மீண்டும் சந்திப்போம்.இந்த பதிவினை குரல் விளக்கமாகவும் தந்துள்ளேன்.கேட்டு
மகிழுங்கள்
ஓம் நமசிவாய:
ஸிவதாஸன் ஜகன்நாதன்
No comments:
Post a Comment