அபிராமி அந்தாதி -11
ஓம் நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
திங்கள் அக்டோபர்
07, 2024
ஆன்மீக
அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் னமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை
பத்து பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் பத்னொன்றாவது பாடலை பாஅர்ப்போம்.
ஆனந்தமாய்,என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான
வடிவுடையாள், மறை நான்
கினுக்கும்
தானந்தமான சரணார
விந்தம் தவளநிறக்
கானந்தம்
ஆடரங்காம் எம்பிரான் முடிக் கண்ணியதே.
ஆனந்தமாய், |
எனக்கு இயற்கையாய் அமைந்த இன்பமாய் |
என் அறிவாய், |
உன் அருளால் எனக்குக் கிடைத்த நல்லறிவாய் |
நிறைந்தஅமுதமுமாய், |
அந்த இன்பத்திற்கும் நல்லறிவுக்கும் காரணமாய்
என்னுள் நிறைந்த அமுதமுமாய் |
வான் அந்தமான |
மண், நீர், நெருப்பு, காற்று, வான் என்று வானைக் கடைசியாய்க் கொண்டுள்ள
ஐம்பூதங்களின் |
வடிவுடையாள் |
வடிவானவளே |
மறை நான் கினுக்கும் |
வேதம் நான்கினுக்கும் |
தானந்தமான |
நான்கினுக்கும் முடிவாய் விளங்குவது |
சரணார விந்தம் |
உன்
தாமரைத் தாள்கள் |
தவளநிறக் கானந் |
– சாம்பல் நிரம்பி அதனால் வெண்மை நிறம் கொண்ட
காட்டைத் |
தம் ஆடரங்காம் |
தன் திருநடனத்திற்கு அரங்கமாய்க் கொண்ட |
எம்பிரான் முடிக் |
என் தலைவனாம் ஈசன் முடிமேல் |
கண்ணியதே |
அணியும் மாலைகளாகும். |
பொருள்: ஆனந்தமாய் – எனக்கு இயற்கையாய் அமைந்த இன்பமாய்
என் அறிவாய் – உன் அருளால் எனக்குக் கிடைத்த
நல்லறிவாய்
நிறைந்த அமுதமுமாய் – அந்த இன்பத்திற்கும் நல்லறிவுக்கும்
காரணமாய் என்னுள் நிறைந்த அமுதமுமாய்
வான் அந்தமான வடிவுடையாள் – மண், நீர், நெருப்பு, காற்று, வான் என்று வானைக் கடைசியாய்க்
கொண்டுள்ள ஐம்பூதங்களின் வடிவானவளே.மறை
நான்கினுக்கும் தான் அந்தமான சரண அரவிந்தம் – வேதம் நான்கினுக்கும் முடிவாய்
விளங்குவது உன் தாமரைத் தாள்கள்
தவள நிறக் கானம் – சாம்பல் நிரம்பி அதனால் வெண்மை நிறம்
கொண்ட காட்டைத்
தம் ஆடரங்காம் – தன் திருநடனத்திற்கு அரங்கமாய்க் கொண்ட
எம்பிரான் முடிக் கண்ணியதே – என் தலைவனாம் ஈசன் முடிமேல் அணியும்
மாலைகளாகும்.
(உரை): ஆனந்த உருவமே தானாகி என் அறிவாகி நிரம்பிய அமுதம்
போன்றவளாகி ஆகாசம் ஈறான பஞ்ச பூதங்களும் தன் வடிவாகப் பெற்ற தேவியினது, நான்கு வேதங்களுக்கும்
முடிவாக நிற்கும் திருவடித்தாமரையானது,
வெண்ணிறத்தையுடைய மயானத்தைத் தம்முடைய ஆடும் இடமாக உடைய
எம்பெருமானாகிய சிவபெருமானது திருமுடி மாலையாக உள்ளது.
விளக்கம்: அபிராமித்தாய் என் ஆனந்தமாகவும், என் அறிவாகவும்
விளங்குகின்றாள். என் வாழ்வில் அமுதமாக நிறைந்திருக்கின்றாள். அவள் ஆகாயத்தில் தொடங்கி மண், நீர், நெருப்பு, காற்று என்ற ஐம்பெரும்
வடிவுடையவள். வேதம் நான்கினுக்கும் தானே தொடக்கமாகவும், முடிவாகவும் இருப்பவள். இப்படிப்பட்ட தாயின்
திருவடித் தாமரைகள், திருவெண் காட்டில் திருநடனம் புரியும் எம்பிரான் ஈசன்
முடிமேல் தலைமாலையாகத் திகழ்வன.
இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன்
.நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன்
அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும்
பாத்திரமாகுங்கள்
ஓம் நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
திங்கள் அக்டோபர்
07, 2024
No comments:
Post a Comment